Monday, October 31, 2016

இந்திரா காந்தி : நினைவு நாள்

https://youtu.be/V5ffAx8SVJQ

இந்த நாள் அன்று


அவர் பிரதமராகும் பொழுது இந்தியாவில் ஆங்காங்கு மாநில தேசியங்கள் வலுப்பெற்றன, அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது உச்சதலைவருக்கு தெரியாத விஷயமால‌, சமாளித்தார்.

தமிழகத்தில் திராவிடம், மும்பையில் மராட்டிய கோஷ்ம் என பல வகையான குரல்கள் உயர்ந்து கேட்டகாலம், காஷ்மீர் கேட்கவே வேண்டாம்.


இந்த வரிசையில் பஞ்சாப்பும் சேர்ந்துகொண்டது.


டெல்லி தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழர்களை அடக்கிஒடுக்குவதில் அதீத அக்கறை காட்டுகின்றது, என்றேல்லாம் பல குற்றச்சாட்டுகள் உண்டு, கொஞ்சம் பஞ்சாப்,காஷ்மீர்,வங்கம் பக்கம் சென்று வந்தோமானால் சில உண்மைகள் புரியும்.


அதாவது இந்தியா அப்படித்தான். பல இடங்களில் அதன் போக்கு வித்தியாசமானது, கடுமையானது. இல்லாவிட்டால் இந்தியா இருக்காது.


இந்தியாவிற்கு அதிகம் உழைக்கும் அல்லது உழைத்த இனம் என பஞ்சாபியரை சொல்லலாம், இன்றும் இந்தியராணுவத்தை தாங்கி நிற்பவர்கள், சகல துறைகளிலும் பங்கெடுப்பவர்கள், கடும் உழைப்பாளிகள்.


மேலாக இந்திய விசுவாசிகள்.
பெரும் சோக வரலாறு அவர்களுடையது, பாஞ்சாலிகாலத்திலிருந்து அதன் வளமைக்காய் தாக்கபட்டார்கள். பின்னாளில் இந்துவும் வேண்டாம், இஸ்லாமும் வேண்டாம் என அவர்களாக ஒரு சீக்கிய மதம் தொடங்கி அவர்களாக அவர்களின் கலாச்சாரத்தை காத்து வாழ்ந்து வந்தார்கள்.


பிரிவினை நடந்தபொழுது பாதி பஞ்சாப் பாகிஸ்தானுக்கு போயிற்று, ஒரு சராசரி சீக்கியனால் தாங்கி இருக்கமுடியும்? இன்னும் பிரிவினை கலவரத்தில் 10 லட்சம் பஞ்சாபியர் செத்தனர். பிரிவினை வலி அவர்களுத்தான் தெரியும்.


திடீரென தமிழகத்தை இரு நாடுகளாக பிரித்து ஒரு பக்கம் செல்ல விசா தொந்தரவும், உளவாளி முத்திரை சித்திரவதை மரணமும் அன்றாடம் நடக்குமென்றால் சென்னை டூ மதுரை பயணம் எப்படி இருக்கும்? எந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்?, இது தான் பஞ்சாபியர் நிலை. ஏராளமான குடும்பங்களும், உறவினர்களும் எல்லைகோட்டுக்கு இங்கும் அங்கும் ஏக்கமாய் பார்த்துகொண்டே இருக்கும் நிலை.


இந்நிலையில் பஞ்சாபியர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர், அதாவது பஞ்சாப் மொழி பேசுபவருக்கு தனி மாநிலம், சீக்கிய மதத்திற்கு ஒரு மத அந்தஸ்து என சில கோரிக்கைகள், ஆனால் டெல்லி காதுகொடுத்தே கேட்கவில்லை (நாம் கச்சதீவு, ராமேஸ்வரம் மீணவர், ராஜபக்ஸே,காவிரி,மீத்தேன் என கத்தினாலும் கேட்கின்றார்களா அப்படித்தான்) அவர்களும் அசட்டை செய்யபட்டார்கள்.


விளைவு அகாலிதளம் மகா மக்கள் ஆதரவு பெற்றது, இது இந்திராவை சிந்திக்கவைத்தது, அப்படியும் பஞ்சாப் மொழி மாநிலத்திற்கு பதிலாக பிஞ்சிபோன பஞ்சாபை மேலும் பிரித்த்து ஹரியான உருவாக்கபட்டு சீக்கியர்களின் கோபம் மேலும் அதிகமானது.


