Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Monday, September 18, 2017

ஒரு தமிழனுக்கு சிங்களன் குரல் கொடுக்கின்றான்




Image may contain: 1 person, smilingஇலங்கையில் தமிழனுக்கு ஒரு அநீதி நடந்திருக்கின்றது, இங்கு தட்டிகேட்பார் யாருமில்லை


அதாவது பந்துவீச்சில் சாதனை படைத்த தமிழன் முத்தையா முரளீதரன். அவர் விளையாண்ட காலம் எல்லாம் அவர் பந்து எதிரிக்கு சிம்ம சொப்பணம். இலங்கைக்கு உலக‌ கோப்பை பெற்று தந்ததில் முரளிதரனின் பங்கு அதிகம்.


இன்றும் அதிக விக்கெட்டுகள் வீசிய சாதனை அவர் வசமே இருக்கின்றது. அவரை முடக்கி ஷேன் வார்ணேயினை உயர்த்திவிடும் எல்லா ஆஸ்திரேலிய திட்டங்களும் தவிடுபொடியாயின‌





இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கிரிக்கெட்டர்களில் முரளிதரனும் ஒருவர் என்பதால் இலங்கை அரசு ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு அவர் பெயரை அமைத்து கவுரவபடுத்தியது.

இப்பொழுது அந்த பெயரை நீக்கிவிட்டார்கள், சர்ச்சை வெடிக்கின்றது, ஆனாலும் வடக்கில் பெரும் சத்தமில்லை, இங்கு அங்கிள் சைமன் சத்தமும் இல்லை

காரணம் வெரி சிம்பிள்

ஒடுக்கபட்ட, தாழ்த்தபட்ட இந்தியா வம்சாவழியான மலையக தமிழரின் வாரிசு முரளிதரன். அதனால்தான் சிங்களன் அவரை கொண்டாடியது போல யாழ்பாணத்தார் கொண்டாடியிருக்க மாட்டார்கள், கவனித்தால் இது புரியும்

முரளிதரன் தமிழர் அல்லவா என கேட்டால் "அவர் எஸ்டேட் தமிழன்" என ஒரு மாதிரி சொல்லிவிட்டு கடந்துவிடுவார்கள்

ஜாதி, வர்க்க பேதம் என ஏராளமான காரணங்கள்

இதுவே யாழ்பாண ஆறுமுக நாவலரின் பெயரினை இலங்கை அரசு நீக்கியிருந்தால் இந்நேரம் யாழ்பாணம் அலறும், இங்கே சீமானும், வேல் முருகனும் கொக்கரிப்பார்கள்.

ஆனால் பெரும் கிரிக்கெட் அடையாளமாயினும் முரளிதரன் தாழ்த்தபட்ட தமிழக வகையறா அல்லவா? அதனால் அங்கு சத்தமே இல்லை

அட அங்குதான் சத்தமில்லை, ஒரு தமிழனுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு இங்கு தமிழரை காக்க வந்த ஈழ கோஷ்டிகளிடமும் சத்தமில்லை

காரணம் ஏன் என்றால் இவர்கள் அப்படித்தான், தங்களுக்கு ஏதும் தேறா இடத்தில் பேசமாட்டார்கள், இன்னொன்று யாழ்பாணத்தார் சொன்னால்தான் இவர்கள் பேசுவார்கள்

முரளிதரனுக்காக யாழ்பாணத்தார் பேசமாட்டார்கள் என்பதால் இவர்களும் மகா அமைதி

ஆக ஒரு சரித்திர தமிழனுக்கு இழைக்கபடும் அநீதிக்கு இங்கு குரலெழுப்ப யாருமில்லை,

ஆச்சரியமாக தமிழர் எதிர்ப்பு கொள்கை கொண்ட புத்த குருக்கள் எதிர்க்கின்றனர், முரளிதரன் தேசிய அடையாளம் அவர் பெயரை மறுபடியும் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்

ஆக ஒரு தமிழனுக்கு சிங்களன் குரல் கொடுக்கின்றான்.

முன்பொருமுறை கலைஞர் சொன்னார், "இப்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் தமிழன் முத்தையா முரளிதரன்".. ஆம் அப்பொழுது சர்வதேச போட்டிகளின் ஒரே தமிழராக அவர்தான் ஆடிகொண்டிருந்தார்

அவர் நலமாக இருந்திருந்தால் நிச்சயம் குரல் எழுப்பியிருப்பார்.

ஒருவேளை கலைஞர் அப்படி சொன்னதில்தான் இந்த சீமான் கோஷ்டி அமைதியாக இருக்குமோ?

ஆனாலும் பாருங்கள் சைமன், நீங்கள் இருக்கும் பொழுது ஒரு சிங்கள புத்த குரு முரளிதரனுக்கு ஆதரவாக வந்து நிற்பது உங்களுக்கு எவ்வளவு பெரும் அவமானம்???













 

Monday, June 19, 2017

இந்தியா பாகிஸ்தானுக்கு விளையாட வரவேண்டும் : பாகிஸ்தான் கேப்டன் அழைப்பு





இனியாவது இந்தியா பாகிஸ்தானுக்கு விளையாட வரவேண்டும் : பாகிஸ்தான் கேப்டன் அழைப்பு


எப்படி எல்லாம் இந்திய அணியினை கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்? எல்லாம் அஸ்வினும், ஜடேஜாவும் இருக்கும் தைரியம்


யோவ், மனசாட்சியே இல்லாமல் இப்படியா கலாய்ப்பது, பாவம் அவர்களே நோந்துபோய் இருக்கின்றார்கள்.





இந்திய அரசு பாகிஸ்தானோடு சுட்டு விளையாடுவதை தவிர வேறு விளையாட்டு இல்லை என சொல்லிவிட்டது, அப்படி சொல்லி இந்திய அணியினை காப்பாற்றியிருக்கின்றது

ஆனால் இந்தியர்களின் ஆசை என்னவென்றால் அவர்களை கொண்டு போங்கள், கதற கதற கிரிக்கெட் சொல்லிகொடுத்து அனுப்புங்கள்

அந்த ஜடேஜாவினை மட்டும் திருப்பி அனுப்பவே வேண்டாம்




 

 



 

Monday, June 12, 2017

இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது

இரு நாட்களுக்கு முன்பு, ஒரு தொப்புள் கொடி உறவு என சொல்லிகொள்ளும் இலங்கையர் ஒருவர் புன்னகை பூக்க சொன்னார், "எப்படி பார்த்தீயளே, இந்தியாவினை விரட்டி போட்டோம், இனி கிண்ணம் எங்கட நாட்டுக்குத்தான், கோப்பை கிடைக்காமல் போனாலும் உங்கள ஜெயிச்சு போட்டோம் பாத்தியளே" என கடும் உற்சாகத்தில் சொன்னார்


"பொறுத்து பாரும், கடைசியில் உங்களை அடித்து விரட்டிவிட்டு கோப்பையினை வென்று காட்டுவோம்" என சொல்லிவிட்டு வந்தேன்.


சொன்னபடி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது.




அவரிடம் போட்ட சவாலில் பாதி வென்றாகிவிட்டது, மீதியும் வெல்ல டோனியாண்டவரும், கோலிபகவானும், யுவராஜ் சாமியும் துணையிருப்பார்களாக..


அடேய் தொப்புள்கொடி நிச்சயம் வென்று காட்டுவோம், அது அங்கே அமர்ந்து கைதட்டிய விஜய் மல்லையா மீது சத்தியம்



Friday, April 21, 2017

தெருமுனையில் கிரிக்கெட் ஆடும் பொழுது....





அக்காலத்தில் தெருமுனையில் கிரிக்கெட் ஆடும் பொழுது, பந்து அங்கு திண்ணையில் இருக்கும் கிழவிகள் தலையினையோ அல்லது வீட்டு ஓட்டையோ தாக்கும்


உடனே அந்த கிழவிகள் கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு அடிக்க ஓடிவருவார்கள், அது கம்போ, உலக்கையோ அல்லது ஆட்டுக்கு வைத்திருக்கும் இலை குழைகளோ எதுவோ ஒன்று


அதனை கையில் வைத்து கொண்டு தை தை என‌ ஆடுவார்கள்





இந்த ஐபிஎல்லின் சியர்ஸ் கேர்ல்ஸ் ஆட்டத்தை பார்க்கும் பொழுது அந்த கிழவிகளின் ஆக்ரோஷ ஆட்டம்தான் நினைவுக்கு வருகின்றது

அவர்களை வெறுப்பேற்ற திரும்ப திரும்ப அங்கேயே ஆடுவதுண்டு, ஆக அவர்கள்தான் தெருமுனை ஆட்டத்தை உற்சாகபடுத்தியிருக்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் நமக்கெல்லாம் நன்றாக புரிகின்றது..

ஆக அக்காலத்திலே கிராமங்களில் சியர்ஸ் கிழவிகள் இருந்திருக்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது, அவர்கள்தான் இந்த சியர்ஸ் ஆட்டங்களுக்கு முன்னோடிகள்

இப்பொழுது எல்லா ஐபில் ஆட்டத்திலும் அந்த சியர்ஸ் கேர்ள்ஸ் ஆடிகொண்டிருக்கின்றார்கள்

சில ஐபிஎல் ஆட்டத்தில் கிரிகெட் வீரர்களை விட சியர்ஸ் கேள்ஸ் நன்றாக ஆடுகின்றார்கள்..

அவர்களுக்கும்" வுமன் ஆப்த மேட்ச்", "வுமன் ஆப் த சீரியல்" எல்லாம் கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்..




 

 



 

Tuesday, April 11, 2017

ஐபிஎல்: தமிழக வீரர் நடராஜ்..



