Saturday, October 15, 2016

சசிகலா நடராஜனுடன் ராசாத்தியம்மாள் சந்திப்பு..



சசிகலா நடராஜனுடன் ராசாத்தியம்மாள் சந்திப்பு , ஜெயலலிதா உடல்நலம் பற்றி விசாரித்தார்.


ராசாத்தியம்மாள் பற்றி ஸ்பெக்ட்ரம் சர்ச்சைகளின் காலம் தவிர வேறு எப்பொழுதும் செய்திகள் வராது,


அன்மீனிசியாவால் தயாளு அம்மாள் பாதிக்கட்டிருக்கின்றார் என கலைஞர் குடும்பமே டெல்லி மருத்துவகுழு முன் கதறி அழுதுபொழுது கூட ராசாத்தி அம்மாள் அவர்களுடன் சேர்ந்து அழுதார் என்று ஒரு செய்தி கூட இல்லை.


அப்படிபட்ட ராசாத்தி அம்மாள் சசிகலாவினை சந்திந்த்து வாயில் முந்தானை வைத்து அழுதிருக்கின்றார்.


இது பெரும் பரபரப்பினை கிளப்பிவிட்டிருக்கின்றது


சும்மாவே பாஜகவின் ஸ்லீப்பிங் செல்லாக தமிழக காங்கிரஸில் ஊடுருவியிருக்கும் திருநாவுக்கரசர் திமுகவின் உறவினை பிரித்தெடுக்கும் முயற்சியில் அக்னி பார்வை பார்த்துகொண்டிருக்கின்றார்.


வடக்கே குடிசை வீட்டில் புகுந்து அவர்கள் கஞ்சியினை பிடுங்கி குடிக்கும் ராகுல் காந்தி, அதிரடியாக அப்பல்லோ வந்தது அப்படித்தான் என்கின்றார்கள் சிலர்.


இப்பக்கம் அதிமுக உடையுமா?, ஒரு குழு சசிகலா புஷ்பாவோடு சேர்ந்து கலைஞரிடன் தஞ்சம் அடைந்து ஆட்சி அமைக்குமா? என ஏகபட்ட ஹேஸ்யங்கள், வாதங்கள்.


இந்நிலையில் ராசாத்தி அதிமுகவின் சுப்ரீம் லிடரை சந்தித்திருப்பது கடும் திருப்பமே,


கலைஞர் அனுமதி இன்றி சிஐடி காலணி வீட்டு கதவு திறக்காது எனினும், முன்பு கட்சியில் ஆட்சியில் கனிமொழிக்கு முக்கியத்துவம் வழங்கபடவில்லை என்ற அந்த அம்மாவின் முணுமுணுப்பும் நினைவுக்கு வருகின்றது.


வழக்கமாக கனிமொழியினை பற்றி ஏதும் எழுதினாலே "நாடார்" பத்திரிகைகளுமா? எழுதுகின்றன என சூசகமாக எதனையோ சொல்பவர் கலைஞர். அப்படி சசிகலா புஷ்பா, நாடார் சங்கம் என சர்ச்சைகள் வலுக்கும்பொழுது ராசாத்தி அம்மாள் எப்படி சசிகலாவினை சந்தித்தார்?


புரியும் ஆனால் புரியாது இதுதான் அரசியல் இருந்துவிட்டு போகட்டும்.


அதிமுக உடைந்து ஒரு குழு திமுகவிற்கு வரும் என்பதுதான் பலரின் யூகம், எதிர்பார்ப்பு இன்னபிற பெட் கட்டும் பந்தயம்


ஆனால் இப்படி தலைகீழாக நடந்துவிட்டால்?


அதாவது இங்கிருந்து 20 பேர் அங்கு செல்லும்பொழுது, அங்கிருந்து கொஞ்சம்பேர் இந்தபக்கம் பல்டி அடித்துவிட்டால்?


அப்படியும் ஒரு வாய்ப்பு இருக்குமோ? இந்த சந்திப்பு அதனை சொல்லுமோ என்றெல்லாம் நாம் யோசிக்க கூடாது, பேசவும் கூடாது.


ஆனால் யாருக்கோ, எதனையோ சூசகமாக சொல்கின்றார்கள்.


முன்பு இந்திரா வலுவாக இந்தியாவினை ஆட்டியபொழுது பட்நாயக் என்பவர் திமுகவினையும் அதிமுகவினையும் இணைக்க அரும்பாடுபட்டார், கலைஞரும் அதற்கு இணங்கியே வந்தார். ஆனால் அப்பக்கம் ஓரு சிக்னலும் இன்றி வரலாறு திரும்பாமலே போனது


அதாவது தமிழகத்தில் வலுவான கட்சிகள் பிரிந்து இருந்தால், தேசிய கட்சிகள் வலுபெற்றுவிடும் என்ற ஒரு நோக்கில் அன்று நடந்தவை அவை.


அப்படி இன்று ஏதோ, யாருக்கோ சொல்ல வந்திருக்கின்றார்கள், சொல்லட்டும்


ஆளாளுக்கு சிந்தனையில் உதித்தவரை ஒவ்வொன்றை சொல்கின்றார்கள்


எமக்கு உதிப்பது, அல்லது மலர்வது இப்படித்தான்


இரு கட்சியிலும் தங்கள் சந்தேகத்திற்குரிய எம்எல்ஏக்களை லிஸ்ட் எடுத்து வைத்திருக்கின்றார்கள், அவர்கள் எந்நேரமும் கட்சி தாவலாம்


அதனால் பட்டியிலை மாற்றிகொண்டு, இந்த பட்டியலிலுள்ள‌ எங்கள் ஆட்கள் வந்தால் நீங்கள் சேர்க்க கூடாது, உங்கள் ஆட்கள் வந்தால் நாங்கள் சேர்க்கமாட்டோம் எனும் ஜென்டில்மேன் அல்லது ஜென்டில்வுமன் ஒப்பந்தம் இருக்கலாம்


சமீபத்தில் மறைந்த தாய்லாந்து மன்னர் அடிக்கடி சொல்வார், எந்த அரசனும் நிம்மதியாக இருப்பதில்லை


அப்படி தமிழகத்தில் எந்த அரசியல் உச்சமும் நிம்மதியாக இருக்கவே முடிவதில்லை. பெருங்கவலை அவர்களுக்குத்தான்.








அப்போலோ வாசலில் இருந்து... 





அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் சந்தேகப்படும்படி, காரில் சுற்றியவர்களிடம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

யாராக இருக்கும்? பன்னீர் செல்வத்தின் ஆட்சியினை அம்மாவிடம் போட்டுகொடுக்க வந்த கட்சிக்காரர்களாக கூட இருக்கலாம்




 

No comments:

Post a Comment