Tuesday, October 25, 2016

இதுதான் உலக அரசியல் மர்மம், ஒன்றில் தொடங்கி ஒன்றில் முடியும்

ஈழ தமிழர்களுக்கும், ஈழ போராட்டத்திற்கும் கலைஞர் துரோகம் செய்தார் என பலர் புலம்புகின்றனர், கலைஞர் பற்றி எழுதினாலே அவர் ஈழதுரோகி என சொல்லிகொண்டே இருக்கின்றனர்.


அவர் தொடக்க காலத்தில் ஈழபோராட்டத்தை ஆதரித்த விதம் குறித்தும், அமைதிபடை அனுப்பும்பொழுதே, அதாவது புர்ச்சி தலைவர் அமைதியாக கம் மென்ன்று இருந்த காலத்திலே அதனை எதிர்த்தவர் கலைஞர்.


பின்னாளில் புலிகள் பத்மநாபா, ராஜிவ் கொலை என திசைமாறி செல்ல அமைதியானார் கலைஞர், 2009 இறுதியுத்தத்தினை கலைஞர் அல்ல, மன்மோகன் சிங் நினைத்தாலும் தடுத்திருக்கமுடியாது. அதனை நடத்தியது பெரும் கைகள்.


சரி இப்பொழுது உண்மையில் ஈழம் அமைய வாய்பிருந்தபொழுது துரோகம் செய்தது யார் என பார்க்கலாம்


அதாகபட்டது ராஜிவ் கொலைக்கு பின் இந்தியா ஒதுங்க இடம்பார்த்து அடித்தார் சந்திரிகா, யாழ்பாணத்தினை விட்டு ஓடி வன்னியில் பதுங்கினர் புலிகள். அது புலிகளுக்கு பெரும் அடி, காரணம் யாழ் என்பது பணக்கார பூமி, வசூலில் அள்ளலாம் இன்னொன்று ஈழ தமிழரின் இதயம் அது.


அப்படி வன்னிபகுதியில் அடைபட்டு திகைத்து நின்ற புலிகளுக்கு வாய்ப்பு வேறு உருவில் வந்தது.


அது இந்திய அணுகுண்டு வெடிப்பு, வாஜ்பாய் அணுகுண்டினை வெடித்து வெற்றி வெற்றி என முழங்கவும் எங்கோ யாருக்கோ வலித்தது, விட கூடாது இனி இந்தியா நிம்மதியாக இருக்கவே கூடாது, ம்ம்ம்ம் அதன் எதிரிகளை எல்லாம் உசுப்புங்கள்


உடனே பாகிஸ்தான் அணுகுண்டு வெடிக்கின்றது, இந்தியாவின் நண்பனான நேபாளத்தில் நிலை மாறுகின்றது, தெற்கே இலங்கையில் புலிகள் புதுபலம் பெறுகின்றனர், நவீன ராக்கெட் லாஞ்சர்கள் அதாவது சிங்களனிடம் இல்லா ஆயுதங்கள் கிடைக்கின்றன.


இதுதான் உலக அரசியல் மர்மம், ஒன்றில் தொடங்கி ஒன்றில் முடியும்


ஆயுதம் நொறுக்கிய புலிகள், தங்கள் போராட்டத்தின் மிகபெரும் வெற்றியான யானை இறவு முகாமினை முடக்குகின்றார்கள். சிங்களம் செயல் இழந்து நிற்கின்றது


புலிகள் வரலாற்றில் அது பெரும் வெற்றி, ஒப்புகொண்டே ஆகவேண்டும் மாபெரும் வெற்றி


அதோடு யாழ்பாணம் துண்டிக்கபடுகின்றது, இனி அங்கிருக்கும் சிங்கள வீரர்களை நொடியில் விரட்டி யாழ்பாணத்தை கைபற்ற புலிகளுக்கு மிக குறைந்த நேரமே ஆகியிருக்கும்


