Thursday, October 13, 2016

வருக வருக புட்டீன் அவர்களே!

https://youtu.be/npPg-IAPzJA


விளாடிமிர் புட்டீன் : வாழ்க்கைக் குறிப்பு காணொளி


அமெரிக்காவின் ஏகபோகத்திற்கு ஒரே எதிர்ப்பினை கொடுத்தது சோவியத் யூனியன், அது சிதறிய பின் அவர்கள் அட்டகாசம் தலைவிர்த்தாடியது, எதுவரை? அவர் களம் இறங்கும் வரை


அவர் ரஷ்யாவின் புட்டீன்


சோவியத்தின் குருச்சேவிற்கு பின் மிக கடுமையாக அமெரிக்காவினை எதிர்க்கும் ரஷ்ய அதிபர் அவர். அது சிரியாவில் மிக கடும் கொதிநிலையினை உருவாக்கி இருக்கின்றது


ஆப்கன், ஈராக், லிபியா என பல நாடுகளை தன் கால்பந்தாக உருட்டி விளையாடிய அமெரிக்காவிற்கு சிரியாவில் ஒன்றும் இன்னும் சாதிக்கமுடியவில்லை. அது சிரியா அதிபர் மற்றும் போராளிகளுக்கான யுத்தத்தில் இருந்து இன்று அமெரிக்கா ரஷ்யா மறைமுக யுத்தமாக மாறி இருக்கின்றது


அதாவது சிரியாவில் இனி அமைதியினை ஏற்படுத்துவது எப்படி என்ற முடிவு இந்த இருவரின் கையில்தான் இருக்கின்றது, பேசுகின்றார்கள், கடுமையாக பேசுகின்றார்கள். அமெரிக்க தந்திர நகர்வுகள் புடினிடம் எடுபடவில்லை


ஒரு வகையில் அமெரிக்கா அவரிடம் அஞ்சுகின்றது, ஹிலாரிக்கு காய்ச்சல் என்றால் கூட புட்டின் சதியோ? என்கின்றது. டிரம்ப் கூட புட்டீனின் தைரியத்திற்கு ஒபாமா அருகில் கூட வரமாட்டார் என பகிரங்கமாக கலாய்க்கின்றார்.


சிரியாவின் அலப்போ ஒரு முக்கியமான நகரம், ஈழத்தின் கிளிநொச்சி, ஆப்கனின் காந்தகார், ஈராக்கின் பாஸ்ரா போன்றது. அதனில் ரஷ்யபடை போட்டு தாக்குகின்றது, அமெரிக்கா எச்சரிக்கின்றது, இதன் மூலம் பெரும் உலகளாவிய யுத்தம் தொடங்கலாம் என்கின்றார்கள்


சொல்வது நமது வைகோவோ அல்லது சு.சாமி என்றால் பிரச்சினை இல்லை, சிரித்துவிட்டு நகரலாம்ம


ஆனால் சொல்வது முன்ன்னாள் சோவியத் அதிபர் கார்பசேவ், துருக்கி அதிபர் இன்னும் சில ஐரோப்பிய வித்தகர்கள். ஆக இந்த அலப்போ ஒரு மிகபெரும் பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது


அலப்போவோ, அப்பல்லோவோ இரண்டும் ஒரு எதிர்ப்பார்ப்பினை உண்டாக்கிவிட்டது.


உலக நடப்புகளும் அப்படித்தான் நகர்கின்றன. ரஷ்யா சிரியாவில் களமிறங்கிய உடன் காலடியில் இருக்கும் கியூபாவினை நண்பனாக்கி அமெரிக்கா அதிர்ச்சி கொடுக்க, புட்டீன் என்ன செய்தார்?


பாகிஸ்தானுடன் ரஷ்யாவின் முதல் உறவினை உருவாக்கி அமெரிக்காவினை தண்ணீர் குடிக்க வைத்தார். காரணம் இந்தியா, சீனா, ஆப்கன், ஈரான் என எல்லோரையும் கண்காணிக்க அல்லது மிரட்ட அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் உறவு மகா அவசியம்.


நீங்கள அப்பல்லோ கவனத்தில் ஒன்றை கவனித்தீர்களோ இல்லையோ, இந்தியா எல்லை தாண்டி தாக்கியவுடன் பாகிஸ்தான் தீவிரவாத தலைவன் ஓர் அறிக்கை விட்டான். அதில் அமெரிக்காவினை விரட்டும் நேரம் வந்துவிட்டது, ரஷ்யா எங்களோடு இருக்கின்றது என எச்சரித்து இருந்தான்


ஒரு தீவிரவாதி அப்படி பேசவைக்கபட்டான் என்றால் பிண்ணணி பற்றி நீங்களே யோசியுங்கள்.


இந்த பாகிஸ்தான் ரஷ்ய உறவால் அலறிய அமெரிக்கா இந்தியாவினை வளைத்துபோட முயல்கின்றது, இந்தியா புன்னகைத்தபடியே யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொல்லிகொண்டே இருக்கின்றது.