17861721_10208890737200820_4513588643908370136_n.jpg


எத்தனை வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடினாலும் யானை கலை மடக்கி மிதிப்பதை போல, காலை மடக்கி சிக்சர் அடிக்கும் டிவில்லயர்ஸை பார்க்க அழகாகத்தான் இருக்கின்றது, அப்படி மிக துல்லியமாக கணித்து விளாசுகின்றார், மிக சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை


தமிழக வீரர் நட்ராஜின் பந்துவீச்சை பார்ப்பதற்காக காத்திருந்தேன், மிக மிக வறிய குடும்பத்தில் பிறந்து, தெருமுனையில் ஆடி இந்திய கிரிக்கெட்டில் குறிப்பிட்ட இடம் பிடித்தவர் அவர், அவர் மேல் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது


ஆனால் நேற்று அவருக்கு ஒரு ஓவர்தான் வீச கொடுத்தார்கள், அவர் நன்றாகத்தான் வீசினார், ஐபில் போன்ற ஆட்டங்களில் ரன் போகத்தான் செய்யும், அவரும் மிக அதிகம் கொடுக்கவில்லை





பின்னும் ஏன் ஒரு ஓவர் மட்டும் வாய்பளித்தார்கள் என தெரியவில்லை, பெங்களூரு அணி அப்படி ஒன்றும் ரன் குவிக்கவில்லை, கூடுதல் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்

மேக்ஸ்வெல் ஏன் அப்படி செய்தார் என தெரியவில்லை.. அவருக்கு கடும் கண்டனங்கள்..

இன்னும் அவர் வரும் போட்டிகளில் புறக்கணிக்கபடும் பட்சத்தில் "நாமும் தமிழர்" கட்சி சார்பாக ஒரு போராட்டமும், "நாம் கறுப்பர்கள்" அமைப்பின் சார்பாகவும் ஆர்பாட்டம் நடைபெறும்

"நாம் கறுப்பர்கள்" அமைப்பின் கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட கிரிஸ் கெயில் உட்பட‌ பல வீரர்களை அணுகும் திட்டமும் இருக்கின்றது..

எல்லா நாட்டுக்காரனும் வந்து ஆடும் ஐபில் ஆட்டத்தில் ஒரு இந்தியனுக்கு கூடுதல் ஓவர் கொடுத்தால்தான் என்ன? இந்தியன் இங்கு ஆடாமல் ஜெர்மனியிலா சென்று ஆடுவான்??

அணி முதலாளி பிரித்தி ஜிந்தாவினை எப்படி கண்டிப்பது என்பது பற்றி "நாமும் தமிழர்", "நாம் கறுப்பர்கள்" கூட்டத்தில் முடிவெடுக்கபடும்,

அவரும் இந்த கொடுமையினை தடுக்கவில்லை, இவ்வளவிற்கும் தமிழன் மணிரத்னம் மூலம் திரைக்கு வந்தவர் அவர்..படமெடுக்க தமிழன் வேண்டும், கிரிக்கெட் ஆட வேண்டாமா?

இந்த பிரீத்தி ஜிந்தாவின் கொட்டத்தை அடக்க என்ன செய்யலாம்?

அடுத்த வருடம் ஒரு அணியினை குஷ்பூவினை வாங்க சொல்லலாம்..




 

Saturday, April 8, 2017

ஐபிஎல் போட்டிகளை நேரம் கிடைத்தால் பார்க்கலாம்...

ஐபிஎல் போட்டிகளை நேரம் கிடைத்தால் பார்க்கலாம், சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றது


நேற்றைய போட்டியில் குஜராத்தும், கொல்கத்தா அணியும் மோதின, இரு அணியிலும் பவுலர்கள் சரியில்லை


அதுவும் குஜராத் அணியின் பவுலர்கள் இன்னும் மகா மோசம், குறிப்பாக ஒரு ஸ்பின் பவுலரை கொண்டுவந்திருந்தார்கள், அவரும் மிக சரியாக சிக்சர் அடிக்குமாறு வீசி கொடுத்தார்.




அவர் பந்துவீச வந்தவுடன் அம்பையர் இரு கைகளை தூக்கிகொண்டே நிற்க தயாராகும் அளவு நிலமை இருந்தது


ஒரு பவுலர் கூட விக்கெட் எடுக்கும் வெறியில் பந்து வீசவே இல்லை, பெட் விவகாரம் இருக்குமோ என சந்தேகிக்கும் அளவில் அந்த பந்துவீச்சு இருந்தது, போராட்ட குணம் யார் முகத்திலும் இல்லை


கலைஞரும் தினகரனும் மேடை விவாதத்தில் பங்குபெற்றால் எப்படி இருக்கும்? அப்படி ஆட்டம் இருந்தது,


கல்கத்தா அணி வென்றது சுவாரஸ்யமே இல்லை, புலி போராடிய ஆக்ரோஷம் இல்லை, பசுமாடு புல்லை தின்பது போல அமைதியாக இருந்தது ஆட்டம்


இன்று பெங்களூர் அணி விளையாடபோகின்றதாம், புனே அணி இன்னொரு ஆட்டத்தில் விளையாடும் என்கின்றார்கள்


இதில் எப்படி அணல் பறக்கின்றது என பாக்கலாம், பல தீபொறிகளும், சுனாமிகளும், சூறாவளிகளும் அங்குதான் இருக்கின்றன...






ஜெயலலிதாவிடம் அரசியல் பயின்றதால் அச்சமில்லை : டிடிவி தினகரன்


இவருக்கு அச்சமில்லை ஆனால் தமிழக அச்சமே அதுதானே..








Friday, March 31, 2017

விராட் கோஹ்லிக்கு பத்மஷ்ரி விருது



விராட் கோஹ்லிக்கு பத்மஷ்ரி விருது


கோஹ்லி திறமையான ஆட்டக்காரர், ஆனால் ஏன் இவரை விட சிறந்த ஆட்டக்காரரான டோனிக்கு அந்த விருது ஏன் கிடைக்க்கவில்லை?


டோனிக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஏதோ உரசல் இருப்பது அவ்வப்போது தெரிகின்றது, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு, கேப்டன் பதவியிலிருந்து விலகல் என அந்த விஷயங்களில் நன்றாக தெரிகின்றது





டோனியின் காலங்கள் இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவ் காலத்திற்கு அடுத்த பொற்காலம் என்பதனை பின்பு வரலாறு சொல்லும்..

டோனிக்கும் ஒரு பத்மஷிரி கொடுத்திருக்கலாம், நிச்சயம் கொடுத்திருக்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் போர்டு வீரர்கள் கிரிக்கெட் ஆடுகின்றார்களோ இல்லையோ, அந்த போர்டில் அரசியல் மிக நன்றாக ஆடுகின்றது என்பது மட்டும் தெரிகின்றது

ஆனானபட்ட கபில்தேவினையே கண்ணீர் சிந்த வைத்த அந்த அரசியல் அப்படித்தான் இருக்கும்

நாட்டில் எத்தனையோ சீர்திருத்தங்களை கொண்டுவரும் மோடி, இந்த பெரும் பணம் விளையாடும் தனியார் அமைப்பான‌ கிரிக்கெட் போர்டு பக்கம் மட்டும் செல்லவே மாட்டார்..

மோடி என்றல்ல, எந்த பிரதமரும் செல்லமாட்டார்..

அதன் சக்தி அப்படி..












Tuesday, March 7, 2017

ஹேப்பி பர்த்டே விவியன் ரிச்சர்ட்ஸ்




Image may contain: 1 person, playing a sport, baseball and outdoor


கிரிக்கெட்டை நேசித்தால் அவரையும் நிச்சயமாக நேசித்தே தீரவேண்டும்


இன்றைய டி20 மேட்ச்களை அன்றைய டெஸ்ட் மேட்சிலே ஆடியவர், அதுவரை ஸ்டைலாக மெதுவாக ஆடவேண்டிய ஆட்டம் என்றிருந்த கிரிக்கெட்டினை அதிரடி ஆட்டத்திற்கு மாற்றி காட்டியவர்


அவர் ஆட வந்தபின்புதான் உலகம் கிரிக்கெட்டை ரசிக்க முடிந்தது, அவரை முன்மாதிரியாக கொண்டுதான் ஸ்ரிகாந்த், டெண்டுல்கர், லாரா
மியான்டட், உல்ஹக், டோனி, கெயில் என எல்லோரும் உருவானார்கள்





கம்பீரமான உருவத்துடன் கையில் மட்டையுடன் அவர் களமிறங்கினால், அவர் உருவத்திற்கு அது குச்சி போலிருக்கும், பந்து எங்கு செல்கிறது என தெரியாமலே விளாசுவார்

அதுவும் அவுட் ஆகாமலே விளாசுவார். எந்த பந்தும் அவரை கட்டுபடுத்தியதாக சரித்திரமே இல்லை

எதற்கும் மனிதர் சிரமபட்டது இல்லை, யானை துதிக்கையினை ஆட்டுவது போல அசால்ட்டாக மட்டையினை சுழற்றுவார்.

எசக்குபிசகாக கேட்ச் ஆனால் உண்டு, மற்றபடி பந்துக்கு அவர் திணறியதாக குறிப்புகள் இல்லை

6,6,6,6,6 ,4,4,4,4.. என்ற வரிசைகளை முதன் முதலில் அவர்தான் கொடுத்தார்.

அவருக்கு பந்துபோடும் பவுலர்கள் எல்லாம் சசிகலாவினை சந்திக்க செல்லும் அமைச்சர்கள் போலவே டென்ஷனாக இருந்தார்கள்..

ஒருநாள் கிரிக்கெட்டில் எல்லோரும் 50 ரன்னுக்கு திணற, அவரோ 189 நாட் அவுட் என நின்றுகொண்டிருந்தார், பின்னாளின் பாகிஸ்தானின் அன்வர் உடைக்கும் வரை அந்த சாதனை அவருடையது.