அகாலிதளத்திற்கு எதிராக பிந்ரன்வாலேயினை சஞ்சய் உருவாக்கினாலும் அவன் அந்நிய கரங்களில் விழுந்தபின் நிலமை விபரீதமாயிற்று, அவனை எதிரி நாடுகள் உசுப்பேற்றிவிட்டு நிலமை பொற்கோயில் வரை சென்றது, வேறு வழியின்றி ராணுவம் அனுப்பபட்டது.


பொற்கோயிலில் ராணுவம் புகுந்தது ஒவ்வொரு சீக்கியனுக்கும் வலிதான், ஏற்கனவே இந்தியா தங்களை சரியாக அங்கிகரிக்கவில்லை எனும் கோபம் இருந்தது அது கூடிற்று.


ஆனாலும் ஒரு சிறிய மகிழ்ச்சி இருந்தது.


அதாவது பிந்திரன்வாலே கூட்டத்தை பெரும்பான்மை சீக்கிய‌ மக்கள் ஆதரிக்கவில்லை, அவன் தொலைந்ததில் நிம்மதியான சீக்கியர்கள் ஏராளம்.


பின்னர் ஏன் இந்திரா படுகொலை நிகழ்ந்ததென்றால், அதுதான் உலக அரசியல். பொற்கோயில் சம்பவத்தில் சீக்கியர்களுக்கு கோபம் இருந்ததே தவிர அவரை கொலை செய்யும் அளவிற்கு அல்ல.


ஆனால் கோபத்தை கூடுதல் பயமும் கூட்டி, இனி இந்திரா இருந்தால் சீக்கியர் வாழ முடியாது என ஒரு பிம்பத்தை உருவாக்கியது பல வெளிநாட்டு சக்திகள்.


சுருக்கமாக சொன்னால் உயிரோடு வைத்து பிந்திரன்வாலேயால் செய்யமுடியாததை அவன் செத்தபின்னால் செய்தார்கள்.


அதற்கான சூழ்நிலையை உருவாக்கியது பாகிஸ்தானின் இடி அமீன் ஜியா உல் ஹக், திட்டம் கொடுத்தது ஒரு பெரிய கை.
அவர்களின் குறி இந்திய எல்லைகளில் பதற்றம் உண்டாக்குவது, அது முடிந்தது இந்திரா படுகொலையில்


எப்படி?


அந்த குழப்பான காலகட்டத்தில் சி.ஐ.ஏ தலமை செயலகமானது பாகிஸ்தான், பின்லேடனுக்கு வகுப்பு எடுத்துகொண்டே, இந்தியாவையும் குறிபார்த்தனர், இந்திரா அவர்களின் பெரும் எதிரியானார்.


இந்நிலையில் பொற்கோயில் சம்பவத்தால் சீக்கியர்கள் நொந்து போயினர், அது அவர்களின் ஆத்மா, அப்பொழுது ஒரு வதந்தி அல்லது தகவல் பரப்பபட்டது, கவனியுங்கள் லண்டனிலிருந்தும் அமெரிகாவிலிருந்தும் வந்து பொற்கோயிலில் பேசியவர்கள் பரப்பிய வதந்தி.


அதாவது இந்திரா பெரும் ராணுவ தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் , யுத்தத்தை சாக்காக வைத்து பஞ்ஞாபியரை அழிக்க போவதாகவும் வதந்தி இறக்கை கட்டி பறந்தது, அதாவது பாகிஸ்தான் ராணுவத்தினை உள்வாங்க விடுவாரம், பின்னர் விரட்டுகிறேன் என சகலத்தையும் அழித்துவிடுவாராம்.


கவனியுங்கள் இது முதலில் வெளிநாட்டில் இருந்து வந்த‌ செய்தி பின் ஒரு வாரத்தில் ஜியா உல்கக் பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாபில் படைகுவிக்கிறார், சும்மாவே சவுடால் பேசும் அவர் இம்முறை கடுமையாக பேசினார், போர் பரபரப்பு பற்றிகொள்கிறது.


இங்குதான் சீக்கிய சமூகம் அச்சத்தில் ஆழ்ந்தது, இந்திரா இனி தங்களை அழிக்காமல் விட மாட்டார் என பயத்தில் உறைந்தனர். இனி வாழ முடியாது என அவர்களுக்கு தோன்றிற்று, ஒரு கலாச்சாரமிக்க இனம் அழிவதை விட இருவர் அழிவது தவறில்லை என முடிவாயிற்று, பின்னர் நடந்த கொடூரம் உலகறிந்தது.


32 தோட்டாக்கள் இந்திரா மீது பாய்ந்தன.


