Wednesday, October 12, 2016

சிதறும் செய்திகள்

6 பதிவுகள்







திமுக எனும் கம்பெனியின் வாரிசு முக ஸ்டாலின் அக்கம்பெனியின் விளம்பரங்களில் நடிக்கலாம்

அதிமுக எனும் கம்பெனியின் விளம்பரங்களில் பலபேர் நடிக்கலாம்

காங்கிரஸ் கம்பெனியில் சிலபேர் நடிக்கலாம், பிஜேபி கம்பெனியில் அமித்ஷா , சு.சாமி என பலர் நடிக்கலாம்

ஈழ பிசினஸ் கம்பெனியில் சீமான், வை.கோ என பலர் நடிக்கலாம்

அதாவது அவர்கள் தொழிலுக்கு அவரவர்கள் நடிக்கலாம், விளம்பரபடுத்தலாம் மக்கள் வரவேற்பார்கள், வாக்கே அளிப்பார்கள், ஆட்சியில் அமர்த்துவார்கள்

ஆனால் சரவணா ஸ்டோர்ஸ் எனும் சொந்த கம்பெனியில் அதன் வாரிசு நடித்தால் கலாய்க்கின்றார்களாம்

என்ன மாதிரி மக்களோ புரியவே இல்லை




தங்க தாரகை , தமிழகத்து நயகரா, நயந்தாரா ரசிகர்+புரட்சி+காவல்+தற்கொலை படை தலைவர் 

Babu Rao அவர்களின் தலமையில் நடை பெற்றுகொண்டிருக்கும் பிரபுதேவா எதிர்ப்பு மவுன புறக்கணிப்பிற்கு ஆதரவளித்து "தேவி" திரைப்படத்தினை தோல்விபடமாக ஆக்கிகொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு

நயனின் கோடான கோடி ரசிகர்களுடன் Babu Rao அவர்கள் கோட்டான கோடி நன்றியினை தெரிவித்துகொண்டிருக்கின்றார்

எதற்கும் சிம்பு கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது



"கடும் கண்காணிப்பில், ராகுல் காந்திவரை யாரையும் சந்திக்கமுடியாத நிலையில் இருக்கும் முதல் அமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி ஒருசிலரிடையே எழுந்துள்ளது


அ.தி.மு.க.வின் சார்பில் மாநிலங்களவையில் அண்மைக்காலம் வரை உறுப்பினராக இருந்த ஒரு அம்மையாரே முதல் அமைச்சரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு காரியங்கள் நடப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.


ஆக அது உண்மையில் முதல்வரின் கையெழுத்தா? அல்லது போலியா என்ற குற்றச்சாட்டிற்கு இதுவரை பதில் இல்லை"





நாம் இப்படி சொன்னால் வதந்தி என்பார்கள்.

ஆனால் இப்படி சொல்லியிருப்பவர் கலைஞர், அவருக்காவது பதில் கிடைக்கின்றதா என பார்ப்போம்.





ரெமோ வெற்றிவிழாவில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்


அது வெற்றிபடம் என சொன்னால் அவர் கண்கள் கலங்காதா என்ன?,


பரவாயில்லை மனிதருக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கின்றது.






பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை விடமாட்டோம் : மோடி


ஆமாம், இஸ்லாமிய பயங்கரவாத ஆதரிப்பவர்களை தொலைத்து கட்டாமல் விடமாட்டர்கள்


ஆனால் இந்து பயங்கரவாதத்தில் மசூதியினை இடித்து கோவில்கட்ட நினைப்பவர்களை எல்லாம் ஆதரிப்பவர்களை பாதுகாக்காமல் விடமாட்டார்கள்






13.7 சதவீத இந்தியர்களுக்கு மனநலம் பாதிப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்


இதில் அரசியல்வாதிகள் எத்தனை சதவீதம் என சொன்னால் நன்றாக இருக்கும், தமிழகத்து சதவீதம் அதிகமாக இருக்கலாம்







 

No comments:

Post a Comment