எத்தனை அருமையான ஷாட்கள், எவ்வளவு வலுவான அதிரடி, கொஞ்சமும் சளைக்காமல் மிஷின் போல அவர் ஆடும்பொழுது ஏதோ பிசாசொன்று ஆடியது போலிருகும்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், உலக கோப்பையும் அவரால்தான் களைகட்ட தொடங்கின‌

முதல் இரு உலககோப்பைகளை வெஸ்ட் இண்டீசுக்கு அவர்தான் கொடுத்தார், மூன்றாம் போட்டியில் அவர் கபில்தேவால் பிடிபடும் வரை ஆட்டம் அவர்களிடம் தான் இருந்தது

இனி அப்படி ஒரு ஆட்டக்காரன் வரமாட்டான் என்கின்றது கிரிக்கெட் உலகம், அதனால் எக்காலத்திலும் சிறந்த ஆட்டக்காரர் என சொல்லி அங்கீகரித்தது.

எத்தனை கெயில், எத்தனை ஹோலி டோனி வந்தாலும், "கிரிக்கெட்டின் ராஜா" என்றென்ன்றும் அவரே

அவர் வெஸ்ட் இண்டீசின் வீவியன் ரிச்சர்ட்ஸ்

அந்த கிரிக்கெட் வேதாளத்திற்கு இன்று பிறந்தநாள், கிரிக்கெட் அறிந்தோர் எல்லாம் அவரை வாழ்த்தி கொண்டிருக்கின்றார்கள், நாமும் வாழ்த்தலாம்

ஹேப்பி பர்த்டே விவியன் ரிச்சர்ட்ஸ்

அந்த கிரிக்கெட் வேதாளம் பல்லாண்டு வாழட்டும்











 


 

Sunday, October 23, 2016

கபடியில் இந்தியா சாதித்திருக்கின்றது.. வாழ்த்துவோம்...

https://youtu.be/LawUCYfZb2I




கபடி போட்டியில் இந்தியா சாம்பினாகிவிட்டதாம், எல்லோரையும் போல நானும் மகிழ்கின்றேன்

அது தமிழர் விளையாட்டு, இன்றல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் பரவிய நாடுகளில் அவ்விளையாட்டு உண்டு, இந்தோனேஷிய, போர்னியோ மலேசியா பெண்கள் நமது ஊர் சுட்டிக்கல்லினை, பாண்டி ஆட்டத்தை அழகாக ஆடுவது போல கபடியினை அந்த ஆண்கள் கபடியினை அழகாக ஆடுகின்றார்கள்

கபடி அவர்கள் மொழியில் குடுகுடு சடுகுடு என தமிழ்பெயரிலே அமைந்திருக்கின்றது.


அப்படி மிக அருமையான விளையாட்டு 1990களில்தான் ஆசிய போட்டிகளில் இடம்பெற்றது, அதுவும் அன்று விளையாட்டு துறையில் கோலோச்சிய தமிழன் சிவந்தி ஆதித்தனால் சாத்தியமானது

கபடி விளையாட்டினை பொறுத்தவரை குமரி, நெல்லை தான் விளைநிலம், மிக சிறந்த வீரர்கள் அங்குதான் உருவாகுவார்கள், உதாரணம் முன்னாள் கபடி கேப்டன் ராஜரத்தினம் போல நிறையபேரினை சொல்லமுடியும்

ஹாக்கியின் விளைநிலம் பஞ்சாப் எனின், நிச்சயமாக கபடியின் விளைநிலம் குமரியும், நெல்லையுமே

ஜனவரியில் இந்திய சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு டெல்லி வீரர் கலக்கிகொண்டிருந்தார், நான் இந்தியாவில் டிவியில் பார்த்துகொண்டிருந்தேன், அவர் பெயரினை பார்க்கும்பொழுது அது அப்படியே நெல்லை அடையாளத்தினை கொண்டிருந்தது.

கபடியில் இந்தியா சாதித்திருக்கின்றது, வாழ்த்துவோம். ஈரான் போன்ற முரட்டு அணியினை வீழ்த்துவது நிச்சயம் சாதனை, இந்தியா அதனைத்தான் செய்து கோப்பையினை வென்றிருக்கின்றது

தென்னகத்தில் கபடியில் மிகசிறந்த விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள், இன்றிருப்பது போல மிகபெரும் அங்கீகாரம் அன்றிருந்தால், ஒரு நல்ல கோச் கண்ணில் பட்டிருந்தால் அவன் வரலாறு மாறி இருக்கும்

அவன் கன்னியாகுமரி முத்துலிங்கம்

கபடிக்கென்றே பிறந்தவன் அவன், எல்லா கபடியிலும் 1980களில் அவனே வென்றான். லிங்கம் இறங்கிவிட்டானென்றால் அந்த அணியினை வெல்ல யாரல் முடியும?

கபடி விளையாட்டின் கடவுள் போலவே அவன் ஆடிகொண்டிருந்தான், ஆனால் எல்லாம் தெருமுனை விளையாட்டு, அவனை 5க்கும் பத்துக்கும் அழைத்து சென்று நடத்தபட்ட போட்டிகள்

ஆனால் அவனே அன்று தென்னகத்தின் பிராதன கபடி வீரன், தென்னகத்தின் கபடி போட்டியின் வெற்றியினை நிர்ணயிக்கும் சக்தியாக அவனே இருந்தான்

ஆனால் இந்த அளவு அங்கீகாரமில்லை, விளையாடினான் பெயர்பெற்றான், ஆனால் முறையாக நடத்தபடா போட்டி ஒன்று அவனை கொலைகுற்றவாளி ஆக்கிற்று

அதன்பின் அவன் நடவடிக்கைகள் மாறி, குமரிமாவட்ட பெரும் குற்றவாளியாகி சிறையிலே கொல்லபட்டான்

அன்றைய காலத்தில் ஒரு நல்ல கோச் கண்ணில் மட்டும் பட்டிருப்பானென்றால் மிக பெரும் உலகளாவிய கபடி விளையாட்டு வீரனாக அவன் பெயர் பெற்றிருப்பான்

ஆனால் கடலில் பெய்த மழை போல அவன் விளையாட்டு அன்று வீணாய் போய்விட்டது.

இன்று இந்திய கபடி அணி உச்சபட்ச வெற்றி பெற்றிருக்கும்பொழுது அவனை போன்று அங்கீகாரமின்றி வழிமாறிய எத்தனையோ பேரினை நினைவு வருகின்றது.

காலத்தால் முந்தி பிறந்த அவர்கள் விதி அப்படி இருந்திருக்கின்றது.







https://youtu.be/9f7RGTL_Tyk

Saturday, August 27, 2016

கிரிக்கெட்.. சீமான் சீற்றம், கராத்தே .. நக்கீரன் குமுறல்

ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் சக மல்யுத்த வீரரை திருமணம் செய்கிறார்

உயிருக்கு துணிந்தவர்கள்தான் மல்யுத்த வீரர்களாக முடியும், அப்படி துணிந்து மல்யுத்த வீராங்கனையினை திருமணம் செய்ய இன்னொரு மல்யுத்தவீரர்தான் முன்வருவார்,

கண்ணாடி போட்டு அலுவலகத்தில் ஒடுங்கிய தேகத்துடன் கம்பியூட்டர் தட்டுபவனுக்கா
அந்த தைரியம் வரும்?



ஒலிம்பிக்கில் அவர் எதிரியினை புரட்டிய காட்சி கண்ணிலே நிற்கும் அல்லவா? எவனாவது ரிஸ்க் எடுப்பான்?

ஒரு மல்யுத்ததிற்கு இன்னொரு மல்யுத்தம்தான் எதிர்கொண்டு நிற்கமுடியும், வாழமுடியும் :)





கிரிக்கெட்டை கைவிட்ட நாடுகள்தான் உலகில் சாதிக்கின்றன, ஜமைக்காவின் உசேன் போல்ட் அப்படித்தான் சாதித்தார் : சீமான் சீற்றம்


# இரன்டாம் இடம் பிடித்திருக்கும் பிரிட்டந்தான் கிரிக்கெட்டின் தாயகம் என்பது இவருக்கு தெரியாதா? ஜமைக்கா என்பது வெஸ்ட் இண்டீசின் ஒரு பகுதி என்பதுமா தெரியாது? இங்கிலாந்து கிரிக்கெட் அணி பற்றி கூட கேள்விபடாத தற்குரியா இவர்?


ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவும் கவனிக்கபட்ட நாடு, அவர்கள் என்ன கிரிக்கெட்டை விட்டுவிட்டார்களா?




இல்லை கிரிக்கெட்டில் இல்லா ஈரானும், இஸ்ரேலும் முதலிடத்தில் வந்ததா?


இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் கிரிக்கெட்டிலும் முத்திரை பதிக்கவில்லையா


எவ்வளவு பாரம்பரியம் மிக்கது விகடன் குழுமம், கொஞ்சம் கூட யோசிக்காமல் இவர் சொல்வதை எல்லாம் வெளியிடுமா? கொஞ்சமும் யோசிக்காதா?


விகடன் குழுமமே, இவரிடம் விழிப்பாய் இருங்கள், இல்லை என்றால் ஒருநாள் உலகம் உங்களை பார்த்து சிரிக்கும் நிலை வரும், இவர் அள்ளிவிடும் அலப்ப ரைகள் அப்படி.


கேட்க செவி இருந்தால் விகடன் கேட்கட்டும்


சரி, உங்களுக்குத்தான் இந்தியா பிடிக்காதே, ஈழதமிழனுக்க் எதிரியான இந்தியா எனக்கும் எதிரி என சொன்னவர்தானே நீங்கள், அப்படித்தானே காஷ்மீர் தீவிரவாதிகளுக்காக குரல் கொடுத்திர்கள்


அப்படி இருக்கும் பொழுது இந்தியா தங்கம் வென்றால் என்ன? அலுமினியம் வென்றால் உங்களுக்கு என்ன?


இப்படி எல்லாம் சொல்லி நீங்கள் இந்தியர் என நிரூபிக்க பார்க்கின்றீர்ககளா? ம்ஹூம் முடியாது


நீங்கள் பிரபாகரனின் தம்பி, ஈழ விடுதலையினை எதிர்க்கும் இந்திய தேசியம் உங்களுக்கும் எதிரி, அதனை நீங்கள் வழக்கம் போல மறக்கலாம், நாங்கள் மறக்கவே மாட்டோம்.


