Thursday, October 13, 2016

இன்றைய செய்திச் சிதறல்கள்




6 சிதறல்கள் 






பன்னீர் செல்வம் முதல்வரானதால் ஒரு தமிழன் இதோ முதல்வராகிவிட்டார்


தமிழன் முதல்வரானால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என ஒப்பாரியிட்ட எல்லோரும் எங்கு போய் தொலைந்தீர்கள்? வந்து வாழ்த்து சொல்லுங்கள்


அங்கிள் சைமன் விரைவில் தன் பரிவாரங்களுடன் சென்று, முதல்வரான தமிழனுக்கு வாழ்த்து சொல்லி 7 தமிழர் விடுதலை, காவேரி மீட்பு, கச்சதீவு மீட்பு என எல்லாவற்றையும் 7 நாளுக்குள் முடிக்க கோரிக்கை வைப்பார் என எதிர்பார்ப்போம்


என் இனிய தமிழ்மக்களே, ஒரு தமிழன் முதல்வனானதை கண்டு இந்த பாசத்துகுரிய பாரதிராஜா உள்ளம் மகிழ்கின்றேன் என அறிக்கை வருமா?


உலகம் முழுக்க தெறித்துநிற்கும் தமிழ் உணவாளர்களே, இதோ கன்னடத்தி கையிலிருந்து அதிகாரத்தை மீட்டெடுத்த எங்கள் தமிழ் பாண்டிய சிங்கமே, இரண்டாம் நெடுஞ்செழியனே (பொருத்தமாக இருக்குமோ?) , குலசேகரபாண்டிய மறுபிறப்பே என்றெல்லாம் வாழ்தாமால் ஏன் அமைதியாக இருக்கின்றீர்கள்?


கமாண். ம்ம்ம் வாழ்த்த தொடங்குங்கள்


உண்மையில் நீங்கள் தமிழ் முதல்வருக்குத்தான் ஆசைப்பட்டீர்கள் என்றால், ஒழுங்காக வந்து வாழ்த்துங்கள்..


இல்லை என்றால் உங்கள் கொள்கையில் தமிழகமே சந்தேகபடவேண்டியிருக்கும் ஆமாம்...







தமிழர்களின் உரிமையை புறக்கணிக்கிறது மத்திய அரசு: சீமான்

அங்கிள், இப்பொழுது தமிழக முதல்வராக தமிழர்தான் இருக்கின்றார், இன்னும் பழைய சத்தமே போட்டால் எப்படி?

இனி தமிழன் பிரதமாரக வேண்டும் என கோஷத்தினை மாற்றுங்கள்








எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கின்றது

திலீபன் மகேந்திரனுக்கும், தமிழச்சி என்பவருக்கும் நடக்கும் சண்டை சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கின்றது.

சும்மா சொல்ல கூடாது ஏதோ ஒரு படத்தில் மணிமேகலை எனும் பெண்ணை கண்டதும் செந்திலும்,கவுணமணியும் போட்டி போட்டு உண்மையினை ஒப்புகொள்வது போல ஒப்புகொள்கின்றார்கள்

கவிஞர் தாமரையினை தவிக்கவிட்ட தியாகுவின் சீடரான திலீபன் இப்படி எல்லாம் லீலைகளில் இறங்காவிட்டால் அவர் குருநாதருக்கு என்னதான் மரியாதை? அவர்களின் கொள்கைகளுக்கு என்னதான் மதிப்பு?


எப்படியோ சீடன் குருவின் மதிப்பினை கொஞ்சமும் குறையாமல் காப்பாற்றிகொண்டிருக்கின்றான்

தமிழச்சியியும் சும்மா அல்ல போட்டு தாக்கிகொண்டிருக்கின்றார், சில இடங்களில் இருவருமே கடுமையாக மோதிக்கொள்கின்றார்கள்

இவர்களுக்கு நாம் ஒன்றை சொல்லிகொள்கின்றோம்

"போராளி புலவர்களே எம் மனதின் ஐயப்பாட்டை நீக்கியதிற்கு மிக்க நன்றி, ஆயுனும் புலவர்களுக்கிடையில் சணடை வேண்டாம், சாந்தமாக உரையாடுங்கள்

இந்த தமிழ்கூறும் நல்லுலகிற்கு நீங்கள் சொல்லவேண்டிய எவ்வளவோ விஷயங்கள் இன்னும் இருக்கின்றது"

(இந்த நியூஸ் 7 சேனல் இன்னொருமுறை இவரை பேட்டி எடுத்து தமிழச்சியுடனான சர்ச்சையினை தமிழகத்திற்கு சொல்லுமா?)









ஒரு மனிதனின் தலைவிதிபடியே சூழ்நிலை அமையும் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்


ஓ.பன்னீர் செல்வத்தை காணும் வரை


ஒரு அழகான யூத பழமொழி உண்டு





அறிவுள்ளவன் சாதிப்பான் என்றோ, வீரன் வெற்றி பெறுவான் என்றோ சொல்லமுடியாது

எல்லாவற்றிற்கும் சூழ்நிலையும், சந்தப்பமும் பொருந்த அமைய வேண்டும்

அந்த யூத மொழியினை மெய்பித்து காட்டிகொண்டிருக்கின்றார் நமது மாண்புமிகு பன்னீர் செல்வம்

"பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"









சிவன், பார்வதிக்கு பின் ஜெயலலிதாவினை வணங்கிய மதுரை ஆதீனத்தை இப்பொழுது அப்பல்லோ வாசலில் யாராவது கண்டார்களா?


ஒருவேளை சிவனிடம் நேரே முறையிட கயிலாயம் நோக்கி நடந்துகொண்டிருப்பாரோ?






மோடி ஏன் ஜெயலலிதாவை பார்க்கவரவில்லை: திருநாவுக்கரசர் கேள்வி


ஆளுநர் அறிக்கை கொடுத்திருக்கின்றா, அமித்ஷா ஜெட்லி எல்லோரும் வந்திருக்கின்றார்கள் இதற்கு மேலும் என்ன வேண்டும்?


எம்ஜி ராமசந்திரனை இந்திரா ஓடிவந்து பார்த்தாராம், அன்று திமுக எனும் பெரும் ஆலமரத்திற்கு எதிராக எம்ஜிஆர் எனும் கோடாரியினை அம்மரக்கம்பிலே தயார் செய்தவர் யார்?




தன் அடிமைகளில் ஒன்றினை அன்றைய முதல்வரை காண அன்றைய பிரதமர் ஓடிவந்ததில் என்ன வியப்பு?


யாருக்கும் அடிமை இல்லை என வாழும் இந்த முதல்வரை இந்த பிரதமர் காண வராததில் என்ன வியப்பு?


சரி, கொஞ்சநாளைக்கு முன்பு வரை இவர் அந்த மோடி முகாமில்தானே இருந்தார், நேரே சென்று மோடியிடம் கேட்கலாம் அல்லவா?


விரைவில் அப்பல்லோ ஆஸ்பத்திரி வாட்ச்மேன் வேலை இவருக்கு வழங்கபடலாம் என தெரிகின்றது







 

No comments:

Post a Comment