Thursday, October 6, 2016

டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு...

https://youtu.be/nyEDx4ILwjU




முதல்வரின் உடல்நலம் கருதி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு சுய விளம்பரம் கொண்டதாக சொல்லி நீதிமன்றம் வழக்கினை தள்ளுபடி செய்தது


தமிழகத்தில் அவர் தொடுத்த வழக்கு எல்லாமே பொதுநலன் சார்ந்தது, கிரானைட் மர்மம் அவர்தொடுத்த வழக்கில்தான் விசாரணை அளவிற்காவது வந்தது. பேனர் இம்சைகளை அவர் கண்டித்து வழக்கு தொடுத்ததும் நினைவிருக்கலாம்


ஒரு தமிழக குடிமகன், தமிழக முதல்வரின் உண்மை நிலையினை அறிந்துகொள்ள துடிக்கின்றான் அவனுக்கு உண்மை தெரியவில்லை,





அப்பல்லோ நிர்வாகம் ஒரே பதிலினை 15 நாட்களாக சொல்லிகொண்டிருப்பதும் அவன் கேள்விக்கு காரணமாக இருக்கலாம்

ஆளுநர் முதல்வரை சந்தித்த படமும் வரவில்லை. டெல்லிலியிலிருந்து மத்திய அரசு பிரதிநிதிகள் யாரும் வரவுமில்லை,

அதாவது முதல்வர் சம்பந்தபட்ட எந்த உறுதி தகவலும் கிடைக்கா நிலையில் அவன் நீதிமன்ற கதவினை தட்டியிருக்க்கின்றான்

தொழிலதிபர்களின் வழக்கிற்கு உடனே உத்தரவு கொடுக்கும் நீதிமன்றங்கள்தான் இம்மாதிரியான மனுக்களை தள்ளுபடி செய்கின்றன‌

சுய விளம்பரமாம்.

அவன் நினைத்திருந்தால் மண்ணெண்ணெய் கேனுடம் ஒரு போஸ், நாக்கை வெட்டிகொண்டு ஒரு போஸ், அப்பல்ல்லோ வளாகத்தில் அரைநிர்வாண போராட்டம் என இறங்கி சுயவிளம்பரம் தேடி இருக்கலாம்

அல்லது தமிழச்சி போல காரியமே முடிந்துவிட்டது என பல சர்ச்சையான அறிக்கைகளை விட்டிருக்கலாம், எவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்கும்?.

அதனைத்தானா விரும்புகின்றது நீதிமன்றம்?

அவன் கேட்டது என்ன? யாரும் சொல்லா உண்மைகளை இந்நீதிமன்றம் சொல்ல கூடாதா?

தனிபட்ட முறையில் கே.ஆர் விஜயாவோ அல்லது வெண்ணிற ஆடை நிர்மலாவோ மூட்டுவலியில் படுத்திருப்பதில் மர்மம் என்ன என்றா அவர் கேட்டார்?

இம்மாநிலத்தினை ஆளும் முதல்வரின் நிலை என்ன? வாக்களித்த மக்களை இப்போது ஆண்டுகொண்டிருப்பவர் யார்? என கேட்டால் அது சுயவிளம்பரம் என்கின்றது நீதிமன்றம்.

சரி அவர் சுயவிளம்பரம் தேடுபவராகவே இருந்தாலும், இக்கேள்விக்கு என்ன பதில் என தமிழக ஆளுநரையோ அல்லது இந்திய அரசு இயந்திரத்தையோ கேட்டுவிட்டு இவரை கண்டித்திருக்கலாம்.

நாட்டின் மிக முக்கியமான தூன் இது, அது சொல்லிவிட்டது. நாம் விமர்சிக்கவோ, அல்லது ஏதும் சொல்லமுடியாது.

ஆக ஒரு தமிழக குடிமகன், தன்னை ஆளும் தமிழக முதல்வரின் நிலையினை அறிந்துகொள்ள நினைப்பது சுயவிளம்பரம்

ஆக தமிழர்களே நீங்களும் அப்படி அறிய நினைத்து உங்களை சுய விளம்பரபடுத்திகொள்ளாதீர்கள்

நீதிமன்ற உத்தரவு அதனையே சொல்கின்றது,

உங்கள் உரிமையினை, உங்கள் ஆட்சியாளரை பற்றி நீங்கள் கேட்பது சுயவிளம்பரம்.






No comments:

Post a Comment