நீங்கள் பிரபாகரனின் தம்பி, இங்கு இருக்கும் அகதி நீங்கள் அவ்வளவுதான் என்பது எங்கள் முடிவு.











கராத்தே என தெரியாதவர்களிடம் கராத்தே சங்கம் இருக்கும் அவல நிலை : நக்கீரன் பத்திரிகை குமுறல்

விடுங்கள், மக்கள் பணி என்றால் என்னவென்றே தெரியாத அரசியல்வாதிகளிடம் பதவிகள் சிக்கவில்லையா?


ஊடக நேர்மை என்னவென்று தெரியாத பத்திரிகைகளிடம் தமிழக செய்திபிரிவு சிக்கவில்லையா

ஒலிம்பிக் என்றால் என்ன என தெரியாதவர்களிடம் இந்திய ஓலிம்பிக் சங்கம் சிக்கவில்லையா?

அப்படித்தான் கராத்தேவும் தெரியாமல் சங்கத்திடம் சிக்கிவிட்டது அவ்வளவுதான்








Friday, August 26, 2016

மொபைல் போன் மோகினி : 'போக்கி(ரி)மான் கோ'


Image may contain: outdoor


இது மொபல் போன் யுகம், எல்லோர் கையிலும் ரேகை போலவே நிச்சயமாக‌ போன் இருக்கின்றது. இதனை குறிவைத்தே வங்கி முதல் ஐ.டி கம்பெனிகள் வரை வியாபாரம் செய்துகொண்டிருக்கும் காலம் இது.


மொபைல் போன் இல்லா வாழ்க்கை இனி மின்சாரம் இல்லா வாழ்க்கை போல சாத்தியமில்லை, அத்தனை அவசியமாக போய்விட்டது, அது இல்லை என்றால் வாழ்க்கை இயங்காது கேஸ் சிலிண்டர் வரவு முதல் வங்கிகணக்கு வரை அதன் மூலமே நடந்துகொண்டிருக்கின்றது.


நல்ல விஷயம் இருந்தால் இன்னொரு பக்கமும் வரும் அல்லவா, இதில் பல கம்பெனிகள் விளையாட்டு மென்பொருளை உருவாக்கி காசுபார்த்தன, அந்தியில் சந்தியில் ஓடி விளையாட வேண்டியவர்களை எல்லாம் ஒரு மூலையில் முடக்கி வைத்த பெருமை அவைகளுக்கு உண்டு, தடித்த கண்ணாடியுடன் அவைகளுடனே இத்தலைமுறை மல்லுகட்டிகொண்டிருக்கின்றது


கோப பறவைகள் (ஆங்கிரி பேர்ட்), நொறுக்கு மிட்டாய் (கேண்டி கிரஷ்) சீசன் முடிந்து இப்பொழுது சீசன் பொக்கிமான் கோ, அதன் தமிழ்பதம் "முடிந்தால் இத‌னை பிடி" எனும் பொருளில் வரும்.


மற்ற போன் விளையாட்டு சிக்கல் இல்லை, அமர்ந்த இடத்திலிருந்து விளையாடலாம், அலுவலகம் என்றாலும் கடமை ஆற்றுவது போல முகத்தில் போலி கவனத்துடன் விளையாடலாம். ஆனால் பொக்கிமேன் கோ விவகாரம் பிடித்தது, நீங்கள் நடந்தே ஆகவேண்டும்.


புதிதாக வந்த விளையாட்டு அல்ல, கிராமங்களில் ஓடி ஓடி கோழி பிடிப்பது, எருக்கலை வெடித்தால் அந்த தும்பினை ஓடி பிடிப்பது, ஆடி மாதங்களில் வேப்பங்கொட்டை சேகரிப்பது, தேடிபிடித்து தேன் எடுப்பது, அடுத்தவன் வீட்டில் ரகசியமாக கொய்யா திருடுவது போன்ற கிராமத்து விளையாட்டின் மொபைல் வெர்ஷன் இது அவ்வளவுதான்.


ஆனால் சிக்கல் எதில் வருகின்றது? காய்ந்து கிடக்கும் கண்மாயில் ஏதும் பொறுக்கினால் ஆபத்தில்லை, திறந்த வெளி யாரும் இல்லை, மேலே பறக்கும் காக்கா தவிர ஏதும் வராது. ஓடலாம் சாடலாம்.


நகரம் பரபரப்பானது, போனையே பார்த்துகொண்டிருப்பவர்களுக்கு சற்று தள்ளி ஏதோ தும்பு இருப்பதாக காட்டுகின்றது, ஓடுகின்றார்கள். தும்பு இருக்கும் இடத்தின் வழியினை போனே காட்டுவதால் அதனை பார்த்துகொண்டே ஓடுகின்றார்கள்


விளைவு மாடியில் இருந்து விழுகின்றார்கள், சாலையில் லாரிக்கு அடியில் விழுகின்றார்கள், எங்காவது மோதிகொள்கின்றார்கள். ஒரு சிலர் தடை செய்யபட்ட பகுதிகளுக்குள் தும்பு இருக்கிறது என்று ரகசியமாக சென்று மாட்டிகொள்கின்றார்கள்.


இப்படி எல்லா மக்களும் சென்று முட்டிகொண்டிருந்தால் என்ன ஆகும், சில உயிரிழப்புக்களும் நடக்க தொடங்கிவிட்டன. சில நாடுகள் இதிலிருக்கும் பாதுகாப்பு ஆபத்தினை புரிந்துகொண்டன, நேற்று ஜப்பானில் ஒருவர் காலி, சாலையில் தும்பு பிடித்திருக்கின்றார்.


விளையாட்டு மயக்கத்தில் ஆபத்தான தடை செய்யபட்ட அணுவுலை வளாகம், நுழைந்தால் துப்பாக்கி சூடுபடும் கேந்திர முக்கியத்துவ பகுதிகளுக்குள் எல்லாம் தும்பு பிடிக்க செல்லுமளவு நிலமை சில நாடுகளில் மகா மோசம்.


நாடுகள் மெதுவாக விழிக்க தொடங்கின, இது ஜிபிஎஸ் நுட்பம் உள்ள விளையாட்டு, ஒரு பகுதிக்கு சென்றால் செயற்கைகோள் கட்டிபாட்டில் போன் வந்துவிடும் விளைவு, அங்கிருக்கும் வைஃபை வரை செயற்கைக்கோள் எடுத்து சம்பந்தபட்ட நாட்டிற்கு அனுப்பலாம். சென்சிட்டிவான விஷயங்களை திருடலாம், படமெடுக்கலாம். நவீன உலகில் தொழில்நுட்பத்திடம் சிக்கிகொண்டால் ஏதும் பாதுகாப்பில்லை


அதிரடியாக முதலில் இந்த விளையாட்டினை தடை செய்த நாடு ஈரான், விரட்டியே விட்டது. சும்மா சொல்ல கூடாது பெர்சியர்கள் தனி ரகம்தான்


அடுத்து ஒவ்வொரு நாடும் அறிவுரையில் இறங்கிவிட்டன, சில நாடுகள் கண்களை உருட்டுகின்றன, சில நாடுகள் கட்டுபாடுகளை மட்டும் விதிக்கின்றன‌


ஒரு விளையாட்டு சர்வதேச நாடுகளை அச்சுறுத்துவதை உலகம் இப்பொழுதுதான் பார்க்கின்றது, மக்கள் நலன் மட்டுமல்ல கூடுதலாக விஞ்ஞான ரீதியான தேசபாதுகாப்பு.


நானும் விளையாடி பார்த்தேன், வை கோ போல அங்கும் இங்கும் ஓடினேன், கலைஞர் போல சில இடங்களில் அமைதியாக இருந்தேன், சசிகலா புஷ்பா போல தலை மறவாக திரிந்தேன், தமிழிசை போலவே, ராகுல்காந்தி போலவே சில வீடுகளில் புகுந்துவிட கூட தும்பு அழைத்தது.


சிலர் வீட்டு வாசலில் நின்றேன், ஒரு மாதிரியாக பார்த்தார்கள். சில இடங்களில் கார் அருகில் நின்றபொழுது கார் திருட வந்தவனோ என நினைத்தார்கள், சில ரெஸ்டாரண்ட் பக்கம் தும்பு பிடிக்க சென்றபொழுது வலுகட்டாயமாக நூடுல்ஸ் கொடுக்க பார்த்தார்கள்.


சீமை சரக்கு கடைக்கு முன்னாலும் தும்பு இருப்பதாக காட்டிற்று, சென்று தும்பை மட்டும் பிடித்தேன், கடைக்காரர் ஒரு மாதிரி பார்த்தார், இவ்வளவு அருகே வந்துவிட்டு வாங்காமல் போகிறான், லூசா இருப்பானோ? என்ற ஓட்டம் அவர் பார்வையில் தெரிந்தது,


பஸ் நிலையத்தில் பஸ் அருகே சென்றேன், ஆனால் தும்புபிடித்துவிட்டு ஏறாமல் வந்துவிட்டேன், ஓட்டுனர் குழம்பி நின்றார்.


அது கூட பராவாயில்லை, ஏதும் ஏடாகூடாமன இடங்களில், அழகு தாய்லாந்து பெண்கள் குவிந்த பகுதிகளில் தும்பு இருந்து பிடிக்க சென்றால் என்ன ஆவது? ஆனால் தும்பு இருப்பதாக போன் காட்டுகின்றது, செல்லலாம்


ஆனால் தும்பு பிடிக்கத்தான் சென்றேன் என்றால் நம்பவா செய்வார்கள்? அதுவும் என்னையா?


ம்ஹூம், வாய்ப்பே இல்லை.


