Thursday, October 27, 2016

ஜெயமோகன் இன்னும் நிறைய சொல்வார்...



Image may contain: 1 person , close-up and outdoor


ஜெயமோகன் வங்கி அதிகாரியினை விமர்சித்துவிட்டார் என கடும் எதிர்ப்புகள், சர்ச்சைகள்


அவரைபற்றி ஏற்கனவே சொல்லியிருக்கின்றோம், மனிதர் ஒருமாதிரியானவர், எப்பொழுது என்ன பேசுவார் என்றே தெரியாது, ஒரு மாதிரியான சிந்தனையில் இருப்பவர்


முதன் முதலில் இவரை எச்சரிக்கை பார்வை பார்த்தவர் சாட்சாத் எழுத்தாளர் சுஜாதா, அதோடு இவருக்கு அவர் மீதான வெறுப்பு அதிகரித்து என்னவெல்லாமோ எழுதினார்


சுஜாதா இடத்தினை பிடிக்காமல் ஓயமாட்டேன் என அண்ணாமலை ரஜினி போல சவால்விட்டார்,


புலி வேறு புலி வேடம் வேறு அல்லவா?


நானே ஆகசிறந்த இலக்கியவாதி என கிளம்பினார், வின்னர் பட வடிவேலு போல "எஸ் பாஸ்..." ஒரு கூட்டம் கிளம்பி இவருக்கு வாசகர் வட்டம், விசிறிகள் சதுரம் என என்னவெல்லாமோ நடந்தது


பாரதி, தாகூர், மார்க்ஸ் என எல்லோரையும் போஸ்ட்மார்டம் செய்து ஆய்வரிக்கை சொன்னவர், அதனையும் அவரின் விசிறி கூட்டம் நம்பிகொண்டது.


அடிக்கடி இலக்கிய பரிசு வழங்கும் நோபல் கமிட்டியினை கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து திட்டிகொண்டிருப்பார்.


இவர் விமர்சிக்காத ஒரே ஒரு நபர் ஜெயலலிதா,


அவரை மட்டும் விட்டுவைத்தார், விமர்சித்திருந்தால் சிறையில் ஜெயமோகன் என பெரும் புத்தகம் வந்திருக்கும்,


"சுந்தர ராமசாமி சொன்னார் சிறை என்பது மானிட உணர்வின் சிந்தனை உள்ளோளியில்" என 400 பக்கத்திற்கு இவரும் எழுதியிருப்பார்.


இன்று ஏதோ வங்கியில் ஒரு பெண் மெதுவாக பணம் எண்ணிவிட்டாராம், அந்த வீடியோ காட்டி இவரின் விசிறிகளில் ஒன்று அலறியிருக்கின்றது


உடனே இவர் ஆமாம், அந்த கிழவியினை விரட்டவேண்டும், தேவாங்கு பெட்டர் என்றெல்லாம் புலம்பி இருக்கின்றார், காரணம் இவரின் பொன்னான நேரத்தை வங்கி புடுங்கிவிட்டதாம்


இணையத்தில் எழுதி குவிப்பவருக்கு, இணைய வங்கி பயன்படுத்த எவ்வளவு நேரமாகும்? அதனை செய்திருக்கலாம், செய்யவில்லை.


வங்கி பணி சிரமம் வாய்ந்தது, ஒரு நாளைக்கு ஆயிரம் வாடிக்கையாளர்களை அப்பெண் அதிகாரி சந்திப்பார். எது கள்ளநோட்டு, எது நல்லநோட்டு என அவர் சோதிக்கத்தான் செய்வார்


ஒரு ரூபாய் விடுபட்டாலும், ஒரு பூஜ்யம் அல்லது புள்ளிவிடுபட்டாலும் அந்த அதிகாரியின் நிலை மகா சிக்கலே அன்றி இந்த ஜெயமோகனுக்கு அல்ல‌


ஆலோசனை சொல்வதென்றால் வங்கிக்கு சொல்லலாம், கூட 4 வேலையாட்களை வைத்தால் என்ன? இன்னும் வசதிகளை கூட்டினால் என சொல்லலாம், அது ஏற்றுகொள்ள கூடியது


அதனை விட்டு விட்டு அவரை தேவாங்கு இவரை விட அப்பெண் சோம்பேறி என்பது, ஜெயமோகனை விட குரங்கு கையிலிருக்கும் பேனா நன்றாக எழுதும் என சொல்வதை போன்றது


சமீபத்தில்தான் சிங்கப்பூரில் சென்று ஒரு எழுத்தாளரிடம் வாங்கி கட்டி வந்தார், இப்பொழுது இங்கே தொடங்கிவிட்டார்.


மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் தரம் எட்ட இன்னும் 20 வருடம் ஆகுமென்று கோலாலம்பூரிலே தொடங்கினார், மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வேறு வேலை இருந்ததால் விட்டுவிட்டார்கள்.


வங்கி அதிகாரியினை மிக மட்டமாக இவர் சொன்னதை அடுத்து கடும் கோபமாக போட்டு சாத்திகொண்டிருக்கின்றார்கள்,


கோபமென்றால் கடல் பட ரிசல்ட் பார்த்து மணிரத்தினத்திற்கு வந்த கோபத்தை விட அதிகம்.


