Friday, October 14, 2016

பெட்ரோல், டீசல் விலை மட்டும் இந்தியாவில் குறையாது

மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது,இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும்


ஆனால் பெட்ரோல், டீசல் விலை மட்டும் இந்தியாவில் குறையாது, ஏன் என்று கேட்டால் அப்படித்தான்


கச்சா எண்ணெய் விலை அடிமட்டத்தில் கிடக்கும் நேரத்திலே இந்தியாவில் எண்ணெய் விலை குறையவில்லை,இதில் எத்தனால் கலந்தால் மட்டும் குறையவா போகின்றது?




இப்படி அதே விலைக்கு விற்க இவர்கள் இறக்குமதி செய்தால் என்ன? எத்தனால் கலந்தால் என்ன? மக்களுக்கு அதே சுமைதான்


இதனை பற்றியெல்லாம் நாம் கேட்க கூடாது, இப்படி உலக கச்சா எண்ணை சரிந்துகிடக்கும்பொழுது விலை குறைத்தால் என்ன என கேட்டால், அதுதான் மோடி மேஜிக் , அருண் ஜெட்லி அல்டராசிட்டி என கண் சிமிட்டுவார்கள்


இதற்குமேலும் இதனைபற்றி கேட்டால் தேசதுரோகி என்பார்கள்


ஆக மக்களே கச்சா எண்ணெய் இலவசமாக கிடைத்தாலும் சரி, அதில் எத்தனால் மொத்தமாக கலந்து இறக்குமதி குறைந்தாலும் சரி, உங்களுக்கு ஒரு லாபமும் வரப்போவதில்லை



No comments:

Post a Comment