Saturday, October 15, 2016

இன்று அப்துல் கலாமின் பிறந்தநாள்


ab


தோற்றம் : 15-08-1931   :: மறைவு : 27-07-2015


இன்று அப்துல் கலாமின் பிறந்தநாள்


பள்ளிகளில் விஞ்ஞான நாள் என கொண்டாடவேண்டிய நாள் இது.


அந்த மாபெரும் மனிதனை, விஞ்ஞான தமிழனை இந்த தேசம் எப்படி நினைவு கூறுகின்றது என தெரியவில்லை


அவரை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது, இன்னும் எழுதினால் அவரே வந்து கீபோர்ட்டினை உடைத்துவிடுவார்.


இந்தியா அவரின் பிறந்தநாளை கொண்டாடுகின்றதோ இல்லையோ, யாழ்பாண பலகலைகழகம் அதனை கொண்டாடிகொண்டிருக்கின்றது


யாழ்பாண மக்கள் கல்வியால் அடையாளம் பெற்றவர்கள், வாழ்வு பெற்றவர்கள். கல்வியின் அவசியமும் அது கொடுக்கும் உயர்வும் அவர்களுக்கு அனுபவபூர்வமாக புரிந்த விஷயம்


அதனால் அவரை அங்கே கொண்டாடிகொண்டிருக்கின்றார்கள்


இந்திராவிற்கு பின் யாழ்பாண மக்கள் கொண்டாடும் அடுத்த இந்தியராகிவிட்ட்டார் அப்துல் கலாம்


2013ல் கலாம் அந்த பல்கலைகழகத்தில் உரையாற்றினார், அதிலிருந்தே அவர்களுக்கு கலாம் பிடித்த தலைவரானார்.


"மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னனுக்கு
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோருக்கு
சென்ற இடமெல்லாம் சிறப்பு .."


அவ்வையின் வாக்கு அந்நிய தேசத்தில் பலித்துகொண்டிருக்கின்றது.


தமழரில் சிறந்த அவரினை அந்த தமிழர் கொண்டாடி கொண்டிருக்கின்றனர், தமிழக தமிழர்கள் சத்தமே இல்லை.


இதோ இந்தியா இன்றும் S-400 எனும் நவீன விமான எதிர்ப்பு ஏவுகனைகளை வாங்குகின்றது,


எல்லா ஏவுகனைகளையும் கொண்டிருக்கும் நாம், இந்த நவீன விமான எதிர்ப்பு ஏவுகனைகளையும் நமது நாட்டில் தயாரிக்க இந்நாளில் உறுதி ஏற்போம்


அப்துல் கலாம் பிறந்த நாளில் அப்படி ஒரு உறுதியினை இத்தேசம் எடுக்கட்டும்


காந்தி, காமராஜர் , கலாம் என்பதே இத்தேசம் கண்ட தன்னலமற்ற தலைவர்கள் வரிசை


விரைவில் அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகனைகளை தயாரித்து கலாமின் கனவினை முழுமையாக்குவோம்


வந்தே மாதரம்




No comments:

Post a Comment