உள்நாட்டு காளிமார்க் பானத்தினை வாங்க சொல்லாதவன், உள்நாட்டு தயாரிப்புகளை தள்ளிவிட்டு வெளிநாட்டு பொருளை வாங்கி குவிப்பவன்,
சீன எந்திரங்களில் பொருள் உற்பத்தி செய்துகொண்டிருபவன் எல்லாம்
சீன பட்டாசை வாங்காதே, சிவகாசி பட்டாசை மட்டும் வாங்கு என போதிக்க தொடங்கிவிட்டான்
அது என்ன சீனபட்டாசு மட்டும் விலக்கு? அதனை தவிர எல்லாமும் வாங்கலாமா?
அவர்களால் எப்படி இந்த விலைக்கு கொடுக்கமுடியும் என மட்டும் யோசியுங்கள்? அவர்களால் சல்லி விலைக்கு கொடுக்க முடிகிறதென்றால் என்ன அர்த்தம்.
இரண்டே விஷயங்கள்தான்
ஒன்று இது கட்டுபடியாகும் விலையே, இன்னொன்று அரசு கொடுக்கும் தொழில் ஊக்குவிப்புகளும் அங்கு குவியும் முதலீடுகளும்.
நிலையான அரசு, மோதல்களை அனுமதிக்காத அரசு, நொடியும் தயங்காமல் உழைத்துகொட்டும் மக்கள் என அவர்களால் இப்படி உற்பத்தியினை பெருக்க முடிகின்றது
இங்கு நிலை என்ன? விவசாயம் அழிந்து வியாபாரம் லாப சம்பந்தமான தொழில் என அறியபட்டிருக்கும் நாடு இந்தியா. உற்பத்தி பற்றி, அடக்க விலைபற்றி கவலைபடமாட்டோம், வியாபாரி வைத்ததே விலை.
ஆனால் அதனை உடைத்து இந்த விