Thursday, October 20, 2016

கிறிஸ்தவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான்...



கிறிஸ்துதாஸ் காந்தி எனும் அரை கிறிஸ்தவரை போட்டு தாக்கிகொண்டிருக்கின்றார்கள், அம்மனிதரும் கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கின்றார்.


சில விஷயங்களை ஒப்புகொண்டே ஆகவேண்டும், அதில் யோசிக்க ஒன்றுமே இல்லை


இந்தியா இந்து சகோதாரர்கள் 80% நிரம்பி இருப்பதால், சர்வ நிச்சயமாக அது இந்து நாடே. இந்துநாடுதான்


எல்லா நாட்டிலும் பெரும்பான்மையானோர் பின்பற்றும் சமயம் தேசிய சமயமாக அங்கீகரிக்கபடும் உலகில் இந்நாடும் இந்துநாடு என்றுதான் அறியபடவேண்டும், அதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.


அதிலும் இந்நாடு எல்லா மதத்தவருக்கும் சம உரிமை கொடுத்திருக்கின்றது, அவரவர் அவர்கள் சமயத்தை பின்பற்றவும், வழிபாடுகள் செய்யவும், சமயகடமைகளை நிறைவேற்றவும் எந்த சிக்கலும் இங்கு இல்லை


எல்லா மத கொண்டாட்டமும் நன்றாகவே,சுதந்திரமாகவே நடக்கின்றது


இதில் சிக்கல் எங்கு வருகின்றது?


இந்த சுதந்திரத்தினை பயன்படுத்தி, அடுத்த மதத்தினரை வம்புக்கு இழுப்பதில் சிக்கல் தொடங்குகின்றது.


நாம் இந்த மதத்தில் இருக்க காரணமே 4 பேரை மதம்மாற்றி இங்கு சேர்க்கத்தான் எனும் மனநிலையே அதற்கு காரணம், இதில் அரைகுறை கிறிஸ்தவர்கள் ஆபத்தானவர்கள்.


அவர்கள் மனதில் அவர்களை பால், இராயப்பர் எனும் ஆதி அப்பஸ்தோலராக நினைத்துகொள்கின்றார்கள், ஆனால் அவர்கள் பட்ட பாடுகளில் கொஞ்சம் கூட பட துணியவில்லை.


குண்டுசட்டியில் குதிரையோட்டி, தெருமுனையில் கத்திகொண்டு என்னவெல்லாமோ செய்கின்றார்கள், எல்லாம் பெரும் அட்டகாசம், அழிச்சாட்டியம் இன்னும் ஏராளம்


மதம் மாறினால்தான் உன்னை ஏற்றுகொள்வேன் என சொல்லும் கடவுள், நிச்சயம் சொத்துக்களை எனக்கு கொடுத்தால்தான் உன்னை உறவாக ஏற்றுகொள்வேன் எனும் நரிதந்திர உறவினருக்கு நிகரனாவர்.


நிச்சயம் கடவுள் அப்படி இருக்கமுடியாது


அவரவவர்க்கு விரும்பிய வழியில் அவரை வழிபட்டுகொண்டிருக்கலாம், அவ்வளவுதான் விஷயம்


இதில் இந்த இந்திய கிறிஸ்தவர்களுக்கு என்ன சிக்கல் என புரியவே இல்லை.


ஆனானபட்ட இயேசு கிறிஸ்து தன் போதனையில் சொன்னார்,"கடவுளுடையதை கடவுளுக்கும், அரசுக்குரியதை (ரோமை அரசுக்கு) அரசுக்கும் செலுத்துங்கள்"


அதாவது ரோமையரின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த யூதர்களுக்கு அவர் அதனை சொன்னார், "யார் ஆட்சியின் கீழ் வாழ்கிறோம் என்பது முக்கியமே அல்ல, கடவுளுக்குரிய வாழ்க்கையினை வாழுங்கள்"


இதனை இந்த இந்திய கிறிஸ்தவர்கள் சுத்தமாக மறந்துவிடுகின்றனர்.


இன்றைய உலகில் இஸ்லாமிய நாடுகள், யூத நாடான இஸ்ரேல், சில புத்த நாடுகள், சில கம்யூனிச நாடுகள், சில மன்னராட்சி நாடுகள் என எல்லா இடத்திலும் கிறிஸ்தவர்கள் உண்டு.


கிறிஸ்தவ நாடுகளிலும் பிரிவினை கிறிஸ்தவர் மெஜாரிட்டியான நாடுகளில் கத்தோலிக்கருக்கும், கத்தோலிக்கர் ஆளும் நாடுகளில் மைனாரிட்டி பிரிவினை கோஷ்டிகளுக்கும் முணுமுணுப்பு உண்டு.


