Monday, October 17, 2016

மகா விசித்திரமானவர்கள் தமிழர்கள்...



15 ஆண்டுகாலம் மத்திய அரசில் இருந்த திமுகவினர் அன்று சிறுதுரும்பும் கிள்ளிபோடாமல் இன்று வந்து காவேரி மேலாண்மை வாரியம் வேண்டும் என தமிழ்நாடெங்கும் போராடுகின்றனர்


மன்மோகன் அரசு தமிழர் எதிரி, மோடி தமிழர் நண்பன் என சொல்லி ஓடிபோய் கூட்டணியில் இடம்பிடித்த வைகோ இன்று திருச்சி பக்கம் மோடி ஒழிக என சொல்லிகொண்டிருக்கின்றாராம்.


இதில் தமிழக காங்கிரஸ் வேறு திருநாவுக்கரசர் தலமையில் போராடுகின்றதாம், அடேய் எத்தனை வருடமாக காங்கிரஸ் ஆண்டு என்ன ஆணி அல்லது ஷட்டர் புடுங்கீனீர்கள் என ஒருவரும் கேட்கவில்லை


காவேரி மேலாண்மை வாரியம் எப்பொழுது அமைக்கபடும் என தெரியாது


ஆனால் ஒருவேளை அடுத்த தேர்தலில் இவர்கள் மத்திய அரசில் பங்குபெற்றால் இதனை தீர்ப்பார்கள் என்றா கருதுகின்றீர்கள்?


அன்று நிச்சயம் மறந்து வேறு சாக்குபோக்கு சொல்வார்கள்.


சரி இவர்கள் எதிர்கட்சி இப்படி ஏதாவது செய்து நாங்கள் தமிழர் நல காவலர்கள் என எதனையாவது சொல்லிகொண்டே இருப்பார்கள்.


இந்த ஆளும் கட்சி எம்பிக்கள் டெல்லியில் ஏதாவது செய்திருக்கவேண்டும் அல்லவா? குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில் ஒரு குரல் எழுப்பியிருக்கவேண்டுமல்லவா?


ஆனால் எங்கு குரலெழுப்புகின்றார்கள்


ஆலயங்களில் கடவுளை நோக்கி குரலெழுப்புகின்றார்கள், அலகு குத்துதல், யாகம் , வேண்டுதல், சாமியாடுதல் அதில் சிலரை கொல்லுதல் என ஏக பிசி


சரி இந்த காவேரி பிரச்சினையில் உங்கள் கட்சியின் நிலை என்ன என கேளுங்கள், மேலாண்மை வாரியம் வரவேண்டும் என அலகு குத்திய வாயிலும் சொல்வார்கள்


எப்படி வரும் என கேளுங்கள்


அம்மா குணமாகிவந்தால் கண்டிப்பாக நடக்கும், இல்லாவிட்டால் நடக்காது, அதற்கு நீனும் குத்திகொள் என நமக்கும் குத்திவிடுவார்கள்.


இதில் அம்மா நலம்பெற பிச்சைக்காரன் படத்தின் தாக்கத்தில் சிலர் இறங்கி இருப்பதாக கேள்வி.அவர்களுக்கென்ன ஒன்று வோட்டு பிச்சை அல்லது இம்மாதிரி பிச்சை எல்லாம் பழகிபோன ஒன்று


"அம்மா தாயே.." என கேட்பதை இனி "அம்மாவிற்காக தாயே.." என கேட்கலாம்


ஆக தேர்தல் என்றால் 1000ரூபாய்க்கு உரிமையினை அடகு வைப்பது ஒரு இடம்,


உரிமை தரவில்லை என கத்துவது இன்னொரு இடம்


மகா விசித்திரமானவர்கள் தமிழர்கள்.






No comments:

Post a Comment