Friday, October 21, 2016

அமெரிக்க சாலையோரத்தில் ஹிலாரி நிர்வாண சிலை..





Stanley Rajan's photo.  Stanley Rajan's photo.

 




அமெரிக்க சாலையோரத்தில் ஹிலாரி நிர்வாண சிலை..


உலகில் பெண் எங்கிருந்தாலும் அவளின் முன்னேற்றத்தினை தடுக்க, அவளை மனதால் உடைக்க பயன்படுத்தும் ஆயுதம் இதுவாகத்தான் இருக்கின்றது.


ஒரு பெண் அரசியலில் வந்துவிட்டால் கண்டபடி விமர்சிக்கவேண்டும், அவளின் சொந்த விஷயங்களை எல்லாம் கிளறவேண்டும், முடிந்த அளவு அவளை மனதால் அழசெய்து விரட்டவேண்டும்





அதற்கு அந்தரங்க விஷயங்களை போட்டு தாக்குவது, இம்மாதிரி நிர்வாண சிலை வைத்து அசிங்கபடுத்துவது என உலகளாவிய சிந்தனை ஒன்றுபோலவே இருக்கின்றது

அது தமிழகத்து கிராமமாக இருந்தாலும் சரி, அமெரிக்க அரசியலாக இருந்தாலும் சரி.

வரலாற்றின் முதல் பெண் அதிபரை ஏற்றுகொள்ளமுடியாத ஒரு அமெரிக்கனின் செயல் இது. இதுதான் உலகளாவில் பெண் விடுதலை, பெண்ணியம் என பேசும் அமெரிக்காவின் நிலை

பெண்களுக்கான எதிர்ப்பில் இந்த உலகத்தின் மனநிலை ஒன்றாகவே இருக்கின்றது, அவள் முன்னுக்கு வரவே கூடாது, ஆளும் நிலைக்கு வந்துவிடவே கூடாது

அது அமெரிக்க ஹிலாரியாக இருந்தாலும் சரி..

நமது குஷ்பூவாக இருந்தாலும் சரி,

குஷ்பூ மீது வாரி இறைக்கபடும் சேறுகள் கொஞ்சமல்ல‌

இப்படியாக கரித்து கொட்டி முடிந்தவரை முடக்கபார்ப்பார்கள், ஆனால் இதனால் எல்லாம் அவர்களை முடக்க முடியாது

முதலில் ஹிலாரி அதிபராகட்டும்,

அதன் பின் தமிழகத்தில் குஷ்பூ முதல்வராகட்டும்

அதன் பின் மாதர் தம்மை இழிவு செய்யும் மடையர்கள், தானாகவே கொளுத்திகொள்வார்கள்















No comments:

Post a Comment