அவர்கள் எல்லாம் அரசு வேறு, மதம் வேறு என மிகசரியாக பிரித்துபார்க்கின்றார்கள்.


ஆனால் இங்கு அப்படி அல்ல, கிறிஸ்துவத்தினை வைத்து அரசியல் செய்கின்றார்கள், இந்நாடு மதசார்பற்ற நாடாக இருந்தே தீரவேண்டுமாம்.


இந்நாடு மதசார்பாக இருந்தால், இவர்களுக்கு என்ன அழிந்துவிடபோகின்றது, அல்லது மதசார்பற்ற நிலை இருந்தால் இவர்களுக்கு என்ன கிடைத்துவிட போகின்றது?


இது மதசார்பு நாடென்றவுடன், இவர்கள் குடியுரிமையினை பறிக்கபோகின்றார்களா? இல்லை நாட்டை விட்டு விரட்டபோகின்றார்களா?


அப்படி செய்துவிடமுடியுமா? எத்தனை லட்சம் இந்துக்கள் உலகெங்கும் வசிக்கின்றார்கள், அவர்களுக்கெல்லாம் சிக்கல் வராதா?


உலக நாடுகளில் எல்லாம் இந்துக்கள் மைனாரிட்டியாக வாழவில்லையா, மிக சிறிய குழுவாக பெரும் சக்திகளுக்குள் வசிக்கவில்லையா?


ஆக உலகிலே இவர்கள் மட்டும்தான் கிறிஸ்தவர்கள் போலவும், இந்தியாவில் இவர்களை அழிக்க பெரும் சதி நடப்பது போலவும், இந்தியா மதசார்பான நாடு ஆனதென்றால் இவர்களை எல்லாம் இந்திய கடலில் வீசபோவதை போலவும் பேசிகொண்டிருக்கின்றார்கள்.


அரைகுரை விஞ்ஞானம் ஆபத்து என்பார்கள், இந்த அரைகுறை கிறிஸ்தவர்கள் அதனை விட ஆபத்தானவர்கள்.


இதில் நரித்தனமும் ஒளிந்திருக்கின்றது, ஒருவேளை இவர்கள் 80% இருந்து இந்துக்கள் 20% இருந்தால் என்ன ஆகியிருக்கும், இந்நாடு கிறிஸ்துவநாடாக இருந்தே தீரவேண்டும், கர்த்தருக்கு ஸோஸ்திரம் என கிளம்பி, பெரும் இம்சை செய்திருப்பார்கள்


இஸ்லாமியர் பெருவாரியாக இருந்தாலும் இதே நிலையே


இந்த தேசத்தின் அமைதி அந்த 80% இந்து நண்பர்கள் அமைதியாக இருப்பதில்தான் தங்கி இருக்கின்றது


இதனை குறிவைத்து வெள்ளையன் விதைத்த விதைதான், தேச பிரிவினையும், இன்றுவரை தொடரும் ராமர் கோவில் சர்ச்சையும்


ஆக இந்துமக்களை அமைதியாக இருக்கவிடுங்கள், அவர்களை சீண்டாதீர்கள்


இந்த கிறிஸ்தவர்களுக்கு ஒரே கேள்விதான்


நீங்கள் கிறிஸ்துவினை ஏற்றுகொண்டு அவர் வழியில் நடப்பவர்கள், அதாவது இயேசுவே உங்கள் பிராதனம், பரலோகத்தில் கிடைக்கபோகும் அந்த நித்திய ஜீவனுக்காக நீங்கள் இந்த அற்ப மானிட பிறவி எடுத்து, இவ்வுலகில் போராடிகொண்டிருக்கின்றீர்கள்


இதில் நீங்கள் இந்தியாவில் வசித்தால் என்ன? இத்தாலியில் வசித்தால் என்ன? இல்லை இந்தோனேஷியாவில் வசித்தால் என்ன?


பரலோகத்திற்கான வாழ்விற்கான ஏற்பாடுகளை எந்த நாட்டில் இருந்து தயாரித்தால் என்ன? நாடா முக்கியம் பரலோகம் தானே முக்கியம்.


உங்கள் ஆவியினை பரமன் இயேசு ஆட்கொண்டபின் , இந்த உடலெனும் கூடு எந்த நாட்டில், யார் ஆளுகைக்குள் இருந்தால் அதுபற்றி உங்களுக்கென்ன கவலை?


