Friday, October 21, 2016

ஜெயலலிதா வேகமாக குணமடைகின்றார்...

தமிழகமெங்கும் ஆலயங்களில் பெரும் வழிபாடுகள் நடக்கின்றதாம்,

இதுவரை சீண்டபடாத ஆலயங்களில் எல்லாம் கட்சியினர் தலைகீழாக நிற்கின்றார்களாம்

சந்தடி சாக்கில் கிராமங்களில் பணதட்டுபாடால் நின்றிருந்த சுடலைமாடன், கருப்பசாமி, இசக்கி அம்மன் கோயில் கொடைகளை நடத்திவிடலாம் என ஒரு சிலர் கடும் முயற்சியில் இருப்பதாக தென்னகத்தார் சொல்கின்றார்கள்


பொதுவாக அந்த கொடைகள் ஆடி மாதம்தான் நடக்கும், இனி அம்மாவிற்காக அவற்றை ஐப்பசியில் அதிரடியாக நடத்துவார்களாம்

ஆனாலும் சுடலைமாட சாமி , ஆட்டு ரத்தம் குடித்துவிட்டு அருள்வாக்கில் .................

"யாரடா? அம்மா.. என் கோயில்ல ஆடு வெட்ட கூடாதுண்ணு ஒரு காலத்துல சட்டம் போட்டுச்சே, அந்த அம்மாவா" என கேட்டால் என்ன ஆகும்?

தெய்வம் அப்படி எல்லாம் கேட்காது, பக்தர்களின் கோரிக்கைக்கு செவிசாய்கட்டும்

இன்னும் என்னென்ன செய்யபோகின்றார்களோ தெரியவில்லை,

எனினும் ஒரு படத்தில் மயில்சாமி "பாஸ்..வெளிநாட்டில ஒரு கோயில் இருக்கு.." என சொல்லி விவேக்கிடம் பணம் பறிப்பார் அல்லவா?

அப்படியும் சிலபேர் கிளம்பி இருப்பதாக சொல்லிகொள்கின்றார்கள்,

நிர்வாகிகள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

காரணம் மலேசிய பத்துமலை, கம்போடிய அங்கோர்வாட், அமெரிக்க இந்து ஆலயம் எல்லாவற்றையும் இலவசமாக‌ சுற்றிபார்க்க ஒரு கூட்டம் கிளம்பிகொண்டிருக்கலாம்.




ஜெயலலிதா வேகமாக குணமடைகின்றார் : முன்னாள் அதிமுக அமைச்சரும் இந்நாளைய பாஜக கட்சியின் ஹண்டே

எம்ஜிஆர் அடிமைகளாக இருந்து பின் ஜெயா காலத்தில் தலைதெறிக்க ஓடி எல்லா முகாமும் சுற்றி வந்தவர்களுக்கு எல்லாம் இப்பொழுது ஜெயலலிதா மீதான அக்கறை பொத்துகொண்டு ஊற்றேடுக்கின்றது

திருநாவுக்கரசர் அவரோடுதான் கூட்டணி என்கின்றார், இதோ ஹண்டே அவர் வந்து ஆள்வார் என்கின்றார்


போகிற போக்கில் அதிமுக, பாஜக, காங்கிரஸ் எல்லாம் ஒரே கூட்டணியில் வரும் விசித்திரம் நடக்கும் போல, காங்கிரசும் பாஜகவும் அதிமுகவின் இரட்டை இலையினை இருபக்கமுமாக நின்று பிடித்துகொண்டு நிற்கலாம்.

திருநாவுக்கரசர், ஹண்டே வரிசையில் அடுத்த விசிட் நிச்சயம் ஆர்.எம் வீரப்பனாக இருக்கலாமோ?




 


No comments:

Post a Comment