Friday, October 21, 2016

கலைஞர் : எனது அரசியல் வாரிசு ஸ்டாலின்....



Image may contain: 1 person , indoor


நீண்ட நாளைக்கு பின் கலைஞர் ஆனந்த விகடனின் பேட்டி அளித்திருக்கின்றார், நிறைய கேள்விகளுக்கு அவருக்கே உரித்தான ஸ்டைலில் பதிலளித்திருக்கின்றார், அதிலொன்று குறிப்பிடதக்கது


முக ஸ்டாலின் அவரது அரசியல் வாரிசென்று அறிவித்திருக்கின்றார்.


இது யாருக்கு தெரியாது, எல்லோருக்கும் தெரியும். ஆனால் எல்லோரையும் அப்படி பேசவைத்துவிட்டு, அப்பொழுதெல்ல்லாம் ஒன்றுமறியாதவர் போல இவர் அமைதியாக இருந்துவிட்டு , இன்று அவர்தான் என் வாரிசு என சொல்கிறார் அல்லவா?.


இதுதான் ராஜதந்திரம், எல்லோரையும் பேச வைத்துவிட்டு இறுதியில் அறிவிப்பது, கட்சிக்குள் சத்தமிருக்காது, குடும்பத்திலும் சத்தமிருக்காது, எல்லாம் சுபம்.


இதில் வாரிசு அரசியல் என சொல்ல ஒன்றுமே இல்லை. உலகெல்லாம் அப்படித்தான் இருக்கின்றது, 91 வயது பிடல் காஸ்ட்ரோ தன் தம்பியினைத்தான் கியூப அதிபராக்கி இருக்கின்றார்.


கென்னடியின் குடும்பத்தார் சாகவில்லை என்றால் அவர்கள் அதிபராகி இருப்பார்கள் என்கிறது அமெரிக்க அரசியல்


கிளிண்டனின் மனைவி ஹிலாரி இதோ அமெரிக்க அதிபராகி இருக்கின்றார்,


இலங்கையில் ராஜபக்சே தன் குடும்பத்தாரை உடன் வைத்துதான் படுபயங்கர புலிகளை எதிர்த்து அழித்தார், காரணம் என்ன?


இலங்கை ராணுவத்தில் புலிகள் ஊடுருவியது மர்மம் அல்ல, பணத்தால் வளைத்திருந்தனர் புலிகள். ராஜபக்சே துணிந்து நடவடிக்கை எடுத்தபொழுது தன் குடும்பத்தாரை பாதுகாப்பிற்கு வைத்துதான் போர் தொடுத்தார்


காரணம் அரசியலில் யாரையும் நம்பமுடியாது, குடும்பத்தாரை ஓரளவு நம்பலாம்


ராமச்சந்திரனும், கோபாலசாமியும் கலைஞருக்கு கொடுத்த அனுபவங்கள் அப்படி, அதன்பின் முரசொலிமாறன் ஸ்டாலின் போன்றவர்களை தன் அருகே அமர்த்திகொள்வதை தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை


நம்பிக்கை வைத்து , அன்பு வைத்த அவர்கள் சொல்லிகொடுத்த கசப்பான அனுபவங்களே கலைஞருக்கு பெரும் பாடமாக அமைந்தது, இன்னொருவர் அப்படிபட்ட அடியினை கொடுக்காமல் தன்னை தற்காத்தார் கலைஞர்.


இன்னொன்று கட்சி என்பது அவரின் பெரும் கனவு,வாழ்வு, அடையாளம் இன்னபிற, அதனை உடல்,பொருள், ஆவி வகையிலும் வைக்கலாம்


முதல்மனைவி இறந்த செய்திகேட்டும் கட்சிகூட்டத்தினை ரத்துசெய்யாமல் முடித்துவிட்டே கதறி அழுதவர் அவர், இதற்கு மேல் அக்கட்சிமீது அவருக்குள்ள பற்றினை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்


அதனை அழிக்க சிலரால் ஏவிவிடபட்ட ராமசந்திரனால் பிளவு நடந்தபொழுதும் அவர் அதனை காத்துகொண்டார், அழிய விடவில்லை.


கட்சி கணக்கு, அறிவியில், புவியியல் சந்தேகம் என ராமசந்திரன் கிளம்பினாலும், அவர் கதவினை தட்டிய இடம் காமராஜர் இல்லம், ஆனால் பெருந்தலைவர் காமராஜர் அதனை பெருந்தன்மையாக மறுத்தார்.


