Monday, October 24, 2016

குடும்ப அரசியல்....








Stanley Rajan's photo.






உத்திரபிரதேசம் : அகிலேஷ் - முலாயம்








Stanley Rajan's photo.






 தமிழ் நாடு : ஸ்டாலின் - கருணாநிதி

உத்திரபிரதேச மாநில பெரும் சக்தியான சமாஜ்வாதி கட்சி மேலிடத்தின் குடும்ப சண்டையால் உடைகின்றது.


அடிக்கடி கலைஞர் குடும்ப அரசியல் செய்கிறார், அப்படி இப்படி என குதிப்பவர்கள் கொஞ்சம் யோசிக்கலாம், மும்முறை அக்கட்சி பெரும் பிளவினை சந்தித்தது, அதாவது சம்பத்காலம், ராமசந்திரன் காலம், வைகோ காலம் என அது பிளந்தது


(டி.ராஜேந்தரின் லதிமுக எல்லாம் பிரிவிலே வராது, அது வேறுரகம்.)


அவை எல்லாம் என்ன அவரின் குடும்ப சண்டையால் நடந்ததா?


ஒரு கட்சி பலமாக இருக்கிறதென்றால், அரசியல் களத்தில் பல சூதுக்கள் நடக்கும், எப்படி எல்லாம் உடைக்கமுடியுமோ அப்படி எல்லாம் முயற்சிகள் நடக்கும்.


அதற்கு இடம்கொடுக்காமல் கட்சியினை நகர்த்துவதும், சிக்கிவிட்டால் சேதாரத்தினை சரிசெய்து கொண்டு செல்லவும் பெரும் சாமார்த்தியம் வேண்டும்.


குடும்பத்தாரை கட்சியில் அனுமதிப்பதும் பெரும் அழிவுக்கு இட்டு செல்லும், உபி சம்பவம் அதனைத்தான் சொல்கின்றது, அதனை கடந்து கட்சியினை கொண்டு செல்லவும் ஒரு திறமை தேவை


காமராஜரே பின்னாளில் கலைஞரை குறைத்து மதிப்பிட்டதை உணர்த்தார், ஆயிரம் மறைமுக நடவடிக்கைகளை எடுத்துபார்த்த இந்திரா, பின்னாளில் பெரும் வியப்பாகவே கலைஞரை கண்டார், பின்னர் வந்த தலைவர்களுக்கும் கலைஞர் வியப்பானவராகவே தோன்றினார்


இன்று தலைக்குமேல் கை வைத்திருக்கும் முலாயம் சிங் யாதவும் இன்று கலைஞரை கண்டு ஆச்சரியபட்டுகொண்டிருப்பார், எப்படி இவரால் குடும்பத்தாரை கட்சியில் வைத்தும் அதனை கட்டுகோப்பாக வைத்திருப்பது சாத்தியம்???


பன்னீர்செல்வம் மும்முடி சூட்டிவிட்டார், ஸ்டாலினை கலைஞர் அனுமதிக்காதது ஏன்? என பலர் புலம்பலாம்


ஆட்சியில் அமர்ந்தால் என்னென்ன சிக்கல் கட்சிக்கும் ஆட்சிக்கும் வரும் என அனுபவபூர்வமாக உணர்ந்தவர் கலைஞர், அதனால்தான் அவர் சில விஷயங்களில் படு ஸ்டிரிக்ட்.


பலர் சொல்லிகொண்டிருக்கின்றான், அண்ணா இல்லையென்றால் கலைஞர் வந்திருக்கமுடியுமா? அண்ணா தன் குடும்பத்தாரை கட்சிக்குள் அனுமதித்தாரா? என பல கேள்விகள்.


அண்ணா காலத்தில் பெரும் ஜாம்பவான்கள் கட்சியில் இருந்தனர், அதனில் தன் குடும்பத்தாரின் தேவை அண்ணாவிற்கு இருக்கவில்லை


இன்னொன்று அண்ணா ஆட்சியில் இருந்ததே மிக குறுகிய காலம், பெரும் சவால் என ஏதும் அவர் சந்திக்கவில்லை


கலைஞர் முக முத்துவினை கூட கட்சிக்கு இழுக்கவில்லை, திரைபடங்களில் முயற்சித்தார், அது தோல்விதான் ஆனால் கலைஞர் மனம் ஒடியவில்லை.


முரசொலிமாறன் கலைஞர் கைபிடித்து வளர்ந்த கட்சிக்காரன், கலைஞரில் பாதி.


கலைஞர் ஸ்டாலினை கட்சிக்குள் கொண்டுவந்ததே பின்னாளில்தான், முரசொலிமாறன் இருந்திருந்தால் இன்று ஸ்டாலின் வாரிசு என கலைஞர் அறிவித்திருப்பாரா என்பதும் இன்னொரு கோணம்.


அழகிரி வந்தது கோப்பால் சாமி கட்சியினை கலைக்க முயன்ற காலங்களில், அதுவரை அழகிரியினை எங்காவது காணமுடியுமா?


