Thursday, October 20, 2016

மூட்டை கட்டும் பரக் ஒபாமா!!!

ஓபாமா மூட்டை முடிச்சுகளை வெள்ளை மாளிகையில் கட்டிகொண்டிருக்கின்றார்.


இறுதிகட்ட தொலைகாட்சி விவாதத்தில் ஹிலாரியும், டிரம்பும் தம் கட்டி பின்னிக்கொண்டிருக்கின்றனர்.


என்ன இருந்தாலும் இன்றைய உலகின் நம்பர் 1 வல்லரசு நாடு, அதன் பாதிப்பு எல்லா நாடுகளிலும் உண்டு. அதன் தேர்தலும் அதிபரின் கொள்கையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இன்றைய நிலையில் உலகின் எல்லா நாடுகளையும் பாதிக்கும்




அவர்களின் ஒற்றைகொடி உயர பறக்கும் காலம், ஜாதகத்தின் எல்லா கட்டத்திலும் குருவும் சுக்கிரனும் இருக்கின்றார்கள், கூடுதலாக 4 கட்டம் போட்ட ஸ்பெஷல் ஜாதகம் அவர்களுடையது.


டிரம்பும், ஹிலாரியும் கடும் வாதம்.


அந்த நாட்டு நிலை அப்படி இருக்கின்றது, டிவிக்களில் அதிபர்களே நேருக்கு நேர் நின்று பதிலுக்கு பதில் சொல்லிகொள்கின்றார்கள்


மக்கள் கவனிக்கின்றார்கள்


நமது நாட்டில் கட்சி அல்லக்கைகளும், மக்களும் மோதிகொண்டிருப்பார்கள், தலைவர்கள் அமைதியாக அவரவர் இல்லங்களில் இருப்பார்கள்.


நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு "ஜனநாயக" வித்தியாசம்


அவ்வளவு ஏன்? அவர்களின் ஊடகங்களுக்கும் நமது ஊடகங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்


இந்த பாண்டேயோ, இந்த கோபிநாத்தோ சந்தையில் காய்கறி பொறுக்குபவன், துண்டுபீடி குடித்துகொண்டு மண்சுவர் மேல் குந்தியிருப்பவன், கடற்கரையில் சும்மா மல்லாக்க கிடப்பவன்,


சும்மா அள்ளிவிடும் உளறுவாயனை எல்லாம் பிடித்து கேள்வி கேட்பதை போல இல்லாமல்


அமெரிக்க ஊடகம் ஒரே மேடையில் இருவரையும் விவாதம் செய்ய வைப்பது போல‌


கலைஞரையும் ஜெயலிதாவினையும் அமர வைத்து விவாதம் செய்ய வைத்தால் எப்படி இருக்கும்?


செய்ய முடியுமா? செய்ய முயற்சித்தாலே ஸ்டூடியோ இருக்காது, அதனை மீறி ஏதும் நிகழ்ச்சி நடந்தால், நாமகவே அடித்து மோதிகொள்வோம்.


அமெரிக்காவில் மக்களாட்சியின் பொருள் வேட்பாளர், ஊடகம், மக்கள் என எல்லோருக்கும் தெரிகின்றது.


தமிழகத்தில் மக்களாட்சி என சொல்லிகொள்கின்றோமே தவிர, மனதால் இன்னும் மக்களாட்சியின் மகத்துவம் இன்னும் புரியவே இல்லை


அந்நிலைக்கு வர இன்னும் நெடுநாளாகும், அதற்கு முன் தமிழகம் மனிதர்கள் வாழமுடியாத நிலைக்கு சென்றாலும் ஆச்சரியடுவதற்கில்லை.



No comments:

Post a Comment