Tuesday, October 25, 2016

வருண் : இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா??

https://youtu.be/3MGUDEUvM1U


Stanley Rajan's photo.Stanley Rajan's photo.


வருண் காந்தி பற்றி ஏராளமான செய்திகள் வருகின்றன, இந்திராவின் பேரன் அவர், இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகி இருக்ககூடிய அவரின் விதி இப்படி வீடியோ வடிவில் வந்திருக்கின்றது.


இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி, 1971 முதல் 1980 வரையான காலகட்டங்களில் இந்தியாவினை ஆட்டிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி.


வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, கட்டாய கருக்கலைப்பு திட்டம், சில துப்பாக்கி சூடுகளுக்கு காரணம், டெல்லியினை ஆட்டிவைத்த சில சம்பவங்கள் என ஏராளமான திகில் கதைகள் உண்டு.


காங்கிரஸ் மூத்த தலைவர்களே அவரிடம் அஞ்சி ஒடுங்கி இருந்தார்கள் என்கிறது காங்கிரஸ் வரலாறு, நிச்சயமாக அப்படியும் காங்கிரசில் ஒரு பக்கம் இருக்கின்றது


இவ்வளவிற்கும் கட்சியில் சஞ்சய்காந்தியின் பதவி என்னவென்றால் ஒன்றுமே இல்லை. ஆனால் கட்சி விவகாரங்களில் அவரின் கை ஓங்கியே இருந்திருக்கின்றது.


இந்திரா பல இடங்களில் அவரை கையாளமுடியாமல் தடுமாறி இருக்கின்றார், பிள்ளைபாசம் அவரையும் தடுமாற வைத்திருக்கின்றது


பஞ்சாபிய பெண்ணும், தொடக்கத்தில் மாடலுமான மேனகாவுடன் திருமணம் நடந்தது, மேனகாவின் தந்தை இந்திய ராணுவ அதிகாரி, சஞ்சய் இருக்கும் வரை இந்திரா மேனகா மோதல் இல்லை.


ஆனால் சஞ்சய் எதிர்பாரா விதமாக விமான விபத்தில் இறந்தார். நாள்தோறும் சிறிய விமானத்தில் பறந்துவிட்டு வருவது அவரின் வாழ்க்கை முறையில் ஒன்று, அன்று அப்படி பறந்த விமானம் விபத்துகுள்ளாகி இறந்தார் சஞ்சய்


அன்று மேனகாவின் வயது 24, இந்த வருண்காந்தி 3 மாத குழந்தை.


அதன் பின் இந்திரா மேனகா மோதல் தொடங்கியது, சோனியா வந்தது, சஞ்சயின் இடத்தினை மேனகா பிடித்துவிடுவார் என இந்திரா அஞ்சினார் என ஏக சுவாரஸ்ய ஹேஸ்யங்கள் உண்டு


ஆனால் பஞ்சாப் பிரச்சினை தொடங்கிய காலமது, பஞ்சாபியர் மேனகா மூலம் தனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் என சந்தேகித்ததில் இந்திராவின் கோபபார்வைக்கு ஆளானார் மேனகா


எவ்வளவு நெருக்கடி என்றால் பாஸ்போர்ட்டினை முடக்கும் அளவிற்கு சென்றார் இந்திரா


மேனகாவும் சஞ்சய் ஆதரவாளர்களை இணைத்து "சஞ்சய் விசார் மஞ்ச்" (சஞ்சய் எண்ண மேடை) என ஒன்றை தொடங்கி அரசியலில் இறங்கினார், ஆதரவும் இருந்தது.


ஆனால் இந்திரா படுகொலை, ராஜிவ் வரவு என சூழல்கள் மாற மாற மேனகாவால் பெரும் அரசியல் செய்யமுடியவில்லை, ஜனதாவிலும் பின் பாரதீய ஜனதாவிலும் அடைக்கலமானார்


விலங்குகள் மீதான நலன் மூலமே இன்று அறியபட்டிருக்கும் மேனகாவிற்கு அன்று பெரும் வாய்ப்பு இருந்தது.


அந்த விமான விபத்து மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இன்று நிச்சயம் காங்கிரசின் கட்டுபாடு மேனகா இல்லத்திடமே இருந்திருக்கும், சோனியா, ராஜிவ், ராகுல் பிரியங்கா எல்லாம் வந்திருக்க முடியாது


ஆனால் விதி அது அல்ல.


விதி மேனகாவின் இடத்தினை சஞ்சய் மரணம், இந்திரா மரணம், ராஜிவ் மரணம் என பயணித்து அந்த இடத்தினை சோனியாவிடம் கொண்டு சேர்த்துவிட்டது, அந்த இடம் நிச்சயம் மேனகாவிற்கான இடம்


சஞ்சய் மட்டும் இருந்திருந்தால் பெரும் அரசியல் பிரளயமே நடந்திருக்கும், அவர் காட்டிய வேகமும் அவரின் நடவடிக்கைகளும் பெரும் சர்வாதிகார தோரணையானவை


அம்மனிதரின் மகனா இந்த வருண்காந்தி என பார்க்கும்பொழுது பரிதாபமே தோன்றுகின்றது.