அந்த கட்சியினை உடைத்து ஆட்சிக்கு வந்த அவபெயர் எனக்கு வேண்டாம் என மறுத்து நின்றார் அவர். அந்தநொடியில் கலைஞர் மனதில் கூட உயர்ந்து நின்றார் காமராஜர்


ஆனால் அதன்பின் காமராஜர் ஓரம்கட்டபட்டதும், ராமசந்திரன் டெல்லியுடன் உறவு கொண்டாடியதுன் ஏன்? எப்படி? என சிந்தித்து முடிவிற்கு வந்தீர்கள் என்றால், கலைஞரின் கட்சிக்கு எவ்வளவு பெரும் ஆபத்து வந்திருக்கின்றது என புரியும்.


அதனை எல்லாம் கடந்து கட்சியினை வலுவாக வைத்திருந்தார் கலைஞர் பெரும் சாமார்த்தியம்.


ராமச்சந்திரன் காலம் முடிந்து, கட்சிக்கு சோதனை கோபால்சாமி வடிவில் வந்தது.


புலிகளின் தமிழக ஏஜெண்டாக மாறி, கலைஞரை திசைமாற்றி என்னவெல்லாமோ செய்ய நினைத்தார் கோபாலசாமி, பத்மநாபா கொலையிலே கலைஞருக்கு புரிந்தது,


கோபால்சாமி எங்கோ விழுந்துவிட்டான்,


ஆனால் சாமியோ திருந்தவில்லை, கலைஞர் இருக்கும் பலத்தில் புலிகளை ஆதரித்து அது ராஜிவ் கொலைவரை சென்றது


நிச்சயமாக ராஜிவ் கொலை சம்பவத்தில் திமுக பெரும் சிக்கலில்தான் தள்ளபட்டது, அது பெரும் பிரச்சினையாக கூட உருவெடுத்திருக்கலாம், கட்சியே இல்லாமல் போயிருக்கலாம்


இங்குதான் கட்சியா, கோபால்சாமியா என குழம்பினார் அவர்.


ஆனால் கோப்பால் புலிகளின் பேச்சினை கேட்டு கட்சியினை உடைத்ததும், கட்சி தடுமாறியது


அதன்பின்னும் கட்சியினை காத்து மறுபடி அதனை ஆட்சிக்கு கொண்டுவந்ததெல்லாம் சாமான்ய விஷயமல்ல.


அந்த கடும் இரு முறிவுகளை கண்டதால்தான், அடுத்த தலைவர் யாரென் சொல்லாமலே இழுத்துவந்தார் அவர். காரணம் சிறு அதிருப்தியும் கட்சியினை உடைக்க காரணமாகிவிடும்


இன்றைய நிலையில் எதிர்கட்சி குழம்பி நிற்கின்றது, அதுவே பித்தம் கலங்கி நிற்கின்றது, வைகோ கட்சியில் அவரை தவிர எல்லோரும் திமுக வந்தாகிவிட்டது


விஜயகாந்த் கட்சி களை இழந்துவிட்டது, மனிதர் புத்தர் போல ஆகிவிட்டார்


இந்நிலையில் அதாவது பொருத்தமான நிலையில் ஸ்டாலின் என் அரசியல் வாரிசு என அறிவிக்கின்றார் கலைஞர், மிக பொருத்தமான சூழல், அரசியல் வாரிசு என்பதற்கு அடுத்த தலைவர் என்பதே பொருள்.


எத்தனையோ கேள்விகள், பலவற்றிற்கு அழகான பதில்கள், பொறுப்பான பதில்கள், சிலவற்றிற்கு அதே பெரியார், அண்ணா என பதில்கள்


ஆனால் ஒரு பதில் உள்ளத்தை உருக்கியது


கேட்கின்றார்கள், சமீபத்தில் நீங்கள் பார்த்தபடம்


அவர் சொல்கின்றார், நான் எழுதி புரட்சி நடிகர் (எவ்வளவு வாய் சாமர்த்தியம்) எம்.ஜி. ராமசந்திரன் நடித்த மந்திரிகுமாரி படத்தினை பார்த்தேன்


எளிதாக கடந்து செல்லமுடியா இடம் அது.


அதாகப்ட்டது மனிதர் பழம் நினைவுகளில் மூழ்கி இருக்கின்றார், அக்காலங்களை நினைவுபடுத்திகொள்கின்றார்


இன்று எல்லா துறைகளிலும் உச்சம் தொட்டுவிட்ட மனிதர் அவர், இனி தொட நிலவோ அல்லது செவ்வாய் கிரகமோதான் வேண்டும்


ஆனால் அந்த காலங்களை, அதாவது தான் என்னவாக போகின்றோம், எதிர்காலம் என்ன என தெரியாத அக்காலங்களை பின்னோக்கி பார்க்கின்றார்.


