Saturday, October 15, 2016

நெல்லையின் சதாம் ஹூசைன் : பாகம் 02



Image may contain: one or more people


கட்டபொம்மனின் வரலாற்றை வெளிகொண்டு வந்துவிட்டு வேறு வேலைகளில் மிக பிஸியானார் ம.பொ.சி. தமிழகத்திற்கும் தமிழிற்கும் விளம்பரமே இல்லாமல் உழைத்த மனிதர்களில் அவரும் ஒருவர், ஆனால் பெரும் அடையாளமில்லை


காரணம் அன்னார் ஒரு தமிழ்திரைபடத்திலும் விரலை கூட காட்டியதில்லை.


அக்காலங்களில் நாடகசபைகள் அதிகம். புராணங்கள் அல்லது அரசரின் கதைகள்தான் நாடகமாக நடிக்கபடும் (எஸ்.ஜே சூர்யா, சாமி , கவுதம்மேனன் போன்ற மிக சிறந்த கதாசிரியர்கள் எல்லாம் அன்று இல்லை), அவ்வகையில் கட்டபொம்மனின் கதையும் நாடகமாயிறு,


அது சக்தி நாடக சபா. நாடகம் அரங்கேறும் இடமெல்லம் கட்டபொம்மனின் புகழும் பரவிற்று.
பின்னர் அதனை சினிமாவாக எடுக்க திட்டமிட்டார்கள், இன்றைய ஷங்கரை போல அன்றைய பிரமாண்ட இயக்குநர் பந்தலு இயக்கினார். நடிப்பு சக்தி நாடக குழுவிலே முன்பிருந்த சிவாஜி கணேசன, வசனம் அந்த நாடகத்திற்கு எழுதிய சக்தி கிருஷ்ணசாமியும்.


படம் வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி.


கோபுரம் போல கம்பீரமான சிவாஜி கணேசனின் நடிப்பும், கோபுர கலசமாக மின்னிய சக்தி கிருஷ்ணசாமியின் வசனமும் பெரிதும் படத்தை உயர்த்தின‌ .


தமிழக எழுத்துலக வரலாற்றில் புது புரட்சியை ஏற்படுத்தியவர் என கிருஷ்ணசாமிக்கு ஒரு பெயர் உண்டு,


ஒரு மாபெரும் வசன எழுத்து சகாப்தமே அவரின் பாணியை பின்பற்றினார் என சர்ச்சையும் உண்டு, ஆனால் கட்டபொம்மன் வசனத்தில் தன்னை நன்றாக வெளிபடுத்தினார் கிருஷ்ணசாமி, கேட்டுபாருங்கள் அது ஒரு "பலசக்தி"களை நினைவுக்கு கொண்டுவரும் தமிழ்சக்தி வசனம்.


சற்று சிந்தியுங்கள் , கலெக்டர் ஜாக்சன் ஆங்கிலேயர் அதுவும் கம்பெனி லண்டன் தெருக்களில் ரவுடியாக சுற்றியவர்களை பிடித்து நீ தாசில்தார் நீ கலெடர் என இந்தியாவிற்கு அனுப்பியநேரம் அவருக்கும் தமிழ் தெரியாது.
உண்மையில் கட்டபொம்மனின் விசாரணை கூட ஒரு மொழிபெயர்பாளர் மூலம்தான் நடந்தது, அங்கே வானம் பொழிகிறது..பூமி விளைகிறது..ஏர்பிடித்தாயா..மஞ்சள் அரைத்தாயா" என்றெல்லாம் பேசியிருக்க முடியாது, அதையே கட்டபொம்மன் செப்பியிருந்தாலும் கலெக்டருக்கு ஒரு மண்ணும் புரியாது.


ஆனால் கிருஷ்ணசாமியின் அழகுதமிழ் யாரை சிந்திக்கவிடும், அதி அற்புதமாக கட்டபொம்மனின் மனதினை வசனத்தில் கொணர்ந்தார்.


மிக பெரும் வரவெற்பினை பெற்றபின் தமிழகமெங்கும் கட்டபொம்மன் பிரபலமானார், சொர்க்கத்தில் ஜக்கம்மா தேவி அருகில் இருந்தவாறு கட்டபொம்மனும் இருவருக்கும் நன்றி சொன்னார். பின்னர் ஆசிய ஆப்ரிக்க படவிழாவிற்கு மத்திய அரசு இப்படத்தினை அனுப்பியது.


அப்போது எகிப்தில் மாபெரும் ஆளுமை கர்னல் நாசர் அதிபர், எகிப்துக்கல்ல மொத்த அரபு உலகிற்கே அவர்தான் நாட்டாமை. அவருக்கு வெள்ளையர் பிடிக்காது, உலகபொதுகால்வாயான சூயஸ் கால்வாயாயை எகிப்திற்கு என போரிட்டே பெற்றவர், அசகசாய சூரர். படதினை அவர் ரசிக்கும் பொழுதே வசனம் மொழிபெயர்ப்பு செய்யபட்டது, அசந்துவிட்டார்.


வெள்ளையனை எதிர்த்த கதை, இதற்கு மேல் என்னவேண்டும்?, படம் பல விருதுகளை குவித்தது. சிவாஜி கணேசன் ஒரே நாளில் உலகபுகழ்பெற்றார், மர்லின் பிராண்டோவுடன் ஒப்பிட்டு உலகமே கொண்டாடி, பல நாடுகள் அன்றே அழைத்தன. கர்ணல் நாசர் சென்னை வந்தபொழுது சிவாஜியை கட்டிபிடித்து மகிழ்ந்தார்.


