Monday, October 17, 2016

என்ன பெரிய அந்தரங்கம்?



அதனை எழுதி, இதனை எழுதி இறுதியில் காமராஜரின் அந்தரங்கம் என்ன என சிலர் எழுத தொடங்கிவிட்டார்கள்


இன்னும் என்னவெல்லாம் எழுதுவார்களோ தெரியாது


அக்கால தலைவர்கள் இன்றுள்ளவர்கள் போல அல்ல, மாறாக முழுநேரமும் நாட்டுமக்களையே சிந்தித்தவர்கள்


காந்தி மணம் முடித்தாலும் தன் குழந்தைகளுக்கு ஒன்றும் விட்டு சென்றவர் அல்ல, தேசம் கொட்டி கொடுத்த நிதிக்கு ஒரு பைசாவுற்கும் கணக்கு வைத்திருந்தார்.


பெரும் கோடீஸ்வரனான நேரு இந்நாட்டிற்கு விட்டுகொடுத்த சொத்துக்கள் கொஞ்சமல்ல, பெரும் அரண்மனை போன்ற பங்களாக்கள் அடங்கும்


கலெக்டர் பட்டத்தினை தூக்கி எறிந்து துப்பாக்கி தூக்கினார் போஸ்


மதிப்பெண் குறைந்த தன் குடுமத்தினருக்கு கூட அரசு மருத்துவமனையில் இடம் கொடுக்ககூடாது என மல்லுக்கு நின்ற கண்டிப்பான தலைவர்கள் அன்று இருந்தனர்


காமராஜரும் அந்த வரிசையே


ரேசன் அரிசி உண்டு அந்த‌ ஒருவராகவே அவர் வாழ்ந்தார், தாயினையும் ஏழையாகவே வைத்திருந்தார்.


ஒருமுறை வினோபாவே சென்னை வந்தபொழுது ஒரு பணக்கரர் வீட்டில் தங்கவைக்கபட்டார், காமராஜ் இல்லத்தில் அல்ல. சர்ச்சை எழுந்தது


"என் வீட்ல எனக்கு தவிர யாருக்கு சாப்பிட அரிசி இருக்குண்ணேன்..என் அம்மா வந்தா கூட கொடுக்க சோறு இல்லண்ணே..." என அவ்ர் சொன்னவார்த்தைகள் சாதாரணம் அல்ல‌


கட்சிகூட்டங்களில் தனக்கு குவிந்த நிதியினை கூட தேனாம்பட்டை நிலத்தினில் கட்சி கட்டடம் கட்டும் தொலைநோக்கில் கொடுத்தவனம்மா அவன்


அவன் இருந்ததோ வாடகை வீடு, நாலுபேர் வந்தால் சந்திக்க பெரிய வராண்டா உள்ள வாடகை வீடு


அவர் இறந்தபின் தமிழக அரசே அதனை நினைவுசின்னம் ஆக்கிற்ற்று, ஆக்கியவர் அவரின் அரசியல் எதிரி கலைஞர், ஆனால் பாராட்டபடவேண்டிய கலைஞர்.


கடுமையாக காரி துப்பி காமராஜரை எதிர்த்து அரசியல் செய்த அதே கலைஞர், கொஞ்சமேனும் மனசாட்சி உள்ள கலைஞர். தாம் செய்வது தவறு என தெரிந்தும் காமராஜரை தூற்றிய அதே கலைஞர்.


அவரின் மனசாட்சிப்படி அவர் செய்த காரியம் அது.


அன்று காமராஜருக்கு எதிராக சூறாவளியாக சுழன்றடித்த கலைஞர் கூட காமராஜரை பற்றி ஒரு அந்தரங்க கேள்வி கேட்கமுடியவில்லை,


"திருமணத்திற்கு பெண் கிடைக்கா பொறுப்பற்ற பண்டாரம்.... எனும் அளவில்தான் அவர் தாக்குதல் இருந்தது.


இதனை மறுக்கமுடியா திராவிட கொழுந்தே...


அம்மனிதனை பழிக்காதீர்கள் அம்மா, நாடு தாங்காது.


நீங்கள் திராவிட வளப்பாக இருக்கலாம், திராவிடம் தாய்பாலுக்கு பதில் ஊட்டபட்டதாக இருக்கலாம், ஆனால் பசுவினை கரடி என சொன்னால் யாராவது ஏற்றுகொள்ளமுடியுமா?


