Monday, October 17, 2016

அதிமுக பிறந்த நாள்



17-10-1972


பிராமணர் அல்லோதரை எல்லாம் வாழவைக்க போகின்றோம் என கிளம்பினார்கள், பின் திராவிடரை வாழ வைப்போம் என்றார்கள், அப்படியாக சுருங்கிகொண்டே வந்தார்கள்


ஒருவழியாக தமிழரை வாழ வைப்போம் என கட்சிதொடங்கினார்கள், 12 ஆண்டுகளில் கட்சி முதல் பிரிவினை கண்டது, ஆயினும் அது கட்சியினை பாதிக்கவில்லை


தமிழர் வாழ இந்தி எதிர்ப்பே வழி என அவர்கள் செய்த அழிச்சாட்டியத்திலும், அன்று இந்தியா கண்ட வறட்சியில் அரிசி பற்றாக்குறை நிலவியபோது, தமிழக வறட்சிக்கு காமராஜரே காரணம் என சொல்லியதிலும் அரசியல் செய்தார்கள்


உச்சகட்டமாக‌ வானலோகத்து இந்திதிரன் என அவர்கள் உயரப்டித்த ராமச்சந்திரனை எம்.ஆர் ராதா சுட்டவுடன், தமிழகமே சட்டம் ஒழுங்கு இல்லாமல் இருப்பதாக, முதல்வர் சரியில்லை, ஆளுங்கட்சி சரியில்லை என் ஆட்சிசியினைப் பிடித்தார்கள்.


அதோடு அவர்களின் பிதாமகன் காலமானார்.


அதற்கு பின் 3 ஆண்டுகளில் சர்ச்சை வெடித்தது.


எந்த இந்திரனை காட்டி, யாரை காங்கிரசின் ஆட்சியில் எம்.ஆர் ராதா சுட்டார் என ஒப்பாரி வைத்து ஆட்சியினை பிடித்தார்களோ அந்த ம.கோ. ராமச்சந்திரனை கட்சியினை விட்டே விரட்டினார்கள்.


அவருக்கோ ஆத்திரம் தாளாமல் தனி கட்சி கண்டார், அது இன்றைய அக்டோபர் 17


அதன்பின் அந்த ராமசந்திரன் தமிழகத்து சக்கரவர்த்தியானது இன்னொரு விஷயம்.


ஆனால் ஒரு விஷயம் கவனிக்கவேண்டியது


அதன்பின் இரு கட்சிகளும் பெரிதாக‌ உடையவே இல்லை ,


வை.கோ, டி,ராஜேந்தர். பாக்யராஜ், திருநாவுக்கரசர் என பலர் கழகங்களை தொடங்கினாலும் இவை இரண்டும் அவற்றை கொசுவினை கடித்த யானை போல ஊதிதள்ளிவிட்டன‌


அதன் பின் இரு கட்சிகளும் உடைவினை சந்திக்கவே இல்லை, சந்திப்பதாகவும் இல்லை.


இன்று உடைந்த கட்சியின் நிறுவண நாள் என சொல்லிகொள்கின்றார்கள், யாராவது நிறுவணர் சமாதியிலோ அல்லது நிறுவணர் கட்சி தொடங்கி இருக்கின்றேன் என அறிவித்த ரமாவரம் தோட்டத்திற்காவது சென்று நினைவு கூர்வார்களா? என்றால் இல்லை.


அந்த ராம்சந்திரனை முறைப்படி நினைவு கூறவும் அவர்களுக்கொரு அனுமதி வேண்டியிருக்கின்றது என்பதுதான் பரிதாபம்.


அவர்கள் நிலை அப்படி.


இன்று அக்கட்சியின் நிறுவணர் ராமசந்திரன் இல்லை, ஆனால் அக்கட்சி அண்ணாவின் கொள்கைகளை நிலைநிறுத்த தொடங்கபட்டதாக சொல்லி ஆரம்பிக்கபட்ட கட்சி.


ஒரு நல்ல பெரியாரிஸ்ட் அல்லது மூத்த திராவிட கழக தலைவர் இருப்பாரானால், இன்று இந்த கட்சிகளை இணைக்கவே விரும்புவார்கள்


அதிமுகவில் திராவிட அபிமானிகள் இருந்திருந்தால் கலைஞர் எப்பொழுதோ அதனை செய்திருப்பார். ஆனால் இன்று அக்கட்சியில் உள்ளவர்களுக்கு கட்சி வந்தவழி, கொள்கை, கோட்பாடு என ஒன்றும் தெரிந்ததாக தெரியவில்லை


தெரிந்த ஒரே விஷயம் அம்மா வாழ்க, அம்மா நாமம் வாழ்க‌


இன்று அவர்கள் கோயில், தீமிதி, அலகு குத்துதல் யாகம் என செய்யும் அழிச்சாட்டியங்களை கண்டால் ஒருவிஷயம் விளங்குகின்றது


பிராமணர் அல்லாதோர் நலனுக்காக தொடங்கபட்ட இயக்கம் பின்னாளில் மாறி மாறி திராவிட முன்னேற்ற கழகமாக ஆட்சியில் அமர்ந்தது


மறுபடி இவர்களால் அது பிராமணர்களை வாழவைக்கும் நிலைக்கு சென்றுகொண்டே இருக்கின்றது. இந்த சுயமரியாதை என்பதெல்லாம் அவர்கள் கேள்விபட்டதாகவே தெரியவில்லை


இன்று அக்கட்சியின் நிறுவண நாளாம்.


அவர்கள் கட்சியின் வரலாற்றினை யோசித்து பார்க்கலாம், வந்தவழியினை சீர் தூக்கி பார்க்கலாம், செய்வார்களா இல்லையா தெரியாது, ஆனால் செய்தால் நன்றாக இருக்கும்.


ஒரு நல்ல கம்யூனிஸ்ட் இன்றும் இந்தியாவில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணையவேண்டும் என்றே விரும்புவார்.


அப்படி ஒரு ஒரு மூத்த திமுக உறுப்பினர் எங்காவது இருந்தால், அவரின் நினைப்பு இப்பொழுதும் இரு கழகங்களையும் இணைப்பதாகவே இருக்கும்


அது நடக்குமா என்றால் இந்நொடியில் வாய்ப்பில்லை


சரி எப்படியும் போகட்டும்


ஆனால் இன்று கட்சியின் நிறுவண நாளாம், கண்டிப்பாக கொண்டாடவேண்டுமாம். ஆனால் எப்படி கொண்டாடுவது என தெரியாமல் ஆளாளுக்கு முணகி முணகி கொண்டாடுகின்றார்கள்


ஒரு கட்சியின் தொடக்கவிழாவினை கூட அதன் நிறுவணரின் நினைவிடங்களில் கொண்டாடமுடியாமல், திக்கி திணறி கொண்டாடும் ஒரு துர்ப்பாக்கிய நிலை அவர்களுக்கு


பார்ப்பதற்கு கொஞ்சம் பரிதாமாகத்தான் இருக்கின்றது.






No comments:

Post a Comment