Friday, October 21, 2016

"ஏய் காவேரி துரோகி" என பொங்குவார்கள்...

 

எழுத்தாளார் சமஸ் சொன்னதைத்தான் நாம் அன்றே சொன்னோம், காவேரியில் கன்னட தவறு மட்டுமல்ல, தமிழக தவறும் உண்டு


அமராவதியும், பாவானியும், நொய்யலும் காவேரியின் தமிழக துணையாறுகள், இவற்றை இன்று சாயபட்டறை கழிவும், அதற்கும் மேல் அணைகளும் கட்டி அழித்தாகிவிட்டது


காவேரி என்பது விஸ்வரூபமெடுக்கும் இடம் இதுதான், இவற்றை நிறுத்திவைத்திருப்பது தமிழகம். அதாவது தமிழகம் காவேரியின் துணை ஆறுகளில் அணைகட்டலாம், நாசமாக்கலாம்




அதனையே கன்னடன் ஹேமாவதியிலும், கபினினியிலும் அணை கட்டினால் பெரும் தவறு


அந்த காவேரி என்பது பெரும் துணையாறுகளால் மட்டுமே பெருக்கெடுத்து ஓடும் நதி, துணையாறுகள் இன்றி காவேரியின் நீர் அளவு சிறியதே.


தமிழகமும் தன் பங்கிற்கு துணை ஆறுகளை தடுத்து வைத்திருக்கின்றது


காவேரியில் தமிழத்திற்கு கொடுக்கவேண்டிய பங்கு முக்கியம் எனினும், தமிழகமும் தன் பங்கிற்கு காவேரியினை கெடுத்து வைத்திருப்பதனையும் அவர் சுட்டி காட்டுகின்றார்.


அவர் சுட்டிகாட்டி இருக்கும் விஷயங்கள் உண்மை, ஆனால் பாருங்கள் விரைவில் "ஏய் காவேரி துரோகி" என பொங்குவார்கள்







கொசுறு

இந்த தீபாவளிக்கு எந்ததெந்த படங்கள் வரும் என தெரியவில்லை, ஆனால் நயனின் காஷ்மேரா வெளிவரலாம் என்கின்றார்கள்


சபரிமலைக்கு மாலையிட்டு கடும் விரதம் மேற்கொள்ளும் நண்பர் Babu Rao அவர்களுக்கு மகா சோதனையான காலம்


சுவாமி மீதான பக்தியா? அல்லது தேவதை மீதான அபிமானமா? எது பெரிது அவர் குழம்பி போயிருக்கின்றார்,




காரணம் நயனின் படம், முதல்நாள் முதல்காட்சி பார்த்து அவரின் நயனின் மீதான அக்கறையினை நிரூபித்துகொண்டே இருக்கின்றார்


இந்த தீபாவளிக்கு நயன் படம் வருகின்றது


நண்பரோ "சரணம் அய்யப்பா.." என சொல்லிகொண்டிருக்கின்றார், அவரை நினைத்தால் நமக்கே பரிதாபமாக இருக்கின்றது


ஆனாலும் பகவான் அவரை இப்படி சோதிக்க கூடாது.


நண்பரின் மனதில் வாழ்வது சபரிமலை வாசனா? அல்லது திருவில்லா திருக்குமாரியா?


விரைவில் தெரியும்.







 



No comments:

Post a Comment