கடல் படம் மணிரத்தினைத்தை மூழ்கடித்த பின், காவிய தலைவன் படம் தயாரிப்பாளர் காப்பிக்கு வழி இல்லாமல் செய்த பின் அன்னாரின் கலைபயணம் நெல்லை, கன்னியகுமரி தமிழுக்கு மட்டும் சென்னையில் பயன்படுகிறது


இதனை நமது நெல்லை சிவாவோ, இமாம் அண்ணாச்சியோ செய்துவிடும் காரியம்.


மகாபாரதம் எவ்வளவு பெரும் காப்பியம், ஆனால் ராஜாஜி மிக சுருக்கமாக விளக்கம் எழுதினார், இன்னும் பலர் எழுதினர் மிக அருமையாக இருந்தது


அதில் ராஜாஜியின் எழுத்து இன்றுவரை சிலாகிக்க கூடியது.


ஆனால் நானும் பாரதம் எழுதுகிறேன் என சொல்லி கிட்டதட்ட 1 லட்சம் பக்கம் எழுதியிருக்கின்றார் எப்படி? எல்லாம் கற்பனை, மகா கற்பனனை


தாஜ்மஹால் இருக்கின்றது, அதில் இப்பக்கம் கொஞ்சம் கூடுதல் இப்பக்கம் கொஞ்சம் வெட்டுதல், உருவினை மாற்றுதல் என செய்து இதுதான் தாஜ்மஹால் என ஒன்றை காட்டினால் எப்படி இருக்கும்?


ஷாஜஹான் ஆவி விடுமா?


மகாபாரததினை பெரிதாக எழுதுகிறேன் என எதனையோ எழுதி மகா கற்பனை அபத்தமாக எழுதிவைத்திருக்கின்றார் அன்னார். இதனை ஒரு கிறிஸ்தவன், இஸ்லாமியன் எழுதினால் நிச்சயம் பொங்கி இருப்பார்கள்


ஆனால் ஒரு இந்த் மகாபரதம் எனும் காவியத்தை அவனவன் விருப்பத்திற்கு யாரும் வளைக்கலாம்


சத்தமே இருக்காது, இதுதான் இந்து அமைப்புகள் அரசியல்.


மகாபாரதம் மீது அபிமானமுள்ள இந்து இதனை நிச்சயம் கண்டித்திருப்பான், பைபிளை கண்டமேனிக்கு எழுதினால் கிறிஸ்தவன் விடுவானா? யேசுவின் வாழ்க்கையினை கற்பனையாக ஒரு வரி கூட்ட முடியுமா?


குரான் மொழிபெயர்ப்பினை இஷ்டத்திற்கு உங்கள் கற்பனையினை செலுத்தினால் என்ன ஆகும்?


ஆனால் ராமயணம், மகாபாரத்தினை இஷ்டத்திற்கு திரிக்கலாம், திரௌபதி அப்படி, துரியன் இப்படி என ஆளாளுக்கு சேர்த்துகொண்டே செல்லலாம்


யாரும் கேட்கமாட்டார்கள், எந்த இந்துவும் கேட்கமாட்டான். ஆனால் எங்காவது மாற்று மதத்துகாரன் சொல்லிவிட்டால் கொடிபிடித்து கிளம்புவார்கள்


முதலில் இந்துக்கள் தங்கள் அடையாளங்களை இம்மாதிரி இந்துக்களிடமிருந்து முதலில் காக்க வேண்டாமா?


ஆனால் செய்ய மாட்டார்கள், காரணம் இது மத அபிமானம் அல்லாத அரசியல், வெறும் அரசியல்.


ஜெயமோகன் இன்னும் நிறைய சொல்வார், அடிக்கடி சிக்குவார், நடக்கும்


காரணம் அவர் ஜெயமோகன் அல்ல, "சுய"மோகன் என பல இடங்களில் காட்டிகொண்டே இருக்கின்றார்.


அன்னார் முன்பு சொன்ன‌ பொன்மொழிகளில் சில‌


"பெரியார் செய்தது பெரிய காரியமே இல்லை, அவர் ஒன்றும் சாதிக்கவில்லை


பாரதி பெருங் கவிஞனே அல்ல, மகாகவி எனும் வார்த்தைக்கு தகுதி இல்லாதவன்


தேவதேவன் எனும் என் நண்பர் கண்ணதாசனை விட ஆயிரம் மடங்கு பெரும் கவிஞர்.


கலைஞர் எழுதியது எந்த வகையிலும் சேராது, அது ஒரு எழுத்தே அல்ல


தமிழை வளர்க்க, அதனை ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி எழுதினால் வளர்த்துவிடலாம்.


என் பாட்டி சொன்ன மகாபாரத்தினை நான் எழுதியிருக்கின்றேன்.


(எல்லா பாட்டியும் குழந்தைகளுக்கு கொஞ்சம் கற்பனையாகத்தான் சொல்வார்கள்) "


இப்படி ஏராளமான முத்துக்கள் உண்டு












கொசுறு









மாதம்தோறும் ரூ.2.50 லட்சம் பராமரிப்புத் தொகையாக வழங்குவதற்கு, தனது கணவருக்கு உத்தரவிட கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்துள்ளார்.

என்னது? மாதம் 2.50 லட்சம் பராமரிப்பு செலவா?

அந்த‌ மனிதனின் பின்னாலும் ஏதும் சோக கதை இருக்கலாமோ, பராமரிப்பு செலவினை தாக்கு பிடிக்க‌ முடியாமல் எங்கேனும் இவரை விட்டு ஓடியிருப்பாரோ?




No comments:

Post a Comment