உடனே அந்த விளையாட்டினை போனை விட்டு வெளியேற்றிவிட்டேன், அது வித்தியாசமாக மனதினை விளையாட்டிற்கு அடிமை ஆக்குகின்றது என்பது நிஜம். அதாவது யாரோ நம்மை கைபிடித்து அழைத்து செல்வது போல போன் நம்மை அழைத்து செல்கின்றது, அந்த மாய கரம் பின்னால் நாமும் நடக்கின்றோம்


சுற்றுபுறம், ஆபத்து, வாகனம், குழி எதும் அப்பொழுது கண்களுக்கோ சிந்தனைகோ வருவதில்லை, அதோ தெரிகின்றது தும்பு ஓடி சென்று பிடி அவ்வளவுதான். நிச்சயம் இது மொபைல் போன் மோகினி.


இந்தியாவில் நிலை எப்படி என தெரியவில்லை, டாஸ்மாக்கில் குடித்துவிட்டே லாரி, கார் என இயக்கி கூட்டத்தில் விடும் நாடு அது. இது என்ன கொடுமைகளை செய்ய போகின்றதோ தெரியவில்லை


ஆனால் நிச்சயம் இப்படி சினிமா வரும், நாயகன் போக்கிமான் விளையாடி நாயகி வீட்டு காம்பவுண்டுக்குள் செல்கிறான், அல்லது எங்காவது விளையாடிகொண்டே அவள்மீது முட்டுகின்றான் காதல் வெடிக்கிறது, அல்லது விளையாடிகொண்டே லாரியில் விழப்போகும் ஹன்சிகா அல்லது தமண்ணாவினை ஹீரோயினை தனுஷ் அல்லது ஜெயம்ரவி காப்பாற்றுகின்றார், அடுத்தால் டூயட்..,


அல்லது மும்பை கடற்கரையில் தும்பு பிடிக்க போய் நயன் மீது பிரபுதேவா முட்டுகின்றார், பிளாஷ்பேக் ஒப்பன், அடுத்த கதை ரெடி.


சிம்பு படமென்றால் அது வேறு மாதிரி, யாரையாவது பழிவாங்கவே அவர் விளையாடுவார்


கட்சியினர் விளையாண்டால் இன்னும் காமெடி, ரத்த அணுக்கள் கோபாலபுர பக்கமும், உடன் பிறப்புக்கள் போயஸ் கார்டன் பக்கமும் செல்லும் ஆபத்து உண்டு, கோபாலபுரத்திற்கு ஏதும் பிரச்சினை இல்லை, "தும்போடு 4 சமஉ பிடித்து வரும் சாமார்த்தியம் உள்ளவன் தம்பி.." என அது பாராட்டும்.


ஆனால் கார்டன் அப்படி அல்ல, விளையாட்டுக்கு தும்பு பிடிக்க போனாலும் அந்த பக்கம் எப்படி செல்லலாம் என கட்சிவிட்டே டிஸ்மிஸ் செய்துவிடும். தெற்கே எவனாவது சசிகலா புஷ்பா வீட்டு பக்கம் தும்பு பிடிக்க சென்றான் என்றால் அவ்வளவுதான் தீர்ந்தான்.


வை.கோவிற்கு பிரச்சினை இல்லை பல நடைபயணங்கள் நடந்ததால் அவர் எங்கும் தும்பு பிடிக்ககலாம், ராமதாஸ் கட்சியினர் வன்னியசாதியினர் வாழும் இடங்களில் மட்டும் தும்பு பிடிப்பர். எங்க ஏரியாவுக்குள் "நாடக தும்பு" பிடிக்க வருகின்றார்கள் என அவர் அறிக்கை விடும் ஆபத்தும் உண்டு


தமிழக காங்கிரசில் கோஷ்டி தாண்டி தும்பு பிடிக்க சென்றால் வந்துவிடும் வம்பு.


அங்கிள் சைமன் போன்றவர்கள், நிச்சயம் கச்ச தீவிற்கு அப்பக்கம் தும்பு இருந்தால் மட்டுமே விளையாடுவார், சந்திரகுமார் கோஷ்டி, பண்ருட்டி ராமசந்திரன் கோஷ்டி தும்பு பிடிக்க தன்னை மறந்து தேமுதிக அலுவலகம் சென்று கேப்டன் பார்வையில் பட்டால் மகா சிக்கல்.


ராமகோபாலன் போன்ற காவிகள் நிச்சயம் நாங்கள் மசூதி பக்கம்தான் தும்பு பிடிப்போம் என அழிச்சாட்டியம் செய்வர்.


இந்தியாவில் அந்த விளையாட்டு என்னென்ன காமெடிகள் செய்யபொகின்றது என இனிதான் தெரியும்.


சும்மாவே ஆயிரம் சுவாரஸ்ய கொடுமைகள் உள்ள நாடு, சாலை போக்குவரத்து முதல் மக்கள் இருக்கும் இடமெல்லாம் குழப்பம் அதிகம்


இதில் போக்கிமேனும் கையுமாக கிளம்பிவிட்டார்கள் என்றால், என்னென்னவெல்லாம் நடகுமோ?


இந்தியா எப்படி இவ்விளையாட்டை எதிர்கொள்கிறது எனபார்ப்போம், காரணம் 3ஜி 4ஜி வேண்டும், சர்வர் பிரச்சினை என பல பிரச்சினைகள் உண்டு, ஒருவேளை சரியாக வந்துவிட்டால் உடனே இந்தியா வரவேண்டும்


வந்து ஜெயபிரதா வீட்டினை சுற்றி சுற்றி தும்பு பிடிக்கவேண்டும், அல்லும் பகலும் அதனை சுற்றி சுற்றி தும்பு பிடித்து, ஒரு முறையாவது அவரை பார்த்துவிட முடியாதா? :)


நம்பிக்கைதான் வாழ்க்கை













Tuesday, August 23, 2016

ஒலிம்பிக்ஸ்: தண்ணீர். தண்ணீர்.. தண்ணீர்...



ஒலிம்பிக் மராத்தானில் தண்ணீர் வழங்காத சர்ச்சையில் இந்திய ஒலிம்பிக் கமிட்டி


அதாகபட்டது மராத்தான் என்பது நெடுந்தூர ஓட்டம், அரசியலில் கலைஞர் போல ஓடிகொண்டே இருக்கவேண்டும், வைகோ போலவோ அல்லது கிருஷ்ணசாமி போலவோ , ராமதாஸ் போலவோ ரெஸ்ட் எடுத்து ஓடமுடியாது, ஜெயா போல அமர்ந்துகொண்டு அந்த இலக்கினை என் அருகில் கொண்டு வா போதும் என சொல்லவும் முடியாது




[caption id="" align="aligncenter" width="527"]Image may contain: 1 person , selfie and close-up ஓ.பி ஜெய்ஷா[/caption]

ஒவ்வொரு 2 கிமீட்டருக்கும் ஒரு ஸ்டால் அமைத்து குளுக்கோஸ் போன்ற பானம் வழங்கவேண்டியது வீரர்களை அனுப்பும் நாட்டின் கடப்பாடு, அதில் ஒரு சிக்கல் என்னவென்றால் ஒரு நாட்டு வீரர் இன்னொரு நாட்டின் ஸ்டாலில் ஏதும் வாங்கமுடியாது, பாதுகாப்பு ஊக்கமருந்து உட்பட்ட சர்ச்சைகளை தவிர்க்கும் முயற்சி அது





ஒலிம்பிக் கமிட்டி ஒவ்வொரு 8 கிமீட்டருக்கு ஒரு ஸ்டால் பொதுவாக அமைக்கும், அப்படி அமைத்திருந்தது

இப்பொழுது சர்ச்சை என்னவென்றால் 2 கிமீ ஒன்றாக அமைந்திருந்த இந்திய ஸ்டால் வைகோ கூடாரம் போல ஆளின்றி கிடந்தது, ஆள் இல்லாவிட்டாலும் பராவயில்லை தண்ணீர் பாட்டில்கள் கூட இல்லை

சரி இது எங்கே முடியும் என நினைக்கின்றீர்கள்?.

OP-Jaisha-Getty-380

நிச்சயம் ஒலிம்பிக் கமிட்டி பணம் ஒதுக்கியிருக்கும், இந்திய பணம் என்றால் அங்கே ஊழலும் வரவேண்டும் என்பது இந்திய நடைமுறை அல்லவா?

வலுவான எதிர்கட்சி என்றால் இதனை பெரும் சர்ச்சை ஆக்கலாம்.

விரைவில் வெடிக்கும் பாருங்கள், "ரியோ ஒலிம்பிக் ஊழல் 2016",

அடுத்த சுரேஷ் கல்மாடி ஆகபோகின்றார், தற்போதைய தலைவர் நாராயண ராமசந்திரன்.
இதற்கு பதிலளிக்கும் பொறுப்பு அவருக்குத்தான் உண்டு

அவனவன் ரியோ சாதனை என கொண்டாடிகொண்டிருக்கின்றான், நடத்திய பிரேசிலில் கூட ஊழல் சர்ச்சை இல்லை,

ஆனால் நாம் அதனை குடிநீருக்காக சந்திக்க போகின்றோம்,

4 தண்ணீர் பாட்டிலுக்கே இந்த ஊழல், இவர்களிடம் ஒலிம்பிக் போட்டியினை ஒப்படைத்தால், ஒலிம்பிக் கிராமம் என ராஜஸ்தான் பாலைவனத்தைதான் காட்டுவார்கள்.

பதக்கம் வெல்வது அல்ல, வீரர்களின் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்காத நாம் என்ன சாதிக்கபோகின்றோமே தெரியவில்லை.

மற்ற நாடுகளை பார்த்து பெருமூச்சு விட்டுகொண்டு வேலையினை பார்க்க வேண்டியதுதான்.





Monday, August 22, 2016

ரியோ 2016 ஒலிம்பிக்ஸ் : நிறைவு பெற்றது....



Stanley Rajan's photo.



