Sunday, October 23, 2016

கபடியில் இந்தியா சாதித்திருக்கின்றது.. வாழ்த்துவோம்...

https://youtu.be/LawUCYfZb2I




கபடி போட்டியில் இந்தியா சாம்பினாகிவிட்டதாம், எல்லோரையும் போல நானும் மகிழ்கின்றேன்

அது தமிழர் விளையாட்டு, இன்றல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் பரவிய நாடுகளில் அவ்விளையாட்டு உண்டு, இந்தோனேஷிய, போர்னியோ மலேசியா பெண்கள் நமது ஊர் சுட்டிக்கல்லினை, பாண்டி ஆட்டத்தை அழகாக ஆடுவது போல கபடியினை அந்த ஆண்கள் கபடியினை அழகாக ஆடுகின்றார்கள்

கபடி அவர்கள் மொழியில் குடுகுடு சடுகுடு என தமிழ்பெயரிலே அமைந்திருக்கின்றது.


அப்படி மிக அருமையான விளையாட்டு 1990களில்தான் ஆசிய போட்டிகளில் இடம்பெற்றது, அதுவும் அன்று விளையாட்டு துறையில் கோலோச்சிய தமிழன் சிவந்தி ஆதித்தனால் சாத்தியமானது

கபடி விளையாட்டினை பொறுத்தவரை குமரி, நெல்லை தான் விளைநிலம், மிக சிறந்த வீரர்கள் அங்குதான் உருவாகுவார்கள், உதாரணம் முன்னாள் கபடி கேப்டன் ராஜரத்தினம் போல நிறையபேரினை சொல்லமுடியும்

ஹாக்கியின் விளைநிலம் பஞ்சாப் எனின், நிச்சயமாக கபடியின் விளைநிலம் குமரியும், நெல்லையுமே

ஜனவரியில் இந்திய சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு டெல்லி வீரர் கலக்கிகொண்டிருந்தார், நான் இந்தியாவில் டிவியில் பார்த்துகொண்டிருந்தேன், அவர் பெயரினை பார்க்கும்பொழுது அது அப்படியே நெல்லை அடையாளத்தினை கொண்டிருந்தது.

கபடியில் இந்தியா சாதித்திருக்கின்றது, வாழ்த்துவோம். ஈரான் போன்ற முரட்டு அணியினை வீழ்த்துவது நிச்சயம் சாதனை, இந்தியா அதனைத்தான் செய்து கோப்பையினை வென்றிருக்கின்றது

தென்னகத்தில் கபடியில் மிகசிறந்த விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள், இன்றிருப்பது போல மிகபெரும் அங்கீகாரம் அன்றிருந்தால், ஒரு நல்ல கோச் கண்ணில் பட்டிருந்தால் அவன் வரலாறு மாறி இருக்கும்

அவன் கன்னியாகுமரி முத்துலிங்கம்

கபடிக்கென்றே பிறந்தவன் அவன், எல்லா கபடியிலும் 1980களில் அவனே வென்றான். லிங்கம் இறங்கிவிட்டானென்றால் அந்த அணியினை வெல்ல யாரல் முடியும?

கபடி விளையாட்டின் கடவுள் போலவே அவன் ஆடிகொண்டிருந்தான், ஆனால் எல்லாம் தெருமுனை விளையாட்டு, அவனை 5க்கும் பத்துக்கும் அழைத்து சென்று நடத்தபட்ட போட்டிகள்

ஆனால் அவனே அன்று தென்னகத்தின் பிராதன கபடி வீரன், தென்னகத்தின் கபடி போட்டியின் வெற்றியினை நிர்ணயிக்கும் சக்தியாக அவனே இருந்தான்

ஆனால் இந்த அளவு அங்கீகாரமில்லை, விளையாடினான் பெயர்பெற்றான், ஆனால் முறையாக நடத்தபடா போட்டி ஒன்று அவனை கொலைகுற்றவாளி ஆக்கிற்று

அதன்பின் அவன் நடவடிக்கைகள் மாறி, குமரிமாவட்ட பெரும் குற்றவாளியாகி சிறையிலே கொல்லபட்டான்

அன்றைய காலத்தில் ஒரு நல்ல கோச் கண்ணில் மட்டும் பட்டிருப்பானென்றால் மிக பெரும் உலகளாவிய கபடி விளையாட்டு வீரனாக அவன் பெயர் பெற்றிருப்பான்

ஆனால் கடலில் பெய்த மழை போல அவன் விளையாட்டு அன்று வீணாய் போய்விட்டது.

இன்று இந்திய கபடி அணி உச்சபட்ச வெற்றி பெற்றிருக்கும்பொழுது அவனை போன்று அங்கீகாரமின்றி வழிமாறிய எத்தனையோ பேரினை நினைவு வருகின்றது.

காலத்தால் முந்தி பிறந்த அவர்கள் விதி அப்படி இருந்திருக்கின்றது.







https://youtu.be/9f7RGTL_Tyk

No comments:

Post a Comment