இனியும் முதல்வர் இல்லாமல் ஆட்சி நடத்தமுடியாது எனும் சட்டசிக்கலுக்கு வந்தாகிவிட்டது நிலமை
ஒரு தற்காலிக முதல்வர் அமர்ந்தே தீரவேண்டிய கட்டாயம்
அக்கட்சிக்கு அது புதிதல்ல, அன்று எம்ஜிஆர் அப்படி செயல்படமுடியாமல் இருக்கும்போது இரண்டாம் இட விதிகொண்ட நெடுஞ்செழியன் ஏதோ செய்துகொண்டிருந்த வரலாறேல்லாம் உண்டு
ஆனால் பிழைத்து வந்த எம்ஜிஆர் கட்சிக்கு வாரிசு யார் என சொல்லாமலே மறைந்தார் என்பது வேறு விஷயம்.
முன்பு ஜெயலலிதாவிற்கு சிக்கலான காலங்களில் பன்னீர் செல்வமும் இருந்து "ஆட்சி" செய்ததும் வரலாறு
ஆனால் அன்று அம்மா இருந்து பார்த்துகொண்டிருந்தார், அவர் கண்ணசைவில் பன்னீர் ஆண்டுகொண்டிருந்தார், இன்று நிலைவேறு. முதல்வர் கடும் மருத்துவ கண்காணிப்பில் இருக்கின்றார் என நிர்வாகமே ஒப்புகொண்டாயிற்று
ஆக ஒரு முதல்வர் அமர்த்தபடவேண்டும், ஆனால் இன்னார் என சுட்டிகாட்டவேண்டியவர் மருத்துவமனையில்..
5 பேர், 50 பேர் கொண்ட குழு எல்லாம் போட்டு ஆளமுடியாது, முதல்வர் ஒருவர்தான் இருக்கமுடியும்
இம்மாதிரி நேரங்களில் செயல்படகூடியவர் ஓரளவு கட்சி பெயரினையும், ஆட்சி பெயரினையும் காப்பாற்றுபவராகவும் இருக்கவேண்டும்,
தாடி வளர்த்த மவுன விரதங்கள் எல்லாம் எடுபடாது, இன்னொன்று எம்எல்ஏக்களை கட்டி காப்பவராகவும் இருக்கவேண்டும், கொஞ்சம் அசந்தால் அள்ளி செல்ல எதிர்முகாம் கன ஜோராக ரெடி.
ஆக அந்த கட்சிக்கு மகா சோதனையான காலம்.
அடுத்த கட்ட தலைவராக, மக்களை வசீகரிக்ககூடிய தலைவராக ஒருவரும் இல்லை, (இருக்கவும் முடியாது என்பது இன்னொரு கோணம்)
எப்படிபட்ட மக்கள் சக்தி அது? எம்ஜிஆர் என்ற மனிதனுக்கான வாக்குவங்கி அப்படியே இருக்கின்றது, அதனை ஜெயலலிதா எனும் தனிபட்ட சக்தி எப்படி பாதுகாத்து நிறுத்தியது என்பதும் தமிழக வரலாறு.
அந்த வரலாறு எப்படி தொடரபோகின்றது என்பது காலத்தின் கையில் என்றாலும் ஒரு சில அறிகுறிகள் தெரியும் நேரமிது.
பார்க்கலாம், விரைவில் ஒரு முடிவுக்கு வந்தே தீரவேண்டிய நிலை அவர்களுக்கு, ஆனால் சிக்கலான நிலை.
பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற அனுபவசாலிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள், ஆனால் அவரின் அனுபவம் பயன்படுத்தபடுமா என்பது தெரியாது.
பலர் பெயர்கள் அடிபடுகின்றன, அவராக இருக்கலாமோ என நெற்றி சுருக்கி யோசிக்க தோன்றுகின்றது.
சில பெயர்களை கேட்கும் போது சிரிப்பு வருகின்றது, உதாரணம் சரத்குமார், ராமராஜன் இன்ன பிற
சிலர் விந்தியாவினை தேடுகின்றார்கள். ஒரு சிலர் நமீதாவும் முக்கிய பொறுப்பில் வரலாம் என்பது கூடுதல் காமெடி.
கட்சியும், ஆட்சியும் நடத்துவது என்பது பெரும் விஷயம், சாமன்யம் அல்ல. கலைஞர் அதில் கரைகண்டவர் அமைதியாக ஓடினாலும் அந்த நதியின் ஆழம் பெரிது
ஜெயலலிதாவின் அரசியல் அதிரடி வகை. சுட்டுவிரலில் கட்சியினை வைத்திருந்தது பெரும் விஷயம்.
அந்த நுட்பம் தெரியாமல் மூப்பனார், விஜயகாந்த், வைகோ இன்னும் பலர் கட்சி நடத்திவிட்டு கன்னத்தில் கைவத்த கதை எல்லாம் தமிழகம் அறியும்
காரணம் அரசியல் அப்படியானது, பெரும் சவால் மிக்கது, கலைஞரும் ஜெயாவும் தனித்து நிற்பது இந்த சவால்களை கடந்துதான்.
கடக்க தெரியாதவர்களுக்கு வைகோ நிலைதான்.
இனி வருபவர் யாரோ தெரியாது, கட்சி ஆட்சி மற்றும் எதிர்கட்சி என சமாளிப்பது பெரும் சவாலாகவே இருக்கும்
பார்க்கலாம்
இது ஒருபுறம் இருந்தாலும், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று திரும்பி வர தொடர்ந்து பிரார்த்திப்போம்.
அதுவரை தமிழகம் அமைதியாக இயங்க நடக்க வேண்டியவைகள் நடக்கட்டும்.
No comments:
Post a Comment