கிட்டதட்ட 2 வாரங்களாக நடந்த ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது, வளரும் நாடுதான், ஆனாலும் உலககோப்பை காலபந்து, ஒலிம்பிக் போட்டி என வரிசையாக நடத்தி அசத்தி இருக்கின்றது பிரேசில். அடுத்த ஒலிம்பிக் ஜப்பானில் அவர்கள் ஒலிம்பிக் கொடி வாங்கிசென்றாகி விட்டது.


ஒலிம்பிக் என்பது எங்களிடம் உடல் ஆரோக்கியமும், போராட்டகுணமும் நிறைந்த சமூகம் இருக்கின்றது என கிரீஸ் உலகிற்கு சொல்ல தொடங்கிய போட்டிகளின் தொடர்ச்சி, நவீன ஒலிம்பிக்கும் அதனைத்தான் சொல்கின்றன.


பொதுவாக பலமான நாடுகள் என கருதபடுபவை அதனை ஒலிம்பிக்கிலும் காட்ட நினைக்கும், நாங்கள் யார் தெரியுமா? என காட்டுவார்கள்.


அதில் 100 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா இந்த ஒலிம்பிக்கிலும் முதலிடம் பிடித்தது, பிரிட்டன் சுதாரித்து எழுந்து இரண்டாமிடம் பிடித்தது


பெரும் சிக்கலில் குறைவான வீரர்களையே அனுப்ப முடிந்த ரஷ்யா 4ம் இடம் பெற்று அசத்தியிருக்கின்றது, முழு வீரர்களும் அனுப்பபடும் பட்சத்தில் அது முதல் மூன்று இடங்களுக்குள் பிடித்திருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை


Stanley Rajan's photo.


ஜெர்மன் 5ம் இடம், ஜப்பான் 6ம் இடம், பிரான்ஸ் 7ம் இடம், தென் கொரியா, இத்தாலி, ஆஸ்திரேலியா என அடுத்த இடங்களை பிடித்து முதல் 10 இடங்களை அடைந்தன‌


சில போட்டிகளில் மானமிக்க மோதல் தெரிந்தது, அமெரிக்க ஈரான், அமெரிக்கா ரஷ்யா, பிரிட்டன் பிரான்சு, அமெரிக்க கியூபா, சீனா ஜப்பான், என நாடுகள் மோதும் போது களம் அதிரத்தான் செய்தது


அப்படியே ஒரு இந்தியனும் பாகிஸ்தானியும் இறுதிசுற்று மல்யுத்தமோ, ஜூடோவோ, குத்து சண்டையிலோ மோதியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இதெல்லாம் நடக்காது, சோம்பேறிகளின் விளையாட்டில் வீரம் காட்டுவோம்.


இந்தியாவிற்கு 67ம் இடம், மொத்தம் பதக்க பட்டியலில் வந்த நாடுகள் 78. ஆக நமக்கு பின்னாலும் 11 நாடுகள் இருக்கின்றன, பெரும் நிம்மதி


ஆனால் அந்த 11 நாட்டிலும் பாகிஸ்தான் இல்லை, வங்கதேசம் இல்லை, இலங்கை இல்லை, எவ்வளவு ஆனந்தம்?


இந்தியா 100 தங்கம் வென்று முதலிடம் வந்திருந்தாலும் இந்த மகிழ்ச்சி கிட்டுமா கிட்டாது, பாகிஸ்தானுக்கு பதக்கமில்லை என்பது எப்படிபட்ட செய்தி, தேன் வந்து பாயுது காதினிலே பாயட்டும்.


எப்படியோ சாக்ஷியும், சிந்துவும் மானம் காத்தார்கள், தீபா கமார்க்கர் அசத்திவிட்டுத்தான் வந்தார். வாழ்த்துக்கள்


வராது வந்த மாமணியாக இங்கும் சிந்து, சாக்ஷி, தீபா என சிலர் சாதித்தாலும் அங்கு தமிழர்களின் தேடல் எப்படி இருக்கின்றது?


அவர் என்ன சாதி? ம்ம்ம்.. எங்கள் சாதி. அட பரிதாபத்திற்குரிய இந்தியாவே, இதற்கா அவர்கள் பதக்கம் வாங்கினார்கள்?, சாதி பெருமை காட்டவா அவர்கள் உயிரை பணயம் வைத்து போராடினார்கள்?


1000 ஆண்டுகள் ஆனாலும் உங்கள் சாதி ஆராய்ச்சி மாறாது, உங்களால் இந்நாடு ஒரு நல்ல விஷயமும் பெறபோவதில்லை


சரி அவர்களை விடுங்கள், மாநிலம் கடந்து சாதி ஆராய்சியில் இறங்கிவிட்டார்கள், விரைவில் அது நாடு கடக்கலாம், நவாஸ் ஷெரிப் எங்கள் சாதி என எவனாவது சொல்லும்போது வாங்கி கட்டுவான். அவர்களை விடுங்கள்


நம்மை போலவே கனவோடு இருந்த நாடுகள் எப்படி பதக்க கனவினை நனவாக்கின.


எப்படி பல நாடுகள் சாதித்தன, ஆப்ரிக்க நாடுகளான கென்யாவும், எத்தியோப்பியாவும் நீண்ட தூர ஓட்டத்தில் அசாத்தியமாக சாதிக்கின்றன, சீனா கேட்கவே வேண்டாம் சமீப 25 ஆண்டுகாலமாக ஒலிப்பிக்கில் அவர்கள் சாதனை வியப்புகுரியது


ஆப்ரிக்கர்கள் சொல்வது இப்படி, எமது மக்களிடம் திறமை இருக்கின்றது, வெளிநாட்டு பயிற்சியாளர்களை வரவழைத்து நல்ல பயிற்சி கொடுத்தோம், அவர்கள் சாதிக்கின்றார்கள்.


சீனா 30 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டில் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை, ஆனால் பின்னாளில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை குவித்து பயிற்சி அளித்தது, அவர்களின் உடல்வாகு எதற்கெல்லாம் சரி வருமோ அதிலெல்லாம் சாதித்தார்கள், தென் கொரிய நிலையும் அப்படியே.


அதாவது நல்ல பயிற்சியாளர்களை இறக்குமதி செய்தின்றார்கள், பெரும் பயிற்சி அளிக்கின்றார்கள், சாதிக்கின்றார்கள்.


எமது நாட்டில் பலமாக சமூகம் இருக்கின்றது என அன்று கிரேக்கர்கள் சொன்னதை இந்நாடுகள் இன்று பெருமையாக உலகிற்கு சொல்கின்றன, நாங்களும் பலமானவர்கள். பயிற்சி மட்டும் இல்லை, அதனை பெற்றோம், உயர்ந்தோம்.


நம்மிடம் திறமை இருக்கிறதா என்றால் நிறைய இருக்கின்றது, ஆனால் பயிற்சி? உலகதரமான பயிற்சி? நிச்சயம் இல்லை. அவர்கள் பெரும் வல்லுனர்களை வரவழைக்கின்றார்கள்.


நாம் வெளிநாட்டில் இருந்து யாரை வரவழைக்கின்றோம்


சன்னி லியோன், எமி ஜாக்சன், கத்ரீனா கைப், ஜாக்குலின் பெர்னாண்டஸ்


பின் எது வளரும்?


சினிமாதான் வளரும், அதுதான் வளர்ந்துகொண்டிருகின்றது, இந்த இறக்குமதிகளின் திறமையினால் இன்னும் எதெல்லாம் வளருமோ தெரியவில்லை
















Saturday, August 20, 2016

மலேசியருக்கும் தங்க பதக்க ஏக்கம்

நம்மை போலவே மலேசியருக்கும் தங்க பதக்க ஏக்கம் இருந்தது, அவர்களும் ஒலிம்பிக்கில் தங்கம் பெறவில்லை

பேட்மிட்டனில் உலக தரம்வாய்ந்த அவர்கள் வீரர் லீ சாங் வாய் எப்படியும் தங்கம் வெல்வார் என எதிர்பார்ப்பு இருந்தது, அவரும் லின் டானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு வந்தார்.

இன்று அவர் எப்படியும் தங்கம் வெல்வார் என எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் விதி சதி செய்து அவர் வெள்ளியே வென்றார்.

ஒரு வேளை வென்றிருந்தால் திங்கட்கிழமை தேசிய விடுமுறையாக அறிவிக்கபட்டிருக்கும், ஆனால் எதிர்பாரா விதமாக தங்கம் பறிபோனதில் மலேசியா கவலையில் மூழ்கியுள்ளது.

தங்கம் இல்லை, முழுநாள் விடுமுறை இல்லை,தங்கம் திங்கள் விடுமுறையும் சேர்த்து அடித்துவிட்டது, அந்த வென்ற சீன வீரரை நினைக்க நினைக்க எரிச்சல் வருகின்றது.

ஏ சீனாவே எத்தனை தங்கம் கிடைத்திருக்கின்றது?, இதனை ஒன்றையாவது விட்டிருக்கலாம் அல்லவா, பெரும் பேராசை உனக்கு

சரி வெள்ளி கிடைத்திருக்கின்றது அல்லவா, அரை நாளாவது விடுமுறை விடலாம் அல்லவா? என யாராவது கேட்பார்களா என்றால் ம்ஹூம் :)

சாந்தி : தமிழக ஓட்டப் பந்தய வீராங்கனை

வாழும் தமிழக பிரபலங்கள் அவசியமாக எழுத வேண்டிய உயில் என்னவென்றால், தங்களுக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதி அதனை பதிவு செய்துகொள்வது


மனிதர் எந்த பிரபலம் செத்தாலும் அவர் என்மீது மரியாதை கொண்டவர் என தொடங்கிவிடுகின்றார், 70 வருடங்களுக்கு பின் இறந்த எல்லா பிரபலங்களுக்கும் அதே பல்லவிதான்.


