Tuesday, October 11, 2016

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வெறும் 65 ஆயிரம் கோடிக்குத்தான் விற்பனை ஆனதாம்



கிட்டதட்ட 6 லட்சம் கோடிக்கு விற்கவேண்டிய ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வெறும் 65 ஆயிரம் கோடிக்குத்தான் விற்பனை ஆனதாம், மத்திய அரசு கவலையாம்


ஆனால் அன்று 1,80,000 கோடிக்கு விற்க கூடிய 2ஜி ஸ்பெக்ட்ரமை மிக குறைந்த விலையில் விற்று காங்கிரசும் கலைஞரும் பெரும் ஊழல் செய்துவிட்டார்களாம்,


அதாவது காங்கிரஸ் அரசில் அரசுக்கு வந்திருக்கவேண்டிய 1,80,000 கோடி வராமல் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டாயிறாம். அதனை அந்த விலைக்கு விற்றே தீர்த்திருக்கவேண்டுமாம்


கனிமொழி, ராஜா, கலைஞர் எல்லாம் கொள்ளையடித்தார்களாம்.


சரி இன்று வந்திருக்கவேண்டிய அதே 6 லட்சம் கோடி அரசுக்கு வந்திருக்கவேண்டும் அல்லவா? அது எப்படி பத்தில் ஒரு பங்காக சுருங்கிற்று?


இதனை எல்லாம் சு.சாமி கேட்கமாட்டார், பத்திரிகைகளும் வெளிவிடாது


ரிலையன்ஸ் 50ரூபாய்க்கு இறங்கி இண்டர்நெட் என பழைய பேரிட்சம்பழ வியாபாரி போல இறங்கி வருவதற்கும், இந்த அரசு இழப்பீடுகளுக்கும் என்ன சம்ப்ந்தம் என யாரும் கேட்க கூடாது, காரணம் மோடி சந்தேகதிற்கு அப்பாற்பட்டவர்.


அமைச்சர் ரவிசங்கர் சூரியனை போல களங்கமில்லாதவர் என நம்பிகொள்ளவேண்டும், அப்படி இருக்கட்டும்


ஆனால் ராசா அமைச்சராக இருக்கும்பொழுது வருமான குறைவு என்றால் ஊழல் என ஊளையிடுவதும், ரவி சங்கர் அமைச்சராக இருக்கும் பொழுது அதே போன்று பெரும் வருமான இழப்பு ஏற்படும்போது அமைதியாக இருப்பது ஏன்?


மோடிக்கும் ரவிசங்கருக்கும் ஒரு நியாயம், மன்மோகனுக்கும் ராசாவுக்கும் ஒரு நியாயமா?


ஜே சொத்துகுவிப்பு வழக்கு என்னாகும் என தெரியாது, ஆனால் கனிமொழி மீதான வழக்கில் இந்த அறிக்கைகள் சில தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும், கலைஞர் புன்னகைக்கும் நேரமிது


அப்பல்லோ நிலவரங்களில் கவனம் செலுத்தும் கலைஞர் இதனையும் நிச்சயம் அறிந்திருப்பார், ஆனால் ஏன் இன்னும் அறிக்கை விடவில்லை


அதுதான் கலைஞர்


அதாவது இந்த காங்கிரஸ், திருநாவுக்கரசர் எல்லாம் ஒரு மாதிரி ஆடுகின்றார்களா, ராகுல் வேறு கலைஞரை பார்க்காமல் ஓடிவிட்டாரா எல்லாவற்றையும் சேர்த்து விரைவில் இப்படி கொடுப்பார்


"உடன்பிறப்பே, தாழ்த்தபட்டவன் அமைச்சரானால் பொறுக்காமல் பார்ப்பண கூட்டம் பழிதீர்த்த கதை அறிவாயா


இன்று உண்மை சந்திக்கு வந்திருக்கின்றது,


அன்று அது நம்மிடம் என்றும் போலவே இருந்தது, ஆனால் சதிகாரர்கள், வஞ்சகர்கள் திட்டம் தீட்டும்பொழுது, "கை" கொடுத்து காப்பாற்றுங்கள் என கெஞ்சினோம்


அன்றே அவர்கள் "கை" கொடுத்திருந்தால் இந்த பழி நமது மீது, நம் கழகத்தின் மீது விழுந்திருக்காது, துரோகத்தால் கை கழுவினார்கள், விழுந்தோம்


கழக கண்மணி ராசாவும், நான்பெற்ற கண்மணி கனிமொழியும் இதனால் அடைந்த வேதனையும், பழியும் யார் கண்ணிலும் ரத்தம் வழிய வைக்க கூடிய குரோத சம்பவங்கள்


இதோ உயிர்த்தெழுந்த உண்மையினை ஆரிய கூட்டமே ஒப்புகொண்டிருக்கின்றது, விற்காத அலைவரிசையின் மதிப்பு அரசுக்கு வருமான இழப்பு அல்ல என அதுவே ஒப்பு கொண்டிருக்கின்றது.


விற்காத அலைவரிசைகளுக்கு அமைச்சகம் பொறுப்பல்ல, வைத்த இலக்குகளுக்கு பணம் வராதது ஏமாற்றமே தவிர, அமைச்சரின் குற்றமல்ல என அவர்களே வாய்விட்டு சொல்லிவிட்டார்கள்.


பின்னர் ஏன் அன்று நம்குரல் எடுபடவில்லை?, நம் கதற்லகள் கேட்கபடவில்லை? காரணம் நாம் பெரியார் வழி நடக்கும் திராவிடர்கள் அன்றி என்ன இருக்க முடியும்?


அதாவது ஆரிய பார்ப்பண கூட்டம் செய்தால் அது சரி, அதனையே தாழ்த்தபட்ட, பெரியாரால் எழும்பிய ஒரு பஞ்சமன் அமைச்சராக இருந்து சொன்னால், அவன் ஊழல்வாதி


உடன்பிறப்பே இந்த செய்தியினை, நாம் கறைபடா கரங்களுக்கு சொந்தக்காரர்கள் எனும் களிப்பான செய்தியினை, தமிழகம் முழுக்க முழங்கசெய்வாய்


அந்த முழக்கத்திலே ஆரிய சதி ஒழியட்டும், அப்படியே உள்ளாட்சி தேர்தலில் திராவிட கொடி பறக்கட்டும்"


கலைஞர் எழுதுவாரா இல்லையா தெரியாது.


ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் என சொல்லி, அதனை பெரிதாக ஊடகங்கள் மிகைபடுத்தின, பெரும் ஊழலாக அதனை சித்தரித்தன என்பது உண்மை


அன்றே அப்படி எழுதிய ஊடகங்கள் இன்று 6 லட்சம் கோடிக்கு எப்படி பொங்கவேண்டும்?


ஆனால் சத்தமே இல்லை, இதுதான் விசித்திரம்.






No comments:

Post a Comment