அவரது பலமான உளவுதுறை அவருக்கு சீக்கிய காப்பாளர்களை மாற்ற சொன்னது, அப்படியானால் ராணுவத்து சீக்கியர்களை என்ன செய்வீர்கள் என கேட்டு மறுத்தார் இந்திரா


கிட்டதட்ட 7 முறை உயிர்தப்பிய இந்திரா, மெய்காப்பளரிடம் சிக்கினார். சஞ்சயின் மரணத்தின் பொழுதே கிட்டதட்ட மரணித்த இந்திரா, இம்முறை தப்பவில்லை.


ஒரு திட்டமிட்ட வதந்த்தி, அதற்கு வலுசேர்க்கும் படைகுவிப்பு என்ற மாயையில் நொந்திருந்த சீக்க்கிய சமூகம் சிக்கியதால் நிகழ்ந்த நிகழ்வு இது, பின்னாளில் அவர்கள் உண்மை உணர்ந்தனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பக்கம் இந்திய பார்வை இருந்ததே தவிர பஞ்ஞாப் எல்லையில் அல்லவே அல்ல.


சீக்கியருக்கு ஆபத்து என இறக்குமதியான வதந்தி, இப்படுகொலை மூலம் உண்மையானது கிட்டதட்ட 3000 சீக்கியருக்கு மேல் டெல்லியில் வன்முறையில் கொல்லபட்டனர்.
ஆனாலும் சீக்கிய இனம் உயர்வானது, சகல வலிகளையும் தாண்டி இன்னும் நாட்டிற்காக உழைக்கின்றது.


இந்திரா அமரர் ஆனார், இந்தியா பன்னாட்டுகம்பெனிகளின் வேட்டைகாடானது, தனியார் வங்கிகளை ஒழித்து வங்கிகளை தேசியமயமாக்கியவர் இந்திரா, இன்று இந்திய இன்சூரன்ஸ் கூட விற்பனை எனும் நிலை.


அண்டை நாடுகள் எல்லாம் ஆசுவாசமடைந்தன, சில திருமணவீடுகள் அல்லது மறைவு துக்கங்களில் எதிர் அரசியல்வாதிகள் எல்லாம் சந்திப்பார்கள், கேட்டால் நாகரீகம் என்பார்கள், ஆனால் அவர்கள் மனது ஆண்டவனுக்குத்தான் தெரியும்,


அப்படித்தான் இந்தியா மறைந்தபொழுது, எல்லா தலைவரும் வந்தார்கள்,சூத்திரதாரி பாகிஸ்தானின் இடி அமீன் ஜியா உல்கக் வந்தார், அஞ்சலி செலுத்திவிட்டு பாகிஸ்தானுக்கு திரும்பி சென்று சொன்னார்


"அல்லா இருக்கிறார், அமெரிக்கா இருக்கிறது, இந்திரா சாம்பலானார் இனி எனக்கென்ன கவலை"


இலங்கையின் நரி ஜெயவர்த்தனே வேறுமாதிரி சொன்னார், "இனி தெற்காசியா அமைதியாகும்"


இநதியாவும், அவர் உருவாக்கிய உளவுதுறையும் , இந்திரா உருவாக்கிகொண்டிருந்த புதிய இந்தியாவும் கதறி அழுதது.


எல்லாவற்றிற்கும் மேல் தங்களுக்கு இந்திரா ஒரு தீர்வினை கொடுப்பார் என மனமார நம்பிய ஈழமக்களும் அனாதைகளாகி அழுதனர், அது உண்மையும் கூட. இந்திரா இருந்திருந்தால் நிலமை இவ்வளவு சிக்கலாகி இருக்காது.


இந்திரா காந்திக்கு அஞ்சலியாக‌ அன்று ஒரு அர்த்தமுள்ள வார்த்தை சொன்னார், அது நிதர்சனமான உண்மை


"இந்திய தீபகற்பம் இன்று கடலில் அல்ல கண்ணீரில் மிதக்கின்றது"


எத்தனை பிரதமர்கள் இந்தியாவில் அமரலாம், ஆனால் இந்திரா போன்றதொரு பிரதமர் இனி அமையமாட்டார்.


காரணம் அவர் காந்தியின் கரங்களிலும், நேருவின் போதனையிலும் வளர்ந்தவர்


இந்த நாட்டிற்கு எது சரியோ அதனை மிக தைரியமாக செய்தவர், அதில் வாக்கு வங்கிபற்றியோ ஏன் உயிரினை பற்றிகூட கவலையின்றி அதனையும் நாட்டிற்காக கொடுத்தவர்.


ஆழ்ந்த அஞ்சலி
வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்









Image may contain: 1 person




No comments:

Post a Comment