ஆட்டோ சங்கர், சந்தண வீரப்பன் மட்டும் விதிவிலக்கு


ஆனாலும் அவர் அலும்பு தாங்க முடியவில்லை,


அன்று கிரிக்கெட் வீரர் ஸ்ரிகாந்தினை எப்படி கொண்டாடினாரோ அப்படியே இன்று சிந்துவிற்கு சிந்து பாடிகொண்டிருக்கின்றார், பாடட்டும்


ஆனால் ஓட்டபந்தய வீராங்கனை சாந்தி வெல்லும்பொழுது பரிசளித்து மகிழ்ந்த அவர், அதன் பின் அவள் அவமானபட்டு
பதக்கம் பறிக்கபட்டபொழுது இறுதிவரை மூச் விடவில்லை.


FB_IMG_1471706431553


அவள் ஆணா பெண்ணா என அவமான சர்ச்சை வெடித்து அவள் அவமானபட்டபொழுது ஒரு கருத்தும், ஒரு ஆதரவும் தமிழகத்தில் இல்லை, பிடி உஷா என்ன ஜெயப்பிரதா போலவா இருந்தார், இதோ ஆப்ரிக்க வீராங்கனைகள் எல்லாம் ஏஞ்சலினா ஜோலிய்காக இருக்கின்றார்கள்


அந்த பெண்ணிற்காக வாதாடி அவளை காப்பாற்றி இன்று ஒலிம்பிக் அனுப்பி இருந்தால் இன்று நிச்சயம் அவள் பதக்கம் பெற்றிருப்பாள், டோகாவில் அவள் சாதனை அப்படி.


இன்று ஜெயா வழக்கினை விழுந்து விழுந்து அன்பழகனை விட்டு நடத்துபவர்களுக்கு, கனிமொழிக்காக ராம்ஜெத்மலானியினை அழைத்து வாதாடுபவர்களுக்கு,


தயாளு அம்மாள் அரை பயித்தியம் என மருத்துவ சான்றிதழ் கொடுப்பவர்களுக்கு சாந்திக்கு ஒரு பரிசோதனை செய்து வழக்கு நடத்த எவ்வளவு நேரமாகும்? செய்யமாட்டார்கள். தமிழகமும் கேட்காது


ஆனால் தெலுங்கு தேச பெண் வென்றால், ஹரியான பெண் வென்றால் வேலுநாச்சியார் ரேஞ்சிக்கு பேசிகொண்டிருப்பார்கள்.


இந்திய அளவில் பெயர் பெற்ற கலைஞர் நினைத்திருந்தால், அதுவும் மத்திய அரசினை ஆட்டுவித்திருந்த நிலையில் நினைத்திருந்தால் அப்பெண்ணுக்கு ஒரு நியாயம் சொல்லி, இன்று அவளை ஒலிம்பிக்கில் ஓட வைத்திருக்கலாம்தான்


இதனை பற்றி எல்லாம் நாம் பேச கூடாது


தானாக யாராவது வென்றவர்களுக்கு இந்தியராக வாழ்த்துவார், தமிழனாக தாலாட்டுவார்,


ஆனால் அவர்களுக்கு சிக்கலென்றால் அன்னாரை காணவே முடியாது.


அவர் அப்படித்தான் விடுங்கள்.


ஆனால் ஒன்று புரிகின்றது, ஒரு காலத்தில் கருப்பர்களை விலங்கினும் கீழ் நடத்திய அமெரிக்கா இன்று அவர்களை அரவணைத்து அவர்கள் பலத்தில்தான் முண்ணணியில் நிற்கின்றது


இரண்டாம் இடம் பிடித்திருக்கும் பிரிட்டனும் அப்படியே தான் ஒலிபிக்கில் ஜொலித்துகொண்டிருக்கின்றது


சாதி வரையரையும், ஏழை எளியவர் எனும் ஒரு வகை வர்க்கபேதமும் ஒழிந்தால் நிச்சயம் இந்தியாவும் ஒலிம்பிக்கில் இந்தியாவால் பதக்கம் குவிக்க முடியும்.


ஒலிப்பிக்கில் கருப்பு மங்கைகள் தங்கம் வெல்லும் பொழுதெல்லாம் மனம் சாந்தியினை நினைத்துதான் பார்க்கின்றது.


சாந்தியினை நினைக்கும் பொழுதெல்லாம் அதுதான் நினைவுக்கு வருகின்றது, கூடவே "அவரின்" நினைவும் வந்து தொலைக்கின்றது.

Friday, August 19, 2016

உசேன் போல்ட் : குதிரையின் ஆவி பீடித்திருக்கலாம்...



ஒலிம்பிக் நிச்சயம் மனிதர்களுக்கானது, உசேன் போல்ட் போன்ற அனுமாஷ்ய சக்திகளுக்கு அல்ல‌


ஒரு மனுஷன் இப்படியா ஓட முடியும்? மனிதருக்கு ஏதும் குதிரையின் ஆவி பீடித்திருக்கலாம், பெல்ப்ஸ் என்பவருக்கு நிச்சயம் சுறாவின் ஆவிதான், ஊக்க மருந்துக்கு சில சோதனைகள் இருப்பது போல இனி இம்மாதிரி ஆட்களுக்கு மாந்ரீக சோதனையும் அவசியம்.




[caption id="attachment_2335" align="aligncenter" width="960"]us உசேன்  போல்ட்[/caption]

இல்லாவிட்டால் ரோபோவா இல்லையா எனும் சோதனையும் அவசியம்.





கடலில் மீன்களோடும் கானகத்தில் மான்களோடும் ஓடவேண்டியவர்களை எல்லாம் மனிதர்களோடு போட்டியிட சொன்ன அந்த ஒலிம்பிக் கமிட்டியினை வன்மையாக கண்டிக்கின்றோம். இரண்டாமிடம் வருபவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது, அவ்வளவு இடைவெளில் வருகின்றார்கள்.

சளைக்காமல் ஓடும் கென்யர்களும், எத்தியோப்பியர்களும் கடல் மட்டும் இல்லை என்றால் ஓடியே பிரேசிலில் இருந்து தாய்நாட்டுக்கு வந்துவிடுவார்கள் போல , 10 ஆயிரம் மீட்டர் ஓடுகின்றார்கள் உடலில் ஒரு களைப்பு தெரிவதில்லை.

பயிற்சி எடுப்பதெல்லாம் வரிகுதிரை பின்னாலும், சிறுத்தை புலி பின்னாலும் ஓடி என்றால் இப்படித்தான் சளைக்காமல் ஓடுவார்கள்.

நீச்சல் டைவிங்கிலும், ஜிம்னாஸ்டிக்கிலும் சில வீராங்கனைகள் உடலினினை வளைக்கும்பொழுதும், சுற்றிவிட்ட பம்பரமாக சுழன்று விழும்பொழுதும், மயக்கமே வருகின்றது,

பிறந்த உடனே சுழற்றி தூக்கி எறிந்து விளையாடாமல் இது சாத்தியமில்லை, நமது ஊராக இருந்தால் அந்த‌ பயிற்சியாளர்களை வன்கொடுமை சட்டத்தில் கைதுசெய்துவிடுவோம்.. வீராங்கனையின் பாட்டியே "என் பேத்தி பாவம்........கொல்லவா பார்க்கிறாய்" என பயிற்சியாளரை ஓட விரட்டிவிடுவாள், நாம் அப்படித்தான்.

பல வகையான போட்டிகளை ஒலிம்பிக்கில் பார்க்கும் போது, அது விளையாட்டு என தெரிகின்றது, கவனம். நொடி தாமதிக்கா வேகம், அதிலொரு சூட்சுமம், என எல்லா விளையாட்டுக்களும் சுவாரஸ்யமாக செல்கின்றன,

அப்பொழுது 50 ஓவரிலும் மட்டை போட்டு நின்ற கவாஸ்கர், 4 அடித்துவிட்டு ஸ்டைலாக நின்ற தெண்டுல்கர், ஸ்பின் பந்து போட்டுவிட்டு நிதானமாக முகம் துடைக்கும் கும்ளே போன்ற முகங்களும் வந்து போகின்றன‌

இருக்கட்டும்

நல்லவேளையாக கிரிக்கெட் ஒலிம்பிக்கில் அனுமதிக்கபடவில்லை, அது வேண்டவும் வேண்டாம். ஒலிம்பிக் கால்பந்தினையே பார்க்க யாருக்கும் சுவாரஸ்யமில்லை. இது தடகளம், கால்பந்து தனியாக ரசிக்கவேண்டியது என கோட்டில் விட்டுவிட்டார்கள், கடமைக்கு நடந்துகொண்டிருக்கின்றது

ஒருவேளை கிரிக்கெட் அனுமதிக்கபட்டிருந்தால் இந்த சிந்து, தீபா, சாக்ஷி, போன்றோர் எல்லாம் வெளியில் தெரிந்திருப்பார்களா என்றால் இல்லை, நிச்சயம் இல்லை

ஒலிம்பிக் கமிட்டிக்கு நமது கோரிக்கை எல்லாம், இந்த கிரிக்கெட்டினை தயவு செய்து ஒரு காலமும் உள்ளே அனுமதித்துவிடாதீர்கள்.

அது எங்களுக்கு தனிபட்ட இம்சையாகவே இருந்து தொலையட்டும்

அவனவன் போலி ஊக்க மருந்தினை உட்கொண்டுதான் ஒலிம்பிக்கில் சிக்குவான், இந்தியா போலி மருத்துவரையே அனுப்பி சிக்கி இருக்கின்றது

ஆனாலும் வீரர்கள் போலி அல்ல என்பதனை தீபா கமார்கர், சாக்ஷி மாலிக், ஶ்ரீகாந்த், சிந்து போன்றோர் நிரூபித்து மானம் காத்துகொண்டிருக்கின்றனர்.