திராவிடம், பெரியார்,இட ஒதுக்கீடு, என ஆயிரம் எழுதுங்கள், பெண் உரிமை பற்றி எழுதுங்கள், ஆனால் காமராஜருக்கு அந்தரங்கம் என சொல்லமுடியுமா?


அரங்கமே இல்லாத மனிதனுக்கு ஏதம்ம அந்தரங்கம்?


எமது மண்ணில் அவ்வப்போது அவதாரங்கள் தோன்றும், அது பெண்ணை தொடாமலே, தனக்கென குடும்பம் சேர்க்காமலே வாழும்.


விவேகானந்தர் போன்ற பெரும் ஞானிகள் ஒருவகை


திருமணம் செய்யாமல் நாட்டிற்காய் வாழும் சிலபேர் ஒருவகை


அதில் காமராஜரும் ஒரு தொடர்ச்சி.


தன் சொத்துக்களை எல்லாம் எழை மக்களுக்கு பகிர்ந்தளித்து இறுதிவரை வீரமாய் நின்ற தேவர் பெருமகனாரும் அதிலொருவர்.


காமராஜரின் அந்தரங்கம் போல தேவரின் அந்தரங்கம் என எங்காவது எழுதி தொலைத்துவிட்டாதீர்கள் தாயே..


அம்மனிதன் மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் இறுதிவரை பிரம்மசரியம் காத்த பெரும் ஒழுக்க சீலன் அவர்.


காமராஜர், தேவர், எல்லாம் அவ்வகையில் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவர்கள்.


அந்தரங்கம் என ஒன்றுமின்றி திறந்த புத்தகமாகவே வாழ்ந்தவர்கள்.


திராவிட கட்சியின் பிதமாகனின் நிர்வாண கிளப் செய்தி, முதுமை திருமண செய்தி படித்த பாதிப்பில் நீங்கள் இருக்கலாம்


எல்லா திராவிட தலைவர்களுக்கும் கணக்கில் இரண்டுக்கு மேலேயும் கணகில் வராமல் இருக்கும் மனைவி கணக்கினை இவர்களிடம் நீங்கள் தேடவேண்டாம்.


அவர்களின் கறுப்புபணம் போலவே, ஊழல் போலவே அவர்களின் மறைக்கபட்ட மனைவியர் அல்லது கணிகையர் ஏராளம்.


இந்த போலி திராவிட, எதற்கும் கட்டுபடாமல் எத்தனை பெண்களையும் கொள்ளலாம் என பேசி, செய்தும்காட்டிய இந்த பிழைப்புவாதிகளை அந்த உத்தமர்களோடு சேர்த்து எடைபோடவேண்டாம்


பெண்ணுரிமை, பெரியாரிசம் என்பது உத்தம தலைவர்களுக்கு பெண் தொடர்பு இருந்ததா? என விசாரிப்பது அல்ல அம்மா..


ஆனாலும் மனம் கனக்கின்றது


எவ்வளவு துணிந்து காமராஜரின் அந்தரங்கம் என கிளம்பிவிட்டார்கள்.


ஆனாலும் கோபுர கலசத்தினை நோக்கி சில நரிகள் ஊளையிட்டால் ஒன்றும் ஆகபோவதில்லை


எனினும் மனம் கனக்கின்றது.


இனி அப்துல் கலாமிற்கு என்ன அந்தரங்கம் தேடபோகின்றார்களோ தெரியவில்லை


என்ன பெரிய அந்தரங்கம்?


திராவிட அரசில்வாதிகளின் அந்தரங்கங்களை முதலில் பாருங்கள், அதன் பின் காமராஜரின் அந்தரங்கம் தேடினால் அது வணங்கதக்க பூஜையறையாய் தெரியும்.


கலாமின் அந்தரங்கம் இந்திய ஏவுகனை பாதுகாப்பில் தெரியும்


இவர்களின் வாழ்வினில் என்ன ரகசியம் அல்லது என்ன ரகசியம் ஒளித்துவைத்தார்கள்? எந்த பக்கத்தை மறைத்தார்கள்?


அதாவது இவர்களின் இந்தரங்கம், அந்தரங்கம் என எல்லா அரங்கமும் தேசம்தான்.


