Wednesday, October 26, 2016

எம்ஜிஆரின் சீரியஸ் நடிப்பே சிரிக்க வைக்கும்




Image may contain: 5 people , text


உலகம் சுற்றுலிபன் என்றொரு படம் வந்தபொழுது கலைஞர் அதனை தடுக்க நினைத்து பெரும் நடவடிக்கை எடுத்தாராம்


அதனையும் மீறி படம் வந்து வென்றதாம்


பலபேர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்.




அப்படி என்ன நடவடிக்கை எடுத்தார்? தயாரிப்பாளர் அலுவலகமோ அல்லது கதாசிரியரான(!) எம்ஜிஆர் வீடோ வருமானவரி, அமலாக்கதுறை என ரெய்டு நடந்ததா?


சென்சார் போர்டு பிரச்சினை இருந்ததா?


அல்லது இன்றைய விஜய், சிவகார்த்திகேயன் போல எம்ஜிஆர் எங்காவது அழுதுகொண்டிருந்தாரா?


ஒரு மண்ணாங்கட்டியுமில்லை,


ஆனால் செய்திமட்டும் நிலைத்துவிட்டது.


இதனை எல்லாம் நம்பும் தமிழகம், முன்னாள் காவல்துறை அதிகாரி பகிரங்கமாக சொன்ன, அதாவது அந்நிய செலாவணி சட்டமிரட்டல் மட்டும் இல்லை என்றால் எம்ஜிஆர் கட்சி தொடங்கி இருக்கமாட்டார் என்பதை மட்டும் நம்ப மறுக்கின்றது


அவர்கள் நம்புவது, நம்பாதது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்


இப்படத்தினை தொடர்ந்து கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ என இரண்டாம் பாகம் எடுக்க எம்ஜிஆர் முயன்றாராம், அதற்குள் தேர்தல் வந்துவிட்டதால் அவர் முதல்வராகிவிட்டாராம்


அப்படி ஒரு படம் வேண்டாம் என முடிவெடுத்து அவரை முதல்வராகவே அமர்த்திய அந்நாளைய தமிழகம் வாழ்க‌


இந்த உலகம் சுற்றும் வாலிபன், (அவர் வாலிபன்??) படத்தினையே பார்த்து சிரித்து முடியவில்லை


(ஒரு எம்ஜிஆரின் சீரியஸ் நடிப்பே சிரிக்க வைக்கும், இதில் இரண்டு வேடம் வேறு)


தில்லுமுல்லு, தெனாலி ம.ம.காமராசன் படங்களை போல அதிக முறை பார்த்த காமெடி படங்களில் அதுவுமொன்று.


அப்படிபட்ட காமெடி படத்தினை கலைஞர் தடுக்க முயன்றிருப்பாரா?


கருணாநிதியின் நகைச்சுவை ரசனை உலகறிந்தது.












No comments:

Post a Comment