Friday, October 7, 2016

தேவி : முன்னோட்டம்

https://youtu.be/gWLhgenab28


இன்று வெளியாக இருக்கும் பிரபுதேவாவின் தேவி படத்தினை, நண்பர் Babu Rao அவர்களின் தலமையிலான‌ நயன் தாரா புரட்சி+காவல்+தற்கொலை+ரசிகர் படையினர் புறக்கணிக்கின்றார்களாம்


மிக கடுமையான புறக்கணிப்பாம், திருட்டு டிவிடியில் கூட பார்க்கமாட்டார்களாம், அவ்வளவு பெரும் புறக்கணிப்பாம்


அதாவது நயனுக்கு துரோகம் செய்த யார்படமென்றாலும் இப்படித்தான் பழிவாங்குவார்களாம். யார் வந்து சொன்னாலும், பிரபுதேவாவே வந்து ஆடிபார்த்தாலும் இவர்கள் படத்தினை ஆதரிக்கமாட்டார்களாம்





தங்க தலைவியின் பொன் மனத்தினை புண்படுத்தியவர்கள் யார் படமென்றாலும் அதற்கு இந்நிலை என மிக கடுமையாக சொல்ல்கிகொண்டிருக்கின்றார்கள்.

தமண்ணாவிற்காக கூட இறங்கி வந்து படம்பார்க்க மாட்டார்கள் என்றால் அவர்கள் உறுதி எப்படி இருக்கும்

இவர்களை போன்றவர்கள் இருக்கும்வரை நயன் 2ம் இன்னிங்கிஸ் என்ன, 10 இன்னிங்க்ஸ் வரை கோடம்பாக்கத்தில் அசராமல் ஆடலாம்

ஹாலிவுட்டிற்கு ஒரு ஏஞ்சலினா , கோலிவுட்டிற்கு ஒரு நயன் தாரா என்ற கோஷம் உரக்க அவர்களால் எழுப்பட்டுகொண்டிருக்கின்றது

தேவி படம் என்னாகிறது என்பது விரைவில் தெரியும், நமக்கு தெரிந்து ஒரு Babu Rao என்றாலும், பல லட்சம் Babu Rao க்கள் தமிழகத்தில் இருக்கலாம் என நம்பபடுகின்றது

ஏற்கனவே நயன் சர்ச்சைக்கு பின் பிரபுதேவா இயக்கிய படங்கள் தமிழகத்தில் ஓடவில்லை,

ஒருவேளை இவர்களால் இருக்குமோ?

 








Image may contain: 2 people




No comments:

Post a Comment