Thursday, October 27, 2016

மலேசியாவில் தீபாவளி...

https://youtu.be/QKq5LlhXHeg

மலேசியாவில் தீபாவளி  : மக்கள் எண்ணங்கள், வாழ்த்துக்கள் : காணொளி


தீபாவளி நெருங்கிவிட்டது, இந்தியாவின் நம்பர் 1 கொண்டாட்டம் அது, தமிழகத்திலும் தயாரிப்புகள் தீவிரமாக இருக்கலாம் அதிமுகவினரை தவிர.


மலேசியாவில் தீபாவளிக்கு தேசிய விடுமுறை, இந்தியர்கள் கொண்டாடும் பண்டிகை என்பதால் தமிழ், தெலுங்கு, சீக்கிய, மலையாள மக்கள் கலந்த இந்திய சமூகத்திற்கு அப்படி அங்கீகாரம் அளித்திருக்கின்றார்கள். இதில் தமிழ் சமூகம் பெரிய எண்ணிக்கை அதனால் தீபாவளி தயாரிப்பிற்கு பின்னி எடுக்கின்றது.


பொதுவாக குறைந்தது 1 வாரம் கொண்டாடுவார்கள், அதிகம் 20 நாள் கூட இருக்கலாம். இந்திய வம்சத்தின் மிகபெரும் பண்டிகை அது, இப்படி கொண்டாடாவிட்டால் எப்படி?




விமானநிலையத்தில் மிகபெரும் தீபாவளி கோலம் அமைத்திருக்கின்றார்கள், மெட்ரோ ரயில் நிலையம், ஷாப்பிங் மால்கள் என திரும்புமிடமெல்லாம் தீபாவளி அடையாளங்கள்.


பொதுவாக பண்டிகைகளை மலேசிய மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள், இஸ்லாமிய பண்டிகை, சீன புத்தாண்டு, கிறிஸ்மஸ் புதுவருடம் எல்லாம் பொது இடங்களில் விருந்து உபசரிப்பு நடக்கும், பல இடங்களில் விருந்து உபசரிப்பு நடக்கும்


ரயில் ஏற சென்றாலும் அங்கு ஒரு ஸ்டால் போட்டிருப்பார்கள், யார் சென்றாலும் மலர்ந்த முகத்தோடு வரவேற்று உணவு உபசரிப்பு வழங்குவார்கள்.


அதாவது எல்லா பண்டிகையினையும் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவார்கள், அற்புதமான விஷயம்


கபாலி படத்தினை பார்த்துவிட்டு நீங்களாக ஒரு முடிவிற்கு வந்துவிட கூடாது, அது காட்டியது 2% பக்கம், மீதி 98% மகா நல்ல விஷயங்கள் உண்டு.


தீபாவளி காலம் என்றாலே வானொலி முதல் தொலைகாட்சி வரை ஒரு மாதம் தீபாவளி பாடல் வரும், தமிழ் எஃப்.எம் வேறு உண்டு அதுவும் அரசு செய்தி நிலையமே முழுநேரம் நடத்துகின்றது, தனியார் தமிழ் வானொலியும் உண்டு


நல்ல தமிழ், மிக அழகான நிகழ்ச்சிகள், அற்புதமான பாடல்கள் அவ்வப்போது செய்திகள் என அந்நாளைய இலங்கை ரேடியோ போலவே மகா இனிமையானது அது.


அப்படி இப்பொழுதும் தீபாவளி பாடல்கள் தொடங்கிவிட்டன‌


பொதுவாக தீபாவளி கொண்டாட தமிழ் திரையுலகம் அற்புதமான பாடல்களை கொடுத்திருக்கின்றது, அவை குறைந்தது ஒரு நாளைக்கு 2 முறையாவது வருகின்றன‌


"உன்னை கண்டு நானாட..என்னை கண்டு நீயாட .." எனும் அற்புதமான பாடல்


"மத்தாப்ப சுட்டு சுட்டு போடட்டுமா.." எனும் நதியாவின் பாடல்


"தீபாவளி தீபாவளிதான்.." எனும் ஜனகராஜின் பாடல்


"நான் சிரித்தால் தீபாவளி.." எனும் நாயகன் பாடல்


"தல தீபாவளி.." எனும் அஜித்தின் பாடல் என பல பாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன‌


இப்படி அழகான பாடல்கள் வரும் பொழுது இப்பொழுது மலேசிய தமிழ் தீபாவளி பாடல்களும் வருகின்றன‌


மலேசிய இந்தியர்கள் எல்லாமும் ரசிப்பார்கள், எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ரகுமான், அப்படியே மைக்கேல் ஜாக்சன், வெஸ்டர்ன் ஜாம்பவான் எல்லாவற்றையும் வரவேற்பார்கள்.


இப்போதுள்ள இளைஞர்களின் பாடல்களில் பெரும்பாலும் மேற்கத்திய இசை நிரம்பியிருக்கும்


அப்படி சில பாடல் வந்திருக்கின்றது, அதில் ஒன்று


"தீபாவளி வந்தால் ஜாலி ஜாலி
சட்டியில் வேகுது கோழி கோழி


ம்ம்ம்ம் முறுக்கா......
ஈஈஈஈஇ இருக்கா....


அய்யோ.. ஐ ஐ யோ....."


என ஒலிக்கின்றது ஒரு மேற்கத்திய ராப் இசையுடன் கூடிய தமிழ்பாடல்


மக்கள் மகிழ்ந்துகொண்டிருக்கும் நேரம், இதுபோன்ற பாடல்கள் கூடுதல் சுவாரஸ்யம் கொடுக்கின்றன‌


என்ன பாடல்கள் வந்தாலும், குஷ்பூ நடித்த தீபாவளி பாடல் ஏதுமில்லை எனும் சோகம் வரும், அவருக்கு மட்டும் "பூவே பூச்சுடவா" நதியா போல ஒரு பாடல் கிடைத்திருந்தால் எப்படி இருக்கும்?


அதனால் என்ன?பொங்கலுக்கு "பூ பூக்கும் மாதம் தை மாதம்" என பாடியிருக்கின்றார் என ஆறுதல் அடைந்துகொள்ளலாம்



No comments:

Post a Comment