Wednesday, October 12, 2016

முதல்வரின் ஆலோசனைபடி பன்னீர் செல்வம்....



ஆளுநர் அறிக்கைபடி, முதல்வரின் ஆலோசனைபடி பன்னீர் செல்வம் முதல்வர் துறை பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கபட்டுள்ளது.


கவனியுங்கள் முதல்வரின் ஆலோசனைபடியே முடிவு எடுக்கபட்டுள்ளதாம், எந்த முதல்வர்? அப்பல்லோவில் தீவிர கண்காணிப்பில் இருக்கும் நமது அதே முதல்வர்.


இதனால் கடந்த 4 நாட்களாக மக்களை குழப்பிய கேள்விக்கு விடைகிடைத்துவிட்டது


அதாவது கண்விழித்த முதல்வர் என்ன பேசினார் எனும் ரகசியம் வெளிபட்டுவிட்டது, செய்திகள் சொன்னபடியே இரண்டு வார்த்தைதான் பேசியிருக்கின்றார்.


அது இந்த இரு வார்த்தைகள்தான்


"பன்னீர் செல்வம்"






ma.jpg


எல்லோரும் முதல்வர் நலம்பெற வாழ்த்து சொன்னால், இந்த ரிட்டையர்டு ஜட்ஜ், மார்கண்டேய கட்ஜூ என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருக்கின்றார், மனதை திறந்து கொட்டுகின்றாராம்


இவர் மனதில் என்னமோ கமலஹாசன், சல்மான்கான் என்ற நினைப்பு போலும்


எல்லாம் காலத்தின் கோலம்


பவர்ஸ்டார் நலம் விசாரிக்க போகிறார், இங்கொருவர், மலரும் நினைவுகள் வாசித்துகொண்டிருக்கின்றார்


நீங்க வரவேண்டும் அம்மா, அதே ஜெயலலிதாவா திரும்ப வரவேண்டும். இவர்களை ஓட அடிப்பதற்காகவாவது திரும்ப வரவேண்டும்


முன்னாள் நீதிபதி கட்ஜூ அடிக்கடி கலைஞரை சீண்டுவதற்கும், இந்த அவரின் முன்னாள் காதலுக்கும் சம்பந்தம் இருக்குமோ?


ம்ம்ம்.... ஆனாலும் கட்ஜூக்கு எம்ஜிஆர் இல்லை என்றவுடன் குளிர்விட்டு போச்சி,


(எனக்கும்தான் வருஷம் 16 படம் பார்த்தபின் காதல் வளர்ந்துகொண்டே சென்றது , செல்கிறது, செல்லும் )








அன்றைய செய்தி


பேச்சாளர்களில் தனி இடம் பிடித்தவர் தீப்பொறி ஆறுமுகம், ஏராளமான சுவாரஸ்ய பேச்சுக்கள் அவரிடம் உண்டு, நண்பர் ராஜ்நாயகம் கூட அவரைபற்றி எழுதியிருப்பார்



கற்பனையாக பேசி தாக்குவதில் ஆறுமுகம், அசால்ட். அப்படி அன்றொருநாள் அன்றைய முதல்வர் ம.கோ ராமசந்திரனை கிழித்தெறிந்தார். அதாவது அன்று டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் சென்னை வந்தால் இப்படி இருக்குமாம்,


(அன்று பிரதமர் மொரார்ஜ் தேசாய், ம.கோ.ராமசந்திரன் முதல்வரான புதிது, அவரின் அண்மைய படமான மீணவ நண்பன் ஓடிகொண்டிருந்தது)




கார்ட்டரும், மொரார்ஜி தேசாயும் சென்னை வருகின்றார்கள், மீனம்பாக்கம் ஏரோர்ட்டில் ராமச்சந்திரன் ஜிம்மி கார்ட்டரை வரவேற்று கைகுலுக்குகின்றார்


காரில் மூவரும் செல்கின்றார்கள், எதேச்சையாக சாலை ஓரத்தில் மீணவ நண்பன் படத்தின் கட் அவுட்டினை ஜிம்மி பார்க்கின்றார், அதில் லதாவின் மடியில் தலைவைத்து கிடக்கின்றான் சினிமா ராமச்சந்திரன்


ஜிம்மி கார்ட்டருக்கு அதிர்ச்சி, போஸ்டரை பார்க்கின்றார், எம்ஜிஆரை பார்க்கின்றார், மாறி மாறி பார்க்கின்றார். எம்ஜிஆர் புன்னகையோடு இருக்கின்றார்


ஆச்சரியபட்ட ஜிம்மி, பிரதமர் மொராஜ் தேசாயிடம் கேட்டார். அவரை போலவே இவர் இருக்கின்றாரா? அல்லது இவர் அவரை போலவே இருக்கின்றாரா?


எசிச்சலுடன் சொல்வார் மொராஜ் தேசாய்,


"அவன் தான் இவன், இவன் தான் அவன்", அதன் பின் ஜிம்மி கார்ட்டர் தமிழகத்தை பற்றி என்ன நினைப்பான்?


இப்படி முடிப்பார் தீப்பொறி ஆறுமுகம்


அவரின் இந்த "அவன் இவன் தான், அவன் இவன் தான்.." எனும் மீணவ நண்பன் கலாய்ப்பு யார் கேட்டார்களொ இல்லையோ சமீபத்திய கவிஞர் ஒருவரின் காதினை எட்டியிருக்கின்றது


ரெமோ படத்தில் இம்சையாக பாடல் எழுதிவிட்டார்


"அவ இவதான்,இவ அவதான்" என ஒரே இம்சை, அதே வரிதான் பாடல் முழுக்க வந்ததுபோல இருக்கின்றது, வானொலியினை திறக்கமுடியவில்லை


ஆனாலும் பாடலை கேட்கும்பொழுது தீப்பொறி ஆறுமுகம் ராமச்சந்திரனை கலாய்த்த கலாய்ப்பு நினைவுக்கு வருகின்றது







No comments:

Post a Comment