அதில் அவரும் அவரின் நண்பர் எம்ஜிஆரும் வாய்ப்பு தேடி அலைந்த காலங்கள் நினைவுக்கு வந்திருக்கும், இருவரும் ஒன்றாக தோள்மீது தோள்போட்டு நடந்த காலமும், ஓரிலையில் உண்ட காலமும் நினைவுக்கு வந்திருக்கும்


அவருக்கு இவர் புரட்சிநடிகர் என பட்டமளித்து மகிழ்ந்த காலமும் நினைவுக்கு வந்திர்க்கும்


இருவரும் கட்சிநடத்துவோம் என்றோ, முதல்வராவோம் என்றோ, ஏன் தமிழ்நாடு என ஒரு மாநிலம் அமையும் என்றோ நினைத்திரா காலங்கள் அவை.


அந்த காலங்களில் கலைஞர் மூழ்கி கிடக்கின்றார். நமக்கே இப்படி என்றால் அவரின் நினைவுகள் எப்படி சுற்றி சுற்றி வரும்?


கிராமங்களில் உடலால் தளர்ந்துவிட்ட முதியவர்களிடம் பேசினால், கைகளை பிடித்துகொண்டு அக்கால நினைவுகளுக்குள் செல்வார்கள், அவர்களை அறியாமல் கண்கள் கலங்கும்


கலைஞரும் அப்படித்தான் நினைவுகளில் மூழ்குகின்றார், பழம் காலங்களை திரும்பி திரும்பி பார்க்கின்றார்


மொத்தத்தில் பேட்டியில் கட்சியின் வரலாறும், அது கண்ட சோதனைகளும் அதனை அவர் நெருப்பாக தாண்டிவந்து இன்று ஸ்டாலினை வாரிசாக அறிவித்த திருப்தியும் தெரிகின்றது


சே.. என்ன மனிதர் இவர்?


கண்ணதாசன் அன்றே எழுதினான்


"கலைஞரை பற்றி சொல்லவேண்டுமென்றால் அவருடன் பழகியவர்கள் பிரிய முடியாது, கொஞ்சநேரம் அவர் முகத்தினை நோக்கிவிட்டால் மனம் அவரிடமே சுற்றும்.


பேசியே ஒருவரை வளைக்க அவரால் முடியும்,பேச்சினால் உருக்க முடியும், அழவைக்க முடியும், அவரால் மட்டுமே அது முடியும்


அவரிடம் ஒருவித வசீகரம் உண்டு, அது அவர் நம்பாத தெய்வம் கொடுத்ததாக இருக்கலாம், ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் அவரின் முகத்தை பார்த்தவுடன் அப்படியே அமைதியாகும் கட்சியினரிடம் கேளுங்கள், அதனைத்தான் சொல்வார்கள்


அவரிடம் பழகிவிட்டால் விடவே முடியாது, எத்தனையோ கருத்து வேறுபாடுகளிருந்தும் அவருடனான உறவு அப்படித்தான் தொடர்கின்றது.


அரசியல் வேறு, நட்பு வேறு. அவர் என் நண்பர்


பழகிவிட்டு பிரிவு என்பது அவருடன் சாத்தியமே இல்லை, அதுவும் என்ன போன்ற இளகிய மனமுள்ளவர்களுக்கு சாத்தியமில்லை.."


அது உண்மையாகவும் இருக்கலாம்


அவரைபற்றி சில விஷயங்கள் படித்த நமக்கே இப்படி இருக்கின்றது, பழகிய அவருக்கு எப்படி இருந்திருக்கும் :)


(ஏய் மனமே..இந்த மனிதரிடம் மகா எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ..)


கலைஞரிடம் இன்னொரு பழக்கமும் உண்டு, பழகியவர்கள் யாராக இருந்தாலும் விடாத குணம் அது.


சமீபத்தில் மந்திரிகுமார் பார்த்தேன் என்பதும் அப்படித்தான், அதில் அவர் அக்கால நண்பர்களை மனதால் தேடியிருக்கின்றார்.


அதில் யார் யாரோ வந்திருப்பார்கள், கண்களை அடிக்கடி துடைத்திருப்பார் கலைஞர்.














No comments:

Post a Comment