சிந்து பூபாளம்




இந்தியாவிற்கு இப்பெயர் வர காரணமே சிந்து நதி, அதுதான் இந்தியாவின் முதல் அடையாளம்


இன்று ஒலிம்பிக்கில் இந்திய அடையாளமாக பூப்பந்துபோட்டியில் ஜொலித்துகொண்டிருக்கும் சகோதரி சிந்துவினை வாழ்த்துவோம்





அது தங்கமோ, வெள்ளியோ எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் இந்த சிந்து நமது தேசத்தின் வைரம், சர்வதேச மகளிரில் இந்திய மகளிர் நிலையினையும் நிறுத்திவிட்ட மாமணி வாழ்க‌

[caption id="" align="aligncenter" width="645"]Stanley Rajan's photo. சிந்து : தங்கத்தாரகையே வெல்க வெல்க வெல்க !!![/caption]

காலிறுதியில் லிண் டன் எனும் சீனருக்கு சவால் விட்டு தோற்ற அந்த ஸ்ரிகாந்தினை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

காரணம் லிண் டான் ஒரு பூபந்த்து அரக்கன், கடந்த பல வருடங்களாக எங்கெல்லாம் பூப்பந்து நடக்கின்றதோ அங்கெல்லாம் அவர் தான் சாம்பியன். பெல்ப்ஸ் போல உசேன் போல்ட் போல அவர் மகா பெரும் முத்திரை

அவருக்கு கடும் சவால் கொடுத்தார் ஸ்ரிகாந்த், ஒரு செட்டில் அவரை வீழ்த்தியதும் அரங்கம் அதிரத்தான் செய்தது, லிண்டான் முகம் அப்படி கலங்கியது, பின்னர் பெரும் அனுபவஸ்தரான லிண்டான் இளம் வீரரான சிரிகாந்தினை மடக்கினார் எனினும் அவர் போராடிய போராட்டம் கடுமையானது

லிண்டான், அவரை எதிர்க்கும் லீ சாங் வெய் எல்லோருக்கும் இது கடைசி ஒலிம்பிக், ஆனால் ஸ்ரிகாந்துக்கு முதல் ஒலிம்பிக், அடுத்த ஒலிம்பிக் அவருக்கானது, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

இளம் வீரர்களின் எழுச்சியில் பெருமை கொள்கிறது எம் தேசம்

என்ன சொல்லுங்கள், அம்மாபெரும் அரங்கில் எல்லா நாட்டு கொடிகளும் பறக்கின்றன, ஆனால் நமது கொடியுடன் நமது வீரர்களை காணும்பொழுது ஒரு சிலிர்ப்பும், பெருமையும் வருகிறதல்லவா அதுதான் இந்திய உணர்ச்சி, இந்தியன் எனும் உணர்வு

வெற்றிமேடையில் ஒரு இந்தியன் ஏறிவிட மாட்டானா?, நாம் கரவொலி எழுப்பி ஆர்ப்பரிக்க முடியுமா? என்றொரு மகா எதிர்பார்ப்பு.

ஒரு விஷயம் கவனிக்க முடிகின்றது, சூராதி சூரர்கள் நிரம்பிய இஸ்ரேல் ஒலிம்பிக்கில் பெரும் பதக்கம் குவிக்கவில்லை ஏன்? என்றால் அவர்களோ கள்ள சிரிப்பு சிரிக்கின்றார்கள்.

காரணம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் என பல நாடுகளில் பதக்கம் குவிக்கும் வீரர்களில் பல யூதர்களும் உண்டு, எல்லா நாட்டின் குடிமக்களாகவும் அவர்கள் குவிக்கின்றனர். இஸ்ரேல் வேறு தனியாக குவிக்கவேண்டுமா? நாம் அரேபியாவில் துப்பாக்கி சுட்டு விளையாடி, குண்டு வீசி விளையாடி கொன்றுகுவித்து விளையாடுவோம் என்பது அவர்கள் கொள்கை, இருக்கட்டும்

சிந்து வாழ்த்துகுரியவர் பதக்கம் உறுதி செய்துவிட்டார். சிந்து தொடங்கி வைத்திருப்பது பூபாளம், சிந்து பூபாளம் :)

சிந்து செய்திருப்பது பெரும் சாதனை, ரப்பர் பந்தாக துள்ளி எழும் ஜப்பானிய வீராங்கனையினை சாய்ப்பது பெரும் விஷயம், ஆச்சரியமும் கூட. திறமைதான் ஆச்சர்யத்தின் திறவுகோல் என்பதால் அது சாத்தியமாயிற்று, மனதார வாழ்த்தலாம்.

கொஞ்சநாட்களாக பேட்மிட்டன் கோப்பைகள் ஆசியாவினை சுற்றி வருவதால் ஸ்பெயின் வீராங்கனையினை தட்டி அவர் தங்கம் பறிப்பதும் சாத்தியமே.

[caption id="" align="aligncenter" width="634"]Stanley Rajan's photo. ஶ்ரீகாந்த்[/caption]

சிறப்பு வாழ்த்துகுரியவர் யாரென்றால் நிச்சயம் ஸ்ரிகாந்த், காரணம் லிண் டான் எனும் முரட்டு புலியினை தகிக்க வைத்தவர் அவர், கடுமையாக திணறடித்தவர் அவர்

இந்தியாவெங்கும் சிந்து பூபாளம் பாடும் இந்த நேரத்தில், நிச்சயம் கொண்டாடபட்டு ஊக்குவிக்கபடவேண்டியர் ஸ்ரிகாந்த் என்பதில் மாற்றுகருத்தில்லை

அலெக்ஸாண்டரிடம் தோற்ற போரஸ் போல அது பெருமையான தோல்வி, ஆயிரம் தங்கபதக்கங்களுக்கு சமம்.
















Thursday, August 18, 2016

வாழ்த்துக்கள் ஷாக்‌ஷி மாலிக்




Summer Olympics

ஆலயங்களில் வெண்கல மணியோசை எழுப்பி கடவுளை வழிபடும் தேசமிது.

கடவுளும் அந்த வெண்கலத்தை ஒலிம்பிக் பதக்கமாகவே பரிசளித்திருக்கின்றார்.

அதே வெண்கல மணிபோல தேசமெங்கும் ஒரு திருப்தியின் ஓசை கேட்டுகொண்டே இருக்கின்றது


வாழ்த்துக்கள் ஷாக்‌ஷி மாலிக் , தேசத்தின் வீர மகளுக்கு மல்யுத்த வணக்கம்.





Monday, August 15, 2016

துளசி தர்மலிங்கம் : ஒலிம்பிக்கில் தமிழர்

ஒரு தமிழர் ஒலிம்பிக்கில் விளையாடி இருக்கின்றார், அதுவும் ஈழதமிழர்.

அவர் பெயர் துளசி தர்மலிங்கம், ஜெர்மன் வாசி அப்படியும் கத்தார் அணிக்க்காக குத்துசண்டையில் களமிறங்கி இருக்கின்றார். மங்கோலிய வீரரிடம் தோல்வி தழுவி வெளியேறிவிட்டார்.

ஒரு தமிழன் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டிருக்கின்றார், ஆனால் தமிழக உணர்வாளர்களிடம் ஒரு சத்தமும் இல்லை, தமிழக ஊடகங்களிலும் ஒரு பெட்டி செய்தியும் காணோம்.

ஒரு தமிழின உணர்வாளர்களிடமிருந்து ஒரு வாழ்த்தையும் காணோம், ஒரு பாராட்டினையும் காணோம்.

இதுதான் இவர்கள் உலகெல்லாம் உள்ள தமிழர்களை எல்லாம் ஒன்று சேர்கின்றோம் என கத்தும் அழகு.

ஏன் இவரை மறந்தார்கள்? அவர் மங்கோலிய வீரருடன் மோதியதால் விட்டுவிட்டார்களோ?

ஒருவேளை அவர் இந்திய வீரர்களுடன் மோதி இருந்தால் தமிழக ஊடகங்களில் வந்திருப்பார், அங்கிள் சைமன் அவருக்கு போன வருடம் சோடா உடைத்துகொடுத்தது போல பேட்டி கொடுத்திருப்பார்

ஒருவேளை பதக்கம் வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? வைகோ ஒரு படம் வெளியிடுவார்.

வழக்கம் போல கலைஞர் தொடங்கி இருப்பார்

அவர் என்மீது வைத்த நம்பிக்கை அளப்பறியது, இறுதி யுத்த காலத்தில் அவர் எனக்கு விடுத்த கோரிக்கையும், நான் கண்ணீர் விட்டபொழுது அவர் சொன்ன வார்த்தைகளும் மறக்க கூடியதல்ல‌

தர்மலிங்கம் என் மீது வைத்திருக்கும் மரியாதை அபரிமிதமானது என்ற ரீதியில் இருந்திருக்கும்

தீபா கர்மாகர்

"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது"

உனக்காகவே எழுதபட்டது சகோதரி தீபா கமர்க்கர்,

FB_IMG_1471254033120

பதக்கம் கிடக்கின்றது, யாருக்கு வேண்டும்? அது இன்று இல்லையேல் நாளை.

இந்திய பெண்களும் ஜிம்னாஸ்டிக்கில் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டிவிட்ட அந்த ஒற்றை சாதனை போதும், இனி கிளம்பும் இந்திய பெண்களுக்கு நீதான் ஜிம்னாஸ்டிக் தாய்

https://youtu.be/H3a_ddOUvRo

பதக்கம் தவறினாலும் கொஞ்சமும் தயங்காமல் அடுத்த ஜப்பான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என சொல்லும்போது

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து" என்றே பாராட்ட தோன்றுகின்றது

வடகிழக்கு மாநில அரசியலில் சில சர்ச்சைகள் இருக்கலாம், ஆனால் அதனின்று உதித்து இந்திய அடையாளமாக பிரேசிலில் மின்னிய எமது தேச மகளுக்கு

சுதந்திர தின வாழ்த்துக்களோடு மிக சிறப்பான வாழ்த்துக்கள்.

உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது இந்த தேசம்

(எவனாவது வந்து வடகிழக்கு மாநில சர்ச்சைகளை, போராட்டத்தை ஒழிக்க மோடி பார்ப்பண அரசால் திட்டமிட்டு உருவாக்கபட்டவர் தீபா என ஒப்பாரி வைத்தால் அவன் எங்கிருந்தாலும் தேடி வந்து ............... )