திறந்து கிடக்கின்றது அவர்களின் வாழ்க்கை ஏடு, யாரும் படிக்கலாம்


படித்துவிட்டு எழுதலாம்


சொந்த தங்கையின் மகள் ஒருவனுக்கு மருமகள் உறவு வராதா, அவன் அரசியல் துறவியானாலும் பிறப்பால் வந்த உறவு அந்துவிடுமா?


உங்கள் திராவிட கொள்கைகளில் குடும்ப உறவினை கூடவா மறந்துவிடுவீர்கள்? என்ன கொடுமை இது.


எதற்கும் அம்மணி கொஞ்சம் கவனம் தேவை, நாளையே திராவிட போதை தலைக்கேறி, தேவர் பெருமகனின் அந்தரங்கம் தெரியுமா? என கிளம்பிவிடாதீர்கள், அது பெரும் ஆபத்திற்குரியது


ஞானிகளும், மகான்களும், தூய்மையான மனிதாபிகளும், திருமணம் செய்வதில்லை


வரலாறு அதனைத்தான் சொல்கின்றது


மக்களுக்கு வழிகாட்ட குடும்பம் உதறினான் புத்தன், குடும்பம் இன்னொறு சிலுவை என்றார் இயேசு, அவரின் பிராதான சீடர்களும் அப்படியே


இந்நாட்டு ஞானி விவேகானந்தரும் குடும்பம் கண்டாரில்லை


அந்த தென்பாண்டி மக்கள் அறிவும், முன்னேற்றமும் பெறவேண்டும் அதுவே என் வாழ்வின் அர்த்தம் என விரதமிருந்தார் பசும்பொன் தேவர்,


இத்தேசம் ஏவுகனைகளால் காக்கபடவேண்டும், வான்வெளி யுத்தத்தில் உச்சம்பெறவேண்டும் என வாழ்ந்தார் கலாம்.


இவர்கள் எல்லாம் வேறு வரிசை


இவர்களுக்கு ரகசியமுமில்லை, அந்தரங்கமுமில்லை. யாரும் படிக்கலாம்.


இவர்கள் அந்த போலி திராவிடர்கள் போலவே ஆமாம் எனக்கு பல மனைவிகள், ஏராளமான வாரிசுகள் அதுவும் போக இன்னும் கணக்குகள் உண்டு என சொல்லவேண்டுமா? எப்படி சொல்ல முடியும்?


கோயிலின் புனித வளாகத்திற்கு ஒரு பன்றி வந்துவிட்டதென்றால், சிலர் ஏய் பன்றியே இந்த வளாகத்தில் உனக்கென்ன வேலை என கேட்டால்..
நீ சுத்தமில்லாதவன் என பன்றியினை சொன்னால்,


அது ஆம் நான் சேற்ற்றில் மிதக்கும் பன்றிதான் என‌ பன்றி என ஒப்புகொள்ளும், ஒப்புகொண்டாக வேண்டும்.


சேற்றில் கிடந்தேன் அது சொந்தவிருப்பம், ஆனால் பன்றி என ஒப்புகொண்டேனா இல்லையா? ஆனால் குளித்து சபைக்கு வந்தேனா இல்லையா?


அதனை மட்டும் பாருங்கள், தெய்வத்தின் அருகே எனக்கு இடம் தாருங்கள், என்னையும் பூஜியுங்கள் என சொல்லலாம்


சிலர் அதற்கு ஆம் பார்த்தீர்களா, பன்றி ஒப்புகொண்டது, அது தன் நிலையினை விளக்கிவிட்டது என ஆர்ப்பரிக்கலாம்.


அதனை மட்டும் பாருங்கள், தெய்வத்தின் அருகே எனக்கு இடம் தாருங்கள், என்னையும் பூஜியுங்கள் என சொல்லலாம்


ஆம் பன்றி தைரியமாக‌ ஒப்புகொண்டதை போல,
தெய்வங்களும் தன் நிலையினை இப்பன்றிபோல் விளக்கவேண்டும் என அவர்கள் கேட்கலாம்


ஆனால் தெய்வங்கள் என்றும் நாங்கள் தெய்வம் என எங்கும் வாதிடாது, அவற்றிற்கு அந்த அவசியமுமில்லை.


அப்படி வாதிட்டால் அவைகள் தெய்வமாக இருக்க முடியாது.


(யாருக்கோ எழுதபட்டது.....)






No comments:

Post a Comment