புட்டீனின் ஆட்டம் அதிரடியாக தொடர்கின்றது, கியூபா அமெரிக்காவோடு நெருங்கினாலும் அதன் தீவு ஒன்றில் முன்பு ரஷ்ய ராணுவ தளம் இருந்தது, கென்னடி காலங்களில் பரபரப்பினை ஏற்படுத்தியது, பின்பு தமிழ்க டி.ராஜேந்தர் கட்சி போல் மூடபட்டது


இன்று புட்டீன் அதனை தூசு தட்டுகின்றார், அதோடு கூட வியட்நாமிலிருந்த ரஷ்யதளமும் மீள திறக்கபடும் என்கின்றார்.


இதன் பொருள் என்னவென்றால், அமெரிக்காவினை சுற்றி ஒரு வித வலைபின்னும் வேலை என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.


எண்ணெய் விலையினை குறைத்து ரஷ்ய பொருளாதாரத்தை அசைத்து, அதன் மூலம் ரஷ்மக்களின் கோபத்தை தூண்டி புடினை விரட்டும் உலக அரசியல் விளையாட்டெல்லாம் அவரிடம் எடுபடவில்லை. அவர் அப்படியே இருக்கின்றார்.


எண்ணெய் விலை குறைவால் பாதிக்கபட்டிருக்கும் நாடுகள் ஒரு கூட்டத்தினை கூட்டி, ரஷ்யாவினை வருந்தி அழைக்கும் நிலைக்கு சென்றுவிட்டது நிலை.


இப்படி அமெரிக்காவின் தூக்கத்தை கெடுத்து, எங்களை மீறி சிரியாவில் ஆடினால் உலகப்போருக்கே தயார் எனும் அளவிற்கு மகா அதிரடி காட்டும் புட்டினை உலக நாடுகள் பாஷா ரஜினி போல ஒரு மாதிரி பயந்து பார்த்துகொண்டிருக்கின்றன.


தனது நீண்டகால உறவினை தாண்டி, பாகிஸ்தானுடன் அது நெருங்குவது இந்தியாவிற்கும் ஒரு உதறலே,


ஆனால் அமெரிக்கா அமெரிக்கா என பறக்கும் இந்திய பிரதமரையும், தன் அருகில் இருக்கும் ஜார்ஜியாவிற்கு ஆயுதம் விற்கும் இஸ்ரேலையும் வரவேற்கும் இந்தியாவினை வழிக்குகொண்டுவர அப்படியான வழியில் அவர் இறங்கி இருக்கலாம்


அந்த அதிரடி புட்டீன் இன்று பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியா வருகின்றார். அதாகபட்டது உலக வங்கி எனும் அமெரிக்க வட்டிகடையும், ஐரோப்பிய யூனியன் எனும் ஜெர்மன் வட்டிகடைதான் உலகில் பிரசித்தம், இதனை தாண்டி அரேபிய உலகம் எனும் பணக்கார உலகம் (இது வேறுமாதிரியானது பணக்காரர்கள் ஆனால் மேற்குலகம் சொல்வதை மட்டும் கேட்பார்கள்).


இவைகள்தான் உலகின் நிதிமூலம்


இவர்கள்தான் வளரும், பிறக்கும், தவழும் நாடுகளுக்கு பணம் கொடுப்பார்கள், வட்டி போடுவார்கள், பின் கையினை கட்டி வைத்து அடிமை ஆக்குவார்கள்.


இதனால் மற்ற நாடுகளுக்கொரு வங்கி தேவைபட்டது, அப்படிபட்ட முயற்சிதான் பிரிக்ஸ் எனப்படும் பிரேசில் ரஷ்யா இந்தியா, சைனா, சவுத் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஒரு அமைப்பினையும் அதன் மூலம் ஒரு வங்கியினையும் ஏற்படுத்தி ஏதோ ஓராண்டுகாலம் செய்துகொண்டிருக்கின்றன‌


இந்த மாநாட்டிற்கு இந்தியா வருகின்றார் புட்டீன், சீன அதிபரும் வருகின்றார்


சீனா என்றவுடன் சிலருக்கு பொங்கும், பிரம்மபுத்திரா அணையில் நீரினை தடுக்கும் சீன அதிபர் எப்படி வரலாம் என பொங்குவார்கள், கொஞ்சம் ஆழ பார்க்கமாட்டார்கள்


அது சீனாவில் ஓடி இந்தியா வந்து மறுபடி வங்கதேசம் சென்று கடலில் கலக்கும். அதன் முகத்துவாரம் வங்கதேசமே


சிந்து, கங்கா, பிரம்ம புத்ரா என ஒன்றாம் வகுப்பில் படித்தாலும் உடைந்த இந்தியாவிற்கான ஒரே நதி கங்கை மட்டுமே, சிந்து பாகிஸ்தானுக்கும், பிரம்மபுத்திராவின் பங்கு வங்கத்திற்குமே பெரிதும் உதவும்.


