Friday, October 28, 2016

மோடி தலமையில் இந்தியா எழுச்சி பெறுவதாக அமெரிக்க பத்திரிகை தகவல் : தினமலர்

அமெரிக்கா விழும், இந்தியா எழும். மோடி தலமையில் இந்தியா எழுச்சி பெறுவதாக அமெரிக்க பத்திரிகை தகவல் : தினமலர்


ஆசியாவில் யாரை எதிர்த்து யாருக்கு கொம்பு சீவிவிட்டு இருவரையும் அழிக்கலாம் என்பதே அமெரிக்காவின் கனவு, கொள்கை, இன்னபிற அழிச்சாட்டியம்


சதாமினை அப்படி வளர்த்து , ஈரானுக்கு எதிராக தூண்டிவிட்டு பின் அழித்தார்கள், பின்லேடன் அந்த வகையே. சில ஈழபோராளிகளும் அப்படியே




அவர்கள் பேச்சை கேட்டு ஆப்கனில் தீவிரவாதத்தினை வளர்த்த பாகிஸ்தான் கை பிசைந்து நிற்கின்றது


இப்பொழுது அமெரிக்க தேவை சீனாவினை எதிர்க்கும் முகாமில் வலுவாக ஒரு நாடு, அதற்கு இந்தியாவினை கொம்பு சீவுகின்றது அமெரிக்கா


அமெரிக்காவும் இந்தியாவும் இரு நாட்டு ராணுவ தளங்களை பயன்படுத்திகொள்ளலாம் எனும் வலை, மோடிக்கு விரிக்கபட்ட வலை, வசமாக சிக்கி கிடக்கின்றார் மோடி


அதாகபட்டது அமெரிக்கா நாளை யுத்தமென்றால் இந்திய தளங்களை பயன்படுத்தும், இங்கிருந்து ஆப்கன், ஈரான், ரஷ்யா என தாக்க அவர்களுக்கு ஒரு தளம் வேண்டும்


இப்படி கொடுத்திருப்பதால் நிச்சயம் ஈரான், ரஷ்யா நாடுகளின் கோபத்திற்கு இந்தியா ஆளாகியிருப்பது நிஜம். உண்மையில் ஈரானுடனோ அல்லது பக்கத்து நாடுகளுடனோதான் இம்மாதிரி ஒப்பந்தம் நாம் போட்டிருக்கவேண்டும்.


அமெரிக்கா அருகிருக்கும் கியூபா, மெக்ஸிகோவினை நாம் தாக்க போகின்றோமா? அல்லது இலங்கை அருகிருக்கும் அமெரிக்க மர்மதீவில் நம்மை விடுவார்களா? பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க தளத்தை நாம் பயன்படுத்த பாகிஸ்தான் விடுமா?


ஆக இந்தியா மிக மோசமாக அமெரிக்க வலையில் சிக்கிவிட்டது, இந்தியாவினை யாருடனாவது மோதவிட்டு அவர்களையும், அப்படியே கொஞ்சம் வளர்ந்திருக்கும் இந்தியாவினையும் கீழே தள்ள பெரும் திட்டமிடுகின்றது அமெரிக்கா


அவர்கள் பத்திரிகை செய்தி நோக்கமும் அதுவே


இது புரியாமல் இங்கு மோடி அப்படி, மோடி இப்படி என எழுதி ஒரு மாதிரி கொண்டாடிகொண்டிருக்கின்றார்கள்


ரஷ்யாவோ, ஈரானோ மோடியினை பாராட்டினால் அது கவனிக்கதக்கது, அட வடகொரிய அதிபர் பாராடினால் நிச்சயம் மோடி தைரியமானவர் என சொல்லலாம்


அப்படி எல்லாம் இல்லாமல் அமெரிக்க பாராட்டுகின்றதாம், சோழியன் குடுமி சும்மா ஆடாது.


தினமலர் கொஞ்சம் ஓவராகத்தான் மோடி புகழினை மிகைபடுத்தி சொல்லிகொண்டிருக்கின்றது. உண்மை அது அல்ல‌


ஒரு வஞ்சகத்தை பெரும் ஆச்சரிய செய்தியாக சொல்லிகொண்டிருக்கின்றது.


மிக தைரியமான இந்திய தலமையினை எப்படி அளவிடமுடியுமென்றால் பாகிஸ்தானுடன் போரோ, சீனாவுடன் மிரட்டலோ அல்ல‌


எந்த பிரதமர் இலங்கை அதிபரின் தூக்கத்தை கெடுக்கின்றாரோ அவர்தான் மிக தைரியமான இந்திய பிரதமர் என்பது மிக எளிதான கணக்கு


இந்திரா, ராஜிவிற்கு பிறகு யாரும் இலங்கையினை மிரட்டவில்லை, உலக அரசியல்படி முடியவில்லை, நாளை சீமானே பிரதமர் ஆனாலும் கச்சதீவினை தாண்டுவது சுலபம் அல்ல. உலக அரசியல் அப்படி


இப்படி சில நாடுகளின் இந்திய அணுகுமுறையினை கொண்டே சில நடப்புக்களை அவதானிக்க முடியும்


இந்திரா, ராஜிவிற்கு பின் அவ்விடம் காலியாகவே இருக்கின்றது,


அப்படித்தான் காலியாகவே இருக்கும்,


காரணம் அப்படி ஒருவர் வந்தால் உடனே முடித்து மறுபடியும் காலியாக்கி வைத்துவிடுவார்கள்


அதனை நிரப்ப ஒருவர் பின்னாளில் வரலாம், ஆனால் நிச்சயம் அது மோடி அல்ல.



No comments:

Post a Comment