Wednesday, October 12, 2016

காங்கிரசார் யோசிக்கவேண்டிய நேரமிது...

காமராஜர் காலத்திற்கு பின் காங்கிரஸ் தமிழகத்தில் காணாமல் போக தொடங்கியது


பின்னாளில் இந்திரா கொலை, ராஜிவ் கொலை அனுதாபமும் அதிமுகவிற்கு உதவியதே தவிர காங்கிரசுக்கு கொஞ்சமும் இல்லை. இந்த தமிழக காங்கிரசுக்கு அதனை பயன்படுத்திகொள்ளும் விதமும் தெரியவில்லை


வெங்கடேசபண்ணையார் என்கவுண்டரை கூட அனுதாப அரசியலாக்கி திருச்செந்தூர் தொகுதியினை அவர் மனைவி மூலமே கைபற்றிய கலைஞரின் சாமார்த்தியம் இவர்களுக்கு சுட்டுபோட்டாலும் வராது


ஏதோ கலைஞர் கூட்டணியில் தொடர்வதால், காங்கிரஸ் இருப்பதாவது தமிழகத்திற்கு தெரிகின்றது, கொஞ்சமாவது எம் எல் ஏக்கள் இருந்து சட்டமன்றத்தில் ஒரு அடையாளமாவது இருக்கின்றது


அதனை சுத்தமாக துடைத்தொழிக்கும் முயற்சியில் திருநாவுக்கரசர் இறங்கி இருகின்றார், அவருக்கு அப்படி என்ன ஆசையோ தெரியவில்லை


காரணம் ஜெயலலிதா கூட்டணியினரை என்ன பாடு படுத்த்துவார் என்பது அவரோடு முன்பு கூட்டணி கண்டுவிட்டு இன்று வாய்பொத்தி ரோட்டில் நிற்கும் தலைவர்களை கண்டால் தெரியும், அவ்வளவு ஏன் முன்னாள் பாஜகாரரான இவர் வாஜ்பாயிடம் கேட்டாலே கண்ணீரோடு சொல்வார் அவர்.


அப்படி வரலாறுகள் இருந்தபின்னும் மல்லுகட்டி அவர்களோடு கூட்டணிக்கு நிற்பது, தமிழக காங்கிரசை மண்ணோடு மண்ணாக்கும் திட்டமாக இருக்கலாம்


ஒருவேளை அந்த திட்டத்தோடுதான் அவர் பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு வந்திருப்பாரோ? இருக்கலாம்.


வேறு வாய்ப்புகள் இருக்க சாத்தியமில்லை ஒன்றை தவிர‌


அது தான் எம்பியாகவோ அல்லது எம் எல் ஏவாகவோ ஆகும் ஆசை இருக்கலாம்


அப்படி ஆசை இருந்தால் அவர் நேரடியாக அதிமுகவிலே சேர்ந்து கருணாஸ் போல ஆகலாம்,


மற்றபடி காங்கிரசில் இருந்து அதிமுகவோடு இணைந்து தேர்தலை சந்தித்து அப்படி ஆகலாம் என்றாலும் அவர்களுக்கு கிடைக்கபோகும் மொத்த போட்டியிடும் இடமே 5 அல்லது 6 தான்


இதில் இவருக்கு இடம் கிடைப்பதே பெரும்பாடு


காங்கிரசார் யோசிக்கவேண்டிய நேரமிது,


கலைஞரிடமாவது ஆட்சியில் பங்கு என கோரிக்கை வரை எழுப்பமுடிந்தது


இங்கு கூட்டணி என அறிவித்துவிட்டு தேர்தல்  சீட்டில் பங்கு என கோரிக்கை வைப்பதே பெரும் சவாலாக இருக்கும்,

No comments:

Post a Comment