அப்படி கைபற்றிவிட்டால் ஈழ பிரகடனம் செய்துவிடலாம், வன்னியிலே தனி ஈழ அறிவிப்பு செய்திருக்கலாம், ஆனால் யாழ்பாணம் இல்லா ஈழம் அமைவதை யாரும் விரும்பதில்லை


அப்போரில் கிட்டதட்ட 50,000 சிங்கள வீரர்கள் சாகும் நிலை இருந்தது, புலிகள் வளைத்திருந்தார்கள். குடிநீரை கூட தடை செய்திருந்தார்கள். சிங்களம் கதறி அழுதுகொண்டிருந்தது.


இன்னும் சிலமணி நேரங்களில் ஈழ பிரகடனம் பிரபாகரன் செய்வார் எனும் நிலை,


"உன் காலடியில் ஒரு சிறிய நாடு, அதிலொரு சிறிய குழு உன்னை மீறி, உன் ராணுவத்தை விரட்டி, உன் பிரதமரை கொன்று தனிநாடு அமைக்க போகின்றது


ஹிஹிஹிஹி உனக்கெல்லாம் அணுகுண்டா? " என பல நாடுகள் இந்தியாவினை நோக்கி சிரிக்க காத்திருந்த நேரம்.


இந்நேரத்தில்தான் இந்தியாவிடம் மறைமுகமாக உதவி கோரியது சிங்களம், வாஜ்பாய் இந்திய பிரதமர்.


சிங்கள வீரர்களை பத்திரமாக மீட்கும் பொருட்டும், யாழ்பாணத்தை புலிகள் மீட்க கூடாது எனும் நோக்கிலும் சில செய்திகளை சொல்லி எச்சரிக்கை செய்தது இந்தியா, இல்லாவிட்டால் இந்திய கப்பல்கள் அவர்களை மீட்கும் என மிரட்டியது


வேறுவழி இல்லா புலிகள் கண்ணீரோடு வழிக்கு வந்தனர், சிங்கள வீரர்களை விடுவித்து, யாழ்பாணம் நோக்கிய முன்னேற்றத்தையும் நிறுத்தினர்.


அன்று அந்த 25 வருட போராட்டம் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தபொழுது, அதனை இந்திய தலையீடு தடுத்தபொழுது, வாஜ்பாய் அரசில் பங்குபெற்றிருந்தவர் யார்?


சாட்சாத் வை.கோப்பால் சாமி


ஒரு சத்தம் இல்லை, ஒரு ஒப்பாரி இல்லை ஒன்றுமே இல்லை, மகா அமைதி. இவரின் கட்சிக்காரர்கள் அன்று மத்திய அமைச்சர்கள்


அன்றெல்லாம் ஈழவிரோத பிஜேபி, தமிழர் விரோத மத்திய அரசு என்றெல்லாம் சத்தமே இல்லை


இந்த சீமான் அன்று பாரதி ராஜா முன்னால் இருந்து கிளாப் அடித்துகொண்டிருந்தார்,


இன்று அவரிடம் கேளுங்கள் அப்படி 40 ஆயிரம் சிங்களர்கள் எப்படி தப்பினார்கள் என்று


"என் அண்ணனின் இரக்கம் அப்படி" என சிரிக்காமல் கூசாமல் பொய் சொல்வார்.


இறுதியுத்த ஒப்பாரி பிரபாகரன் உயிரை காக்க எழுப்பபட்டது, ஆனால் வாஜ்பாய் காலத்தில் ஈழம் அமையும் சாத்தியம் அருகில் இருந்தும் செய்யபட்டதுதான் பெரும் துரோகம்


அந்த மந்திரிசபையில் அசையாமல் இருந்தவர் எல்லாம் இன்று கலைஞரை தூற்றிகொண்டிருக்கின்றார், எல்லாம் கால கோலம்.

No comments:

Post a Comment