Wednesday, October 26, 2016

யாழ்பாண மாணவர்கள் சுட்டுப் படுகொலை



யாழ்பாண மாணவர்கள் சுட்டுப் படுகொலை.


அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து சென்னையில் மாபெரும் போராட்டம்: தி.வேல்முருகன்


ஒரு காலத்தில் யூதர், ஜப்பானியர் அடுத்து அறிவார்ந்த இனம் என தன்னை சொல்லி கொண்டது யாழ்பாணம் ,


JJJ (Jews, Japanese and Jaffna) என சொல்லி பெருமைபட்டு கொண்டார்கள்


எல்லாம் 1970 வரைக்குமே, பின் போராட்டம் வன்முறையாக மாறியபின் எல்லாம் மாறிற்று, அதுவும் 1975க்கு பின் நிலமை மகா மோசம்.


1975க்கு பின் யாழ்பாணத்தில் வன்முறை என்பது புதிதல்ல, ஆல்பர்ட் துரையப்பா எனும் தமிழனை தமிழன் பிரபாகரன் சுட்டுகொன்றதிலிருந்து அது தொடங்கிற்று


பின் எண்ணற்ற படுகொலைகளை அது கண்டது, உச்சமாக சபாரத்தினத்தோடு சேர்ந்து 900 போராளிகளை புலிகள் அழித்தது உச்சம்


அதன்பின் மாத்தையா எனும் சக புலியினை சந்தேகத்து பேரில் 600 போராளிகளோடு சுட்டுகொன்றதும் அங்கேதான்


இன்னும் 1400 இந்திய வீரர்கள் இறந்ததும் அங்கேதான், அதன் பின் புலிகளின் ஏகபோகத்தில் கொல்லப்ட்டவர்கள் ஏராளம்


கோழிகுஞ்சு களவெடுத்தவனை எல்லாம் புலிகள் சுட்டுகொன்ற வரலாறு உண்டு, கிட்டு கால் போன கோபத்தில் கந்தன் கருணை இல்லத்தில் 70 போராளிகள் கொல்லபட்ட கோரம் உண்டு


இதனை எல்லாம் கடந்து கருணா பிரிவினை முடக்க நடந்த சண்டையில் 300 கிழக்கு புலிகள் செத்த காவியமும் உண்டு


ஆக எத்தனை தமிழர்கள் தமிழ்புலிகளால் கொல்லபட்டிருக்கின்றனர் என நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்


சமீபத்தில் யாழ்பாண மாணவி விந்தியா மிக கொடூரமுறையில் கற்பழித்து கொல்லபட்டார், அதனை செய்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்


இதற்கு வை.கோ,சீமான், வேல்முருகன் எல்லாம் ஒரு குரல் கண்டித்து எழுப்பியிருப்பார்கள் ????


தினமும் அங்கு வாள்வெட்டு , கொலை , கொள்ளை செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன, தமிழ் குழுக்களே குற்றம் சாட்ட படுகின்றன.


அதாவது ஈழ தமிழன் ஈழ தமிழ்பெண்ணை கற்பழிக்கலாம், ஈழ தமிழன் ஈழ தமிழனை சுட்டுகொல்லலாம் பிரச்சினையே இல்லை.


ஆனால் நள்லிரவில் போலிசார் எச்சரித்தும் நிற்காமல் சென்ற இருவரை சுட்டிருக்கின்றார்கள், பின் அது தவறு என ஐந்து காவலர்கள் கைதும் செய்யபட்டிருக்கின்றார்கள்


இதற்கு இங்கு வேல்முருகன் கொடிபிடிக்க போகின்றாராம்


முன்பு புலிகள் கொலைகளாக செய்த பொழுதும், சென்னையில் பத்மநாபாவினை கொல்லும் பொழுதெல்லாம் இவர்களிடம் சத்தம் இருக்காது


சரி சிங்கள அரசபயங்கரவாதம் என சென்னையில் கொடிபிடிப்பவர்களிடம் , அந்த மாணவி விந்தியாவிற்கு என்ன நடந்தது என கேட்டால் அது சிங்களன் கற்பழிக்கவில்லை அல்லவா? என நகர்ந்துவிடுவார்கள்


முன்பு கம்யூனிஸ்டுகளை கிண்டல் செய்ய ஒரு சொல் வழக்கு உண்டு "மாஸ்கோவில் மழைபெய்தால் இந்தியாவில் குடைபிடிப்பார்கள்" என்பது அது


அப்படி ஈழத்தில் சிங்களன் மாட்டினால் இவர்கள் கொடிபிடிப்பார்கள், தமிழன் என்ன அட்டூழியம் செய்தாலும் கப்சிப்


காரணம் தொழில் பக்தி அப்படி.






No comments:

Post a Comment