Tuesday, October 18, 2016

தமிழ்நாடு தாங்குமா?




Stanley Rajan's photo.    Stanley Rajan's photo.


காவேரி மேலாண்மை குழு அமைக்க கோரி இதோ தமிழகமெங்கும் எதிர்கட்சிகள் பொங்குகின்றன, சந்தடி சாக்கில் அங்கிள் சைமனும் ரயில் மறிப்பாரம், அது பெரும்பாலும் சரக்கு ரயிலாக இருக்கும்


இப்பொழுது எழும் கேள்விகள் ஏராளம்


யாரும் ஏன் மாநில அரசு ராஜினாமா செய்யவேண்டும், முதல்வர் பொறுப்பிலிருந்து பன்னீர் வெளியேறவேண்டும் என குதிப்பதில்லை





தமிழக எம்பிக்களை ஏன் யாரும் தேடவில்லை, செயல்படாத அவர்கள் ராஜிமானாமா செய்யட்டும் என ஏன் யாரும் குரலெழுப்பவில்லை

ஆனால் காவேரி மேலாண்மை, மத்திய அரசு என குதித்துகொண்டே இருக்கின்றார்கள், ரயில் மறியல், ரயில் பூச்சி மறியல் என கடும் ஆர்ப்பாட்டம்

இதோ கூடங்குளத்தில் 3, 4 என எண்ணிக்கை கூடுகின்றது, அப்பொழுதும் சத்தமில்லை

ஆக கொஞ்சமும் புரிந்துகொள்ளமுடியாத தமிழக அரசியலும் அதன் போராட்ட இம்சைகளும் தலைசுற்ற வைப்பவை.

எப்படியும் போகட்டும்

எல்லோரும் அப்பல்லோ போகின்றார்கள், வருகின்றார்கள்

ஆனால் குஷ்பூ இன்னும் செல்லவில்லை, விரைவில் செல்வார் என எதிர்பார்க்கின்றோம், அவர் ஒருவர்தான் ஓரளவு தைரியமாக பேசகூடியவர்.

இந்த திருநாவுக்கரசர் வந்தபின் குஷ்பூவினை பல இடங்களில் காணமுடியவில்லை, வாழ்த்து சொன்னதோடு சரி

விரைவில் அவர் வருவாரா? அல்லது குஷ்பூ காங்கிரஸ் எனும் பிரிவோடு வருவாரா என்பது விரைவில் தெரியும்.

தமிழக காங்கிரசில் எல்லாவற்றிற்கும் வாய்ப்பு உண்டு.

காங்கிரசில் தயங்கி நிற்க அவருக்கு என்ன இருக்கின்றது?

தனியாக கட்சி தொடங்கினால் கூட்டணிக்கு தமிழக காங்கிரசே காத்து நிற்காதா?

குஷ்பூ கட்சி தொடங்கலாம், ஆனால் போட்டிக்கு தமிழிசை விபரீதமாக யோசிக்கலாம்

அதாவது குஷ்பூ நடிகையாகி பிரபலமாகி கட்சி நடத்தும் அளவிற்கு வந்துவிட்டார்,

அதனால் நாமும் நடிகையாகிவிட்டால் என்ன?

தமிழ்நாடு தாங்குமா?















No comments:

Post a Comment