Monday, October 17, 2016

இதுதான் கலைஞர் ஸ்டைல்


Image may contain: one or more people


அன்று 12 வயதிலே கையெழுத்து பத்திரிகை நடத்தினார்,


18 வயதில் முரசொலி தொடங்கி எழுதுகின்றார்,


அந்த சிறிய‌ பத்திரிகையினை தலை சுமையாய் சுமந்து விற்றார்.


பெரியாரிடம் பத்திரிகை பணி


அதன் பின் கருப்பு வெள்ளை பத்திரிகையிலிருந்து , கலர் பத்திரிகை பக்கங்கள்


பத்திரிகையின் அடுத்த பரிணமாமான தொலைகாட்சிகள்


இன்று இணைய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள்


ஆக 1936 முதல் இன்றைய 2016 வரை, மக்கள் ஊடகங்களின் வடிவம் மாறிகொண்டே இருந்தாலும் கொஞ்சமும் சளைக்காமல் அவர் ரதத்தினை செலுத்திகொண்டே இருக்கின்றார்.


மை நிரப்பிய பேனாவினால், சம்மணமிட்ட‌ தன் மடியில் இரு தலையணைக்கு மேல் அட்டையிட்டு அதன் மீது தாளில் எழுததொடங்கிய அந்த எழுத்து, இன்று ஐபேட் வரை தொடர்கின்றது.


அவரை பாருங்கள் தலையும் விரலையும்தான் அவரால் அசைக்க முடிகின்றது, அப்பொழுதும் மனிதர் எழுதிகொட்டுகின்றார்.


இறுதி துடிப்பு இருக்கும் வரை அவர் விரல் எழுதத்தான் செய்யும்


எத்தனை சவால்கள்? எத்தனை தாக்குதல்கள், அவரை முடக்கியே தீரவேண்டும் என எத்தனை வன்மங்கள், அடிதடிகள், வழக்குகள்.


அதெல்லாம் தாண்டி கிட்டதட்ட 80 வருடமாக தொடர்ந்து ஒரு மனிதன் எழுதிகொண்டும், படித்துகொண்டும் மக்கள் தொடர்பிலே இருக்கின்றார்


அதாவது என் கொள்ளுதாத்தா காலத்தில் எழுத தொடங்கியவர், இதோ என் மகள் "யாருப்பா இந்த சன் கிளாஸ் தாத்தா.." என கேட்கும் காலத்திலும் எழுதிகொண்டிருக்கின்றார்,


( உதய சூரியன் , சன் கிளாஸ்,சன் டிவி மனிதருக்கு எல்லாம் எப்படி பொருந்துகின்றது :) )


அதாவது கிட்டதட்ட 6ம் தலைமுறை அவர் எழுத்தினை படிக்கின்றது.


இவரை தவிர இந்த உலகில் யாருக்கு சாத்தியம்?


இதோ அவர் ஐபேட்டில் முகநூல் படித்து கொண்டிருக்கின்றார், அவருக்கான முகநூல் கணக்கும் உண்டு அதிலும் எழுதுகின்றார்.


இப்படத்தினை காணும்பொழுது அந்த கையெழுத்து பத்திரிகை நடத்திய அந்த கலைஞர் முதல் முகநூல் கலைஞர் வரை, அவரின் பலமுகங்கள் கண்களுக்க்குள் வந்துபோகின்றன.


காலமும், விஞ்ஞானமும் மாற மாற அவரும் எப்படியெல்லாம் தன்னை புதுப்பித்துகொண்டு, தன்னை நிலைநிறுத்தியபடியே வருகின்றார்.


எழுத்தினை உணவாக எண்ணாத மனிதானால் இது சாத்தியமில்லை.


இந்த வியப்பு கண்ணீர் ஒரு பக்கம் இருக்கட்டும்.


அந்நாளைய கட்சி கூட்டங்களில் எல்லோரும் பேசிய பின் இறுதியாக பேசி அசத்துவது கலைஞர் ஸ்டைல், அண்ணா காலத்திலே அப்படித்தான்


அதுவரை மோதிரத்தை உருட்டியபடியே அமர்ந்திருப்பார்.


இறுதியில் குறிப்புகளை துல்லியமாக பிசிறின்றி அள்ளிவீசி அசத்துவார், கூட்டம் ஆர்ப்பரிக்கும்.


இப்பொழுது அதற்கென்ன என்கின்றீர்களா? அப்படியானால் நீங்கள் என்னை தொடர்பவர்களாக இருக்க முடியாது.


என்ன அர்த்தத்தில் சொல்கின்றேன் என் புரிகின்றதா? :)


அதாகபட்டது இப்பொழுது அப்பல்லோவிற்கு எல்லோரும் படையெடுக்கின்றார்கள். நாளொரு தலைவர், நொடிக்கொரு நடிகர் என எல்லோரும் செல்கின்றார்கள்.


கவனித்துகொண்டே இருக்கின்றார் கலைஞர். ராசாத்தி அம்மாளை அனுப்பி பல்ஸ் பார்த்தாகிவிட்டது, அதாவது சசிகலா தயக்கமின்றி பேசுகின்றார்


எல்லோரும் வந்து சென்றாகிவிட்டது, இனி வர யார் இருக்கின்றார்கள் என்றொரு கட்டம் வருமல்லவா?


அந்த கடைசி பிரபலமாக வந்து அப்பல்லோவில் நிற்பார், அந்த வளாகம் நிச்சயம் அன்று கலங்கியே நிற்கும்.


இதுதான் கலைஞர் ஸ்டைல்


மனிதர் ஆச்சரியமானவர் மட்டுமல்ல, பெரும் அரசியல் குறும்புகளில் ரசனைக்குரியவர்.




No comments:

Post a Comment