இந்தியாவில் சீன அணை பெரும் விவாதபொருளாகும் போது, வங்கதேசம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினை வெறுப்பேற்றி சந்தோஷபட்டுகொண்டிருப்பதுதான் விசித்திரம், காரணம் அதுதான் அவர்களின் விவசாய‌ முதுகெலும்பு.


அது இருக்கட்டும்


இன்று இந்தியா வரும் உலகின் மிக தைரியமான அதிபரும், எந்த சவாலையும் எதிர்கொள்பவரும், ஒரு அசாத்திய மனிதராக திகழும் விளாடிமிர் புட்டீனை வரவேற்போம்.


ஏதோ சும்மா அரசியல் சீன் அவர் பாகிஸ்தானில் போட்டுகொண்டிருக்கலாம், ஆனால் இந்தியாவின் உற்ற நண்பன் எந்நாளும் அவர்களே, அந்த நட்பு வளருமே ஒழிய ஒருகாலமும் பாதிக்கபடபோவதில்லை


வருக வருக மிஸ்டர் புட்டீன்


அவரிடம் மோடி சிரித்துகொண்டே நிச்சயம் படம் பிடிப்பார், காதோரம் மோடியிடம் இப்படி கேட்பது யார்?


மிஸ்டர் மோடி, அவரை பார்த்தீர்களா? மிக சிறிய நாடான சிரியாவில் கால்பதித்து அமெரிக்காவினையே அலறவிடுகின்றார். நீங்கள் ஏன் மிக சிறிய நாடான இலங்கையினிடம் இப்படி கெஞ்சி தாஜா செய்துகொண்டிருக்கின்றீர்கள்?


புட்டீனிடமிருந்து கொஞ்சமாவது படிக்க கூடாதா?


ம்ஹூம் நாம் சொல்லி இந்திய பிரதமர் கேட்கவேமாட்டார், சரி புட்டினிடம் கேட்கலாம்


மிஸ்ட‌ர் புட்டீன் நீங்கள் இந்திய பிரதமர் இடத்தில் இருந்தால் இந்த இலங்கையினை என்ன செய்திருப்பீர்கள்? அதனை கொஞ்சம் சொல்லிவிட்டு செல்லுங்கள் பிளீஸ்


புடின் இப்படி சொல்வார்


"உக்ரைனைனில் எப்படி விளையாடினோம், உலகத்தையே மிக தைரியமாக எப்படி எதிர்கொண்டு விரட்டினோம் என்பதை உங்கள் பிரதமர் படித்தால் போதும், இந்த இலங்கை, மாலத்தீவு போன்றவற்றை ஒரே நொடியில் வழிக்குகொண்டுவந்துவிடலாம்.."


சரி புட்டின் கோவா வரட்டும், மாநாடு நடக்கட்டும்.


Welcome Mr.Putin


இதில் தமிழகதில் சிலர் இப்படி எதிர்பார்க்காமல் இருக்கட்டும்,


சொல்லமுடியாது அரைகுறையாக காதில் செய்தி விழுந்தால் இப்படி பரப்பினாலும் பரப்புவார்கள்


"புட்டீனும், ஜின் பிங்கும் ஜெயலலிதாவினை காணவே இந்தியா வந்திருக்கின்றார்களாம்


இன்று இரவு ரஷ்யாவின் புட்டீனும், சீன அதிபர் ஜி ஜின் பிங் கும் அப்பல்லோவிற்கு வந்து முதல்வரை பார்க்க போகின்றார்களாம்


அவரை சிகிச்சைக்கு மாஸ்கோ கொண்டு செல்லவும், பீஜிங் கொண்டு செல்லவும் இருவருக்கும் சண்டையாம்


எதுவாயினும் தேர்தலில் வென்றபின் பார்த்துகொள்ளலாம் என ஹிலாரி நேற்று டிவியில் சொல்லிகொண்டிருக்கின்றாராம்


உலகநாடுகளின் தலைவர்களுக்கு எங்கள் அம்மாவின் அருமை தெரிந்திருக்கின்றது"


என கண்களை கசக்கினாலும் கசக்கலாம்.


இதில் புட்டீன் திரும்பி சென்றவுடன் அடுத்தக்ட்டம் எப்படி இருக்கும்?


ராகுல், அமித்ஷா எல்லாம் வந்து முதல்வரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுப்ப முயற்சித்தார்கள், புட்டீனும் சீன அதிபரும் கூட வந்திருந்தார்கள்


ஆனால் இந்த சண்டாளன் கருணாநிதி ஏதோ செய்து அவர்களை திரும்ப அனுப்பிவிட்டார்...


என்ன செய்ய?


புட்டீன் ஜாதகம் அப்படி. கலைஞர் ஜாதகம் இப்படி.








Image may contain: 1 person , sunglasses and close-up






No comments:

Post a Comment