Wednesday, October 19, 2016

வாருங்கள் கற்றுகொள்வோம்... கலைஞரிடம்...

வேலை செய்கின்றாயா இல்லையா? உன்னால் எப்படி இப்படி பதிந்துகொண்டே இருக்கமுடிகின்றது என பலர் கேட்கின்றார்கள்.


அவர்களுக்கெல்லாம் ஒரு பதில்தான் சொல்லமுடியும்


அண்ணா மறைந்து கலைஞர் முதல்வராகிறார்.


முதல்வர் பணி என்பது சாதாரண பணி அல்ல, பன்னீர் செல்வம் போன்றவர்களுக்கு சிக்கலே இல்லை. நாம் சொல்வது முதல்வர் முடிவெடுக்கும் பணி


ஆனால் கலைஞர் கோப்பு பார்ப்பார், முன்னால் இருப்பவரிடம் பேசிகொண்டே இருப்பார், திடீரென போனில் வீட்டில் உள்ளவர்களோடு பேசுவார், கோப்பில் கையெழுத்து வைத்துகொண்டே அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பிப்பார்.


நாற்காலியில் இருக்கும் 4 மணிநேரத்தில் 40 மணிநேரத்திற்கான வேலைகளை அவர் முடித்திருப்பார்.


அப்படி ஒரே ஒரு முதல்வரை மட்டுமே சந்தித்திருக்கின்றது அந்த கோட்டை, அப்படி ஒரு முதல்வர் இனி சாத்தியமில்லை என்கின்றது வரலாறு


பரபரவெனும் வாழ்க்கை, துறுதுறு பதிகள், கட கடவென முடிக்கும் வேலைகள் ஆனாலும் ஒன்றிலும் ஒரு பிசிறு இருக்காது, இதுதான் கலைஞரின் செயல்திறன். அவருக்கு மட்டுமே சாத்தியம்.


அப்படி பணிகளுக்கு இடையே வந்தவர்களை எல்லாம் சந்தித்து அனுப்பிகொண்டே இருப்பார், சிரிக்க சிரிக்க பேசிகொண்டே இருப்பார், ஆனால் காரியங்கள் மிக சிரியாக அவரால் நடத்தபட்டுகொண்டிருக்கும்


இந்த பணிகளுக்கிடையே பத்திரிகையாளர்களுக்கான பதில்களும் மனதில் ஓடும்


அப்படி எல்லாம் முடிந்து அவர்களை சந்திப்பார், செல்லும் வழியில் இலக்கிய கூட்டம் அல்லது சிறப்பு அழைப்பு கூட்டங்களில் கலந்து மணிகணக்கில் பேசுவார்.


குறிப்புகள் இன்றி மணிகணக்கில் பேசுவது அவரின் திறமை என்பார்கள், அல்ல அவர் படித்த நூல்கள் அப்படி, அவரின் நினைவு திறன் அப்படி. பட்டனை தட்டினால் வரும் கணினி போல எல்லாம் அவரின் வாயில் இருந்து வரிசையாக கொட்டும்


எந்த தலைப்பினை கொடுத்தாலும் அவரால் மணிகணக்கில் உடனே பேசமுடியும்.


மதிய உணவிற்கு பின் மீண்டும் இதே பரபரப்பு, அவ்வப்போது சூடாக எதிர்கட்சிகளுக்கும் அறிக்கை. கட்சிக்காரர்களுடனான பன்ஞ்சாயத்து இன்னபிற கட்சி சம்பிரதாயங்கள்.


தினமும் தவறாது முரசொலியில் 10 பக்கத்திற்கு எழுத்து


எவ்வளவு பரப்பான வாழ்க்கை எனினும் ஒரு நாளைக்கு ஒரு புத்தகமாவது வாசித்துவிட்டு தூங்க செல்வது


மறுபடி 4.30க்கு எழுந்து பத்திரிகை படித்து அதற்கான பதில்களையும் மனதில் ஓடவிட்டு வாழ்வினை துவக்குவது


இதில் கட்சி கூட்டம், தேர்தல் பிரச்சாரம் எல்லாம் தனி வகை.


இரு குடும்பம், ஏராளமான உறவுகளையும் அவர் கட்டி காத்திருக்கின்றார், திரைப்படம், புத்தகம் என எழுதி குவித்திருக்கின்றார்


அப்படி வாழ்வினில் ஒரு நிமிடத்தில் பல செயல்களை செய்துகொண்டே இயங்கிய , இயங்கும் மனிதர் அவர்


முதல்வராகும் முன்பு என சொல்வதை விட, 12 வயதில் இருந்தே அவரின் வாழ்வு அப்படித்தான் இருந்திருக்க்கின்றது.


அவரை மனமார ரசித்தால் அவரின் செயல்பாடுகளில் ஏதாவது ஒன்று உங்களோடு ஒட்டிகொள்ளும்.


அப்படி நான் ரசித்திருக்கின்றேன், என்னோடும் சில ஒட்டிகொண்டது, என்னால் சில விஷயங்கள் சாத்தியமாகின்றது.


நீங்களும் அவரை ரசித்து பாருங்கள், நிச்சயம் உங்களாலும் முடியும்


கற்றுகொள்ள ஏராளமான விஷயங்கள் அவரிடம் உண்டு


வாருங்கள் கற்றுகொள்வோம்...








எல்லா திமுககாரனும் என் நட்பு பட்டியலில்தான் இருந்திருக்கின்றான்,

விட்டால் நமக்கும் மஞ்சள்துண்டு போர்த்தி 5 விரலையும் விரிக்க விட்டுவிடுவார்கள் போல...

எவ்வளவு பெரிய ஆபத்து...

(சங்கத்தை உடனே கலைங்கடா..........)




 

No comments:

Post a Comment