கிறிஸ்து மறுபடி வரும்பொழுது மகனே? நீ எந்த நாட்டில், எந்த ஆட்சியின் கீழ் இருந்தாய்? என்றா கேட்பார்?, நல்ல கிறிஸ்தவனாக இருந்தாயா இல்லையா? என்றுதானே கேட்பார்?


அவருக்கு நாடும், அரசும் முக்கியமா? உங்கள் ஆன்மா முக்கியமா?


அவரே ரோமையரின் ஆட்சியின் கீழ் அமைதியா வாழ்ந்தவர், ஒரு வார்த்தை அவர் ரோமையரை எதிர்த்து பேசியிருப்பார்?, ஆட்சி மோசம், ரோமானியர் மதசார்பற்ற முறையினை கடைபிடிக்கவேண்டும் என எங்காவது அவர் சொன்னாரா?


அவர் சொன்னதெல்லாம் அரசனை பற்றி ஏன் கவலைபடுகின்றீர்கள், அவர்கள் எல்லாம் வானக தந்தையால் அதிகாரம் கொடுக்கபட்டவர்கள் என்ற வகையில்தான் இருந்தது,


பின் இந்நாடு மதசார்பாகவோ அல்லது மத சார்பற்றோ இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?


உண்மையில் உங்களுக்கு என்ன பிரச்சினை தெரியுமா?


உங்கள் கிறிஸ்தவ விசுவாசம்தான் பிரச்சினை


இந்நாட்டு அரசு எப்படி அமைந்தாலும், எந்தமாதிரி அரசு அமைந்தாலும் கிறிஸ்து எங்களை காப்பார் எனும் விசுவாசம், அந்த நம்பிக்கை இருந்தால் இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் செய்ய மாட்டீர்கள்.


இயேசுவிக்கு பின்னான ரோமர் காலத்து அட்டகாசம் படியுங்கள், எப்படி எல்லாம் கிறிஸ்துவத்தை அழிக்க துடித்தார்கள். அன்று கிறிஸ்தவம் இருந்தது மிக சிறிய பகுதிகளே


ரோமை வல்லரசுக்கு அது மிக சுலபாமன வழியே, ஆனால் முடியவில்லை, ரத்த கடலில் ரோம் மிதந்தும் முடியவில்லை.


இந்தியாவில் என்ன அப்படியா நடக்கின்றது?, இங்கு எவ்வளவு சுதந்திரம், எவ்வளவு சலுகை


கிறிஸ்தவர்கள் கல்லூரி, மருத்துவமனை, ஜெபகூட்டம் என என்னவெல்லாம் செய்யமுடிகின்றது, என்ன குறையினை கண்டீர்கள்?


முதலில் அதற்கு கிறிஸ்துவிடம் நன்றி செலுத்துங்கள், அதற்கு மேல் நல்ல விசுவாசத்தை வளர்த்துகொள்ளுங்கள்


அப்படி செய்தால் எல்லாவற்றையும் புன்னகையோடு கடந்து செல்வீர்கள், இப்படி வீண் சர்ச்சையில் சிக்கி, சமூக அமைதியினை கெடுக்க மாட்டீர்கள்


முதலில் கிறிஸ்துவத்தை நன்றாக படியுங்கள், இந்த நற்செய்தி அறிவித்தல் எனும் இம்சைகளுக்கான உண்மையான பொருள் விளங்கும், பெருமாள் கோயில் புளியோதரை போல எல்லாம் பரிசுத்த ஆவியினை அள்ளிகொடுக்க முடியாது என்பதும் விளங்கும்


ஆக முதலில் நல்ல கிறிஸ்தவராகுங்கள், அப்படி ஆகிவிட்டால் எதனையும் கடந்துபோகும் மனநிலை வரும், எல்லா மதங்களையும் மதிக்கும் ஒரு மனமும் வரும்


அதுதான் கிறிஸ்து போதித்த சகோதரத்துவம்.


இந்த நாடு மதசார்பா, இல்லையா என்ற சர்ச்சைக்கு பைபிளிலே பதிலிருக்கின்றது, அரசுக்குரியதை அரசனுக்கு செலுத்துங்கள், நல்ல குடிமக்களாக இருங்கள் என அதுவே சொல்கின்றது.


முதலில் அதனை செய்யுங்கள், சகோதரத்துவத்தினை வளருங்கள்


ராமரை ஏன் அடிக்கவேண்டும்?


முதலில் உங்கள் விசுவாசத்தினை கேள்வி கேட்டு உங்களையே செருப்பால் அடித்துகொள்ளுங்கள்,


இத்தேசம் பிரச்சினையே அல்ல, உங்களுக்கு நீங்களேதான் பிரச்சினை.






No comments:

Post a Comment