நாசர் கட்டிபிடித்தால் அமெரிக்காவிடுமா? கொஞ்சவருடம் கழித்து அவரை அழைத்து நியூயார்க நகரின் கவுரவமேயராக ஒருநாள் வைத்து சிறபித்தது.


(அவ்வளவு பெருமைமிக்க சிவாஜி கணேசனை பின்னாளில் தாடியோடு ஒரு திருமண ஊர்வலத்தில் பார்க்கும்பொழுது மனம் கலங்கத்தான் செய்தது)


நாசர் அப்படத்தை கொண்டாடினார், காரணம் ஆஸ்கார் என்பது அன்றும் சரி,இன்றும் சரி , ஒன்று ஐரோப்பியரை பற்றி உயர்வான கதை அல்லது ஆசிய ஆப்ரிக்க மகா ஏழ்மை இதை தவிர வேறு கதைகளுக்கு கொடுக்கவே மாட்டார்கள். அது வேறு அரசியல் அவர்கள் மனநிலை அப்படி. நமாக இங்கு பெட் கட்டிகொள்ளலாம் அடுத்த ஆஸ்கார் தனுசுக்கா அல்லது நயந்தாராவிற்கா யார் வந்து கேட்கபோகின்றார்கள்.


தன்க்கு மங்கா புகழ் கிடைக்க காரணமான கட்டபொம்மன் தூக்கிலடபட்ட இடத்தினில் சிவாஜி கணேசன் சொந்தமாக நினைவு சின்னம் நிறுவினார், இதற்காகவே அவருக்கு கை கொடுக்கலாம்.


மக்கள் நாடி பார்ப்பதில் கலைஞருக்கு நிகர் இல்லை, மக்கள் அபிமானம் பெற்றவர் யாராக இருந்தாலும் கலைஞர் ஓடிப்போய் இணைத்துகொள்வார், அவர் இறந்திருந்தால் சிலைவைத்து போற்றுவார், அவரின் அரசு ஒரு பாஞ்சாலங்குறிச்சியில் மாதிரி கோட்டையை கட்டிவைத்து அவரின் அடையாளத்தை பாதுகாத்தது.


வைக்கோவும் வருடா வருடம் விழா நடத்தி ஆதாமிற்கு முந்தைய வரலாறு முதல் ஈழத்து வரலாறு வரை அணல் கக்குவார்.
கட்டபொம்மன் மாவட்டம் பெயர் மாற்றமாகிவிட்டது, கட்டபொம்மன் போக்குவரத்து கழகும் மாறிற்று,


ஆனால் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் ஒருகாலமும் மாறபோவதில்லை, காரணம் ராணுவத்திற்குத்தான் போராட்டத்தின் கடினமும்,பெருமையும் புரியும்.


கட்டபொம்மனை தூக்கிலிட்ட மரம் இப்போது இல்லை, அவரை விசாரித்த சிறை பாழ்பட்டு கிடக்கிறது. கோட்டை தரைமட்டமாக்கபட்டிருக்கின்றது. அவரை தூக்கிலிட்ட கயிறு நெடுங்காலம் பத்திரமாக இருந்தது இப்பொழுது காணவில்லையாம்,


என்ன செய்வது அரசாங்க கோப்புகளே காணாமல் போகும் தேசம் இது.


அங்கிருந்து 90 கி.மீ தொலைவில் பத்மநாபபுரம் அரண்மனை மிக அழகாக எழுந்து நிற்கிறது நிற்கட்டும். ஆனால் இரண்டையும் காணும் ஒரு இந்தியனின் மனதில் உயர்ந்து நிற்பது இன்னும் பாஞ்சாலங்குறிச்சி மண்கட்டை இடம்தான் சந்தேகமே இல்லை ,


இதுதான் கட்டபொம்மனின் வெற்றி.
தாமிரபரணி நதிக்கரை நெல்லின் மீது உங்களுக்கு என்ன உரிமை என கேட்ட கட்ட பொம்மனுக்கும், ஈராக்கிய எண்ணையின் மீது உங்களுக்கு என்ன உரிமை என கேட்ட சதாம் ஹூசைனுக்கும் என்ன வித்தியாசம் காட்டமுடியும்?


இருவரும் தூக்கு கயிற்றுமுன் வீரமாக முழங்கினார்கள், அவர் அரேபியாவின் கட்டபொம்மன் என்றால் இவர் நெல்லையின் சதாம் உசைன். நிச்சயமாக சொல்லலாம்.


வீரபாண்டிய கட்டபொம்மன் படம், எகிப்திலும் இன்னபிற சினிமா விரும்பும் அமைப்புக்களாலும் கொண்டாடபட்டுகொண்டிருந்த பொழுது, தமிழக நிலமை எப்படி தெரியுமா? சென்னையில் சினிமா முடிந்து வெளியே வரும்பொழுது இருவர் பேசிகொண்டார்கள்


"இந்த சிவாஜி கணேசனே இப்படித்தாம்பா, முடிவுல செத்துபோய்ருவாரு..இது மட்டும் நம்ம வாத்தியார் படமா இருந்துண்ணு வச்சிக்கோ"..அப்புடியே அவ்ளோபேரையும் சாய்ச்சிபுட்டு அந்த பாணார்மேன பந்தாடிருப்பாரு..


ஒரு வெள்ளக்கார பயலும் பாஞ்சாலங்குறிச்சிகுள்ள நுழைச்சிருக்க முடியாது.."


கனவு காண்பது மட்டுமல்ல, கனவிலே வரலாற்றையும் மாற்றி மகிழ்வான் தமிழன்.


 முற்றும்






No comments:

Post a Comment