Thursday, July 14, 2016

ஒரே தீ தானே...எரியட்டும்



ஆலய‌ தீபத்தில் எரிவதும் தீ தான், குடிசையினை எரிப்பதும் தீ தான் இரண்டும் ஒன்றாகுமா அங்கிள்?

எதனை அணையவிடாமல் பார்ப்பீர்கள்? எதனை அவசராமக அணைப்பீர்கள்

கபாலீஸ்வரர் கோயில் விளக்கில் எரியும் ஜோதியினை உங்கள் கட்சி அலுவலக கூரையில் ஏற்றி இரண்டும் ஜோதிதான், வெளிச்சம்தான் என்றால் ஒப்புகொள்ளவேண்டும் சரியா அங்கிள்? அணைக்க ஓடினால் பிய்த்துவிடுவோம்.

ஒரே தீ தானே...எரியட்டும்

போராட்டம் எது, ஆயுதம் தாங்கிய அதி தீவிரவாதம் எது என்று கூட தெரியாத இவரை எல்லாம் என்ன சொல்வது?

முன்பு ராஜபக்சேவினை ஹிட்லர் என்றான், பின் ஹிட்லரை வழிகாட்டி என்றான். அதாவது இவனுக்கு ராஜபக்சேவும் வழிகாட்டி

இன்று காந்தியும் தீவிரவாதி என்கிறான், அப்படியானால் கோட்சே யார் என்று கேளுங்கள், அவனும் தீவிரவாதி என்பார்.

இன்னும் புத்தனும், இயேசுவும், நபிபெருமானும் , அய்யா வைகுண்டரும், நாராயணகுருவும் தான் பாக்கி, அவர்களை எல்லாம் என்று தீவிரவாதிகள் என சொல்லபோகின்றாரோ?

Stanley Rajan's photo.

பெரும்பாலான காஷ்மீரிகளின் கனவு நாயகன் அயத்துல்லா கோமேனி, அவர்கள் வீட்டுபடங்களை அவர்தான் அலங்கரிப்பார். அமெரிக்காவிற்கு இறுதிவரை சிம்ம சொப்பணமாக இருந்தவர் அவர், அவரை பற்றி ஏதும் சொன்னானா என்றால் சொல்லமாட்டார், அவரை போல புரட்சி செய்யுங்கள் என சொல்வானா நிச்சயம் மாட்டான்.

காரணம் அது வேறுமாதிரி சிக்கலை கொண்டுவரும் என்பது அங்கிளுக்கு தெரியும். தொலைத்துவிடுவார்கள்

இப்பொழுதெல்லாம் அமெரிக்கா காஷ்மீரிலிருந்து விலகுகின்றது, முன்பெல்லாம் அதில் மூன்றாம்நாடு தலையிடவேண்டும் என சொன்ன அது, இப்பொழுதெல்லாம் அது இந்திய உள்நாட்டு பிரச்சினை என ஒதுங்குகின்றது.

அந்த அமெரிக்காவின் அறிக்கை கண்டித்து எவனாவது பேசுவானா என்றால் பேசமாட்டான், காஷ்மீர் இந்தியாவின் பகுதி என அமெரிக்கா எப்படி ஒப்புகொள்ளலாம் என ஒரு சத்தம் வந்திருக்கும்? நிச்சயம் வராது

ஒருவன் ஏன் இந்தியா காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தவில்லை என குதிக்கின்றான். அடேய் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானிடம் உண்டு, இன்னொருபகுதி சீனாவிடம் உண்டு அவர்களும் வரவேண்டும் வாக்குபதிவு நடத்த, ஆனால் பாகிஸ்தான் வராது ஏன்?

பிரிவினையின்போது குஜராத்தின் ஜுனாகத் இஸ்லாமிய மக்கள் நிறைந்தது, இந்தியாவா பாகிஸ்தானா என வாக்கெடுப்பு நடந்தபோது அம்மக்கள் இந்தியா பக்கமே நின்றனர், அன்று ஓடிய பாகிஸ்தான் ஒருகாலமும் வாக்கெடுப்பிற்கு வராது

இன்றைய பாகிஸ்தானில் ஒரு வாக்கெடுப்பு நடத்த சொல்லுங்கள், எத்தனை மாநிலங்கள் அத்துகொண்டு ஓடும் என தெரியும், பலுசிஸ்தான், வர்சிஸ்தான் உட்பட‌

ஆக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் , சீன அக்சாய் சின் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தாமல் (நடத்தி பாருங்கள், தேர்தலே வேண்டாம் என இந்தியாவிற்குள் வந்துவிடுவார்கள்) இந்திய பகுதியில் மட்டும் நடத்து என்றால் எப்படி?

அதாவது அங்கிளுக்கு வெளியே ஆயிரம் சிக்கல், உள்ளே போய் இருந்தால் ஏதாவது சீன் காட்டலாம், ஆனால் பரிதாபம் யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை, அந்த கோபத்தில் ஏதோ பிணற்றிகொண்டிருப்பார். ஈழபிசினசும் தேர்தலுக்கு பின் காற்றுவாங்கிவிட்டது, 6 பாதுகாவலர் கூட சொல்லாமல் ஓடிவிட்டார்கள்.

இவருக்கு பிடித்திருப்பது ஒருவகை வியாதி, மருந்தில்லை என்ன செய்யலாம்?

இந்தோணேசிய தீவுகளில் கொண்டுவிட்டு, இதுதான் உன் அண்ணன் பூமி , சிங்களனும் இந்தியாவும் எல்லாரையும் அழித்தாகிவிட்டது, இனி நீனே ஆண்டுகொள் என விட்டுவிடலாம்.

வெற்றி வெற்றி இனவிடுதலை, புரட்சி வென்றது என ஓலமிட்டு ஆளில்லா காட்டிற்குள் பேசிகொண்டே இருப்பார். அவருக்கென்ன பேசவேண்டும், ஏதாவது சம்பந்தமில்லாமல் பேசிகொண்டே இருக்கவேண்டும்

அதுதான் அவர் பாஷையில் புரட்சி.

விரைவில் சுவாதிக்கு வீரவணக்கம் செலுத்தி, ராம்குமாரினை போராளி என்பார் நமது அங்கிள், அதுதான் சீமானிசம்.

சிலுவையில் அறையபட்டவன் எல்லாம் இயேசுவா? சுட்டுகொல்லபட்டவன் எல்லாம் காந்தியா?

என்னைய்யா உன் சித்தாந்தம்?











No comments:

Post a Comment