சிக்கிகொள்ளாமல் தப்பு செய்யும் வரைதான் அரசியலில் நீடிக்கமுடியும், சிக்கிகொண்டால் தப்புவதற்கு பெரும் போராட்டம் நடத்தவேண்டி இருக்கும்.


இன்றும் இந்திரா குடும்பத்திற்கு வட இந்தியாவில் அபிமானம் உண்டு, மேனகா காந்திக்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கி உண்டு, அவரை கட்சிகள் முன்னிலைபடுத்த அதுதான் காரணம்


இன்று வீடியோ போட்டு வருண் காந்தியினை வறுத்தெடுக்கின்றார்கள், அவரை முன்னிறுத்திய பிஜேபியும் கை பிசைந்து நிற்கின்றது


சாமியார்கள் என்றால் புன்னகைத்து கடந்துவிடுவார்கள், நடிகைகள் என்றால் நான் அவள் இல்லை என சொல்லிவிடுவார்கள், இது அரசியல் சர்ச்சை, வருண் ஏதோ சொல்லி சமாளித்துகொண்டிருக்கின்றார்


ஆனால் இவை எல்லாம் காலவோட்டத்தில் மறைந்துவிடும், எனினும் மேனகாவின் மனதில் அந்த காலங்கள் நினைவுக்கு வரலாம்


அதாவது மாடல் நடிகை என்ற காலங்களில் மேனகா பத்திரிகையாளராகவும் இருந்தார், பல விஷயங்களை எழுதினார், மிகபெரும் பலமாக பிண்ணணியில் சஞ்சய்காந்தி இருந்தார், அவர் டெல்லி சுல்தான் போன்ற காலங்கள் அவை


போதாதா, சூர்யா எனும் அந்த பத்திரிகையில் மிக துணிச்சலான செய்தியினை வெளியிட்டிருந்தார் மேனகா, அந்த தைரியம் சஞ்சய் கொடுத்தது


அதாவது இந்திராவிற்கு பெரும் குடைச்சல் கொடுத்த மொரார்ஜி தேசாய் கூட்டத்தில் பாபு ஜெகஜீவன்ராம் என்றொருவர் அமைச்சராக இருந்தார், அதுவும் பாதுகாப்பு அமைச்சர்


(மிசா காலங்களில் காங்கிரசில் அதிருப்தி இருந்தது காமராஜர் போலவே பலர் முணுமுணுத்துகொண்டிருந்தனர்)


அவர் இந்திரா அரசிலிருந்து விலகியே மொரர்ஜி தேசாய் பின்னால் சென்றார், அங்கு பெரும் வரவேற்பு இருந்தது, அவர் பிரதமர் ஆவதற்கும் வாய்ப்பு இருந்த காலங்கள்


ஆனால் காங்கிரஸ் துரோகி


அவரின் மகனுக்கும், டெல்லி பல்கலைகழக மாணவிக்கும் தகாத உறவு இருந்ததாக படங்களோடு தன் பத்திரிகையில் செய்தி போட்டு பெரும் பரபரப்பினை செய்தார் மேனகா


அந்த புகைபடங்கள் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தின, ஜெகஜீவன் ராம் கண்ணீர் விட்ட கொடுமையும் நடந்தது


அந்த வரலாறு 39 வருடம் கழித்த்து இன்று திரும்பியிருகின்றது,


திரும்ப திரும சுழலுவதுதான் கால சக்கரம், சுழன்றிருக்கின்றது


மேனகா கண்களுக்குள் இவை எல்லாம் வந்து செல்லலாம்


ஆனாலும் வருண் காந்தி, அந்த சர்வாதிகார தந்தையினை ,, பார்த்திருக்க கூட மாட்டார், 1970களை அறிந்தவர்கள் சஞ்சயின் பிள்ளையினை, இந்தியாவினை அலறவைத்தவரின் பிள்ளையினை வருங்காலம் இப்படி போட்டு அடிக்கும் என கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்கள்


காலம் எப்படி எல்லாம் விளையாட்டு காட்டிகொண்டிருக்கின்றது.


நிச்சயமாக காங்கிரசில் அவருக்கொரும் பெரும் இடம் இருந்தது, அது தவறி சோனியா ராகுல் கைகளுக்கு சென்றுவிட்ட்டது


வருணை நினைக்கும் போதெல்லாம்


"இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா.." எனும் வரிகள் காதோரம் கேட்கத்தான் செய்யும்








 கொசுறு 





நடிகை ரம்பா விவாகரத்து கோரி மனு

ஈழ தமிழரைத்தான் திருமணம் செய்தார், ஒருவேளை தெலுங்கச்சியே வெளியேறு என ஏதும் சொல்லி தொலைத்து விட்டார்களோ?

விரைவில் சின்னதிரைக்கு ஒரு நடிகை ரெடி




 

No comments:

Post a Comment