ஆக அண்ணா இல்லாவிட்டால்.... என சொல்வது கலைஞருக்கு பொருந்தாது, அண்ணா இல்லாவிட்டாலும் நிச்சயம் எழும்பி இருப்பார் கலைஞர்


ஆனால் அண்ணா இருந்திருந்தாலும் கட்சியினை உடைத்திருப்பார் ராமசந்திரன், அவருக்கு கொடுக்கபட்ட அசைன்மெண்ட் அது.


கட்சி கணக்கு என போர்கொடி தூக்கிய ராமச்சந்திரன் கட்சி கணக்கு என்ன என யாராவது பின்னாளில் கேட்டார்களா? இல்லை அவர் காலத்திற்கு பின்னால் அடுத்த தலமையிடமாவது கேட்டார்களா? மூச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்


இதுவும் ஒரு வகையான அரசியல்.


திராவிட் கொள்கை, அது இது என பல விஷயங்கள் நமக்கு ஒத்துவராதாக இருக்கலாம்


ஆனால் கட்சி நடத்துவது எப்படி என்பதனையும், மக்கள் சக்தியினை எப்படி கைக்குள் வைத்திருப்பது என்பதனையும், கட்சிக்கு வரும் ஆபத்துக்களை எப்படி களையவேண்டும் என்பதனையும், யாருக்கு எப்பொழுது என்ன பதவி கொடுக்கவேண்டும் என்பதனையும் மிக சரியாக செய்யும் ஆற்றல் கலைஞருக்கே உண்டு


அதனை ஒப்புகொள்ள்வேண்டும்.


இதோ குடும்ப சண்டையால் முலாயமின் கட்சி உடைந்து கொண்டிருக்கின்றது.


அன்று சஞ்சய்காந்திக்கு இருந்த செல்வாக்கினை கொண்டு பெரும் தலைவராக எழும்பி இருக்கவேண்டிய மேனகாவினை இந்திராவின் தந்திர நகர்வுகள் முறியடித்தன‌


இல்லை என்றால் இன்று வருண்காந்தி நிலை இப்படி இருந்திருக்காது, இன்று பெரும் சக்தியாக வந்திருக்கலாம், இன்று வரக்கூடாத வீடியோ வந்துதான், வருண் காந்தி யார்? மேனகா யார்?


என்னது, வருண்காந்தி இந்திரா பேரனா? என சிலர் புதிதாக ஆச்சரியபட்டுகொண்டிருக்கின்றார்கள். வருணின் ஜாதகம் அப்படி பாட்டியினால் மாற்றபட்டிருக்கின்றது. அது வேறுகதை விட்டுவிடலாம்.


அதாவது குடுமத்தாரை கட்சியில் அனுமதித்தாலும் ஆயிரம் சிக்கல் உண்டு, விசித்திரமாக அவர்களை அனுமதிககவிட்டாலும் கட்சிக்குள் ஆயிரம் சிக்கல் வரும்.


இந்த கத்திமேல் நடக்கும் வித்தையினை, இருபுறமும் பிடியில்லா கத்தியினை கையாள்வது எப்படி என்பதற்கு இலக்கணம் தான் கலைஞர்.


சம்பத், பெரியார், காமராஜர், இந்திரா, வாஜ்பாய், மொரார்ஜி தேசாய், விபிசிங், ராமசந்திரன் என பலர் கலைஞரை கண்டு வியந்த வரிசையில் இன்று முலாயம் சிங்கும் இருக்கின்றார்.


இன்னும் சிலருக்கு கலைஞரிடம் ஆலோசனை கேட்டுவிட்டுத்தான் அடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனதிற்குள் சிந்தனை செல்லலாம்.


எல்லா விஷயங்களையும் கலைஞர் கண்காணிக்கின்றார், முலாயம் சிங் மகன் சம்பந்தமான விஷயங்களும் அவர் கண்ணில் நிச்சயம் பட்டிருக்கும்.


கலைஞர் அமைதியாக புன்னகைக்கின்றார், ஆயிரம் அர்த்தம் கொண்ட புன்னகை அது






கொசுறு


திமுக நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் மதிமுக பங்கேற்க்காது :  வைகோ





இவர்தான் தமிழர் ஒன்றுபடவேண்டும் என ஈழத்தில் சென்று கத்தியவர், ஆனால் தமிழகத்தில் ஒரு கூட்டம் என்றால், பொதுவான பிரச்சினை என்றால் கலந்துகொள்ள மாட்டாராம்


திமுக போன்ற பெரும் கட்சி அழைத்தால் போகமாட்டாரம்.


கள்ளத்தோணி ஏறி அடுத்த நாட்டிற்கெல்லாம் தமிழருக்காக செல்வாராம், ராஞ்சிக்கு சென்று கறுப்புகொடி காட்டுவாராம்


ஆனால் தமிழகத்தில் கூட்டமென்றால் செல்லமாமல் முகத்தை திருப்பிகொள்வாராம்.


மணியரசன், கொளத்தூர் மணி , வேல் முருகன் என கட்சியும் தொண்டரும் ஒருவர் என இருப்பவர்கள் அழைத்தால் செல்வாராம்


இதனை தன்னபோன்றவர்களோடு மட்டும் வைகோ சேருவார் என்றும் சொல்லலாம், அல்லது திமுகவினை கண்ட வயித்தெறிச்சல் என்றும் சொல்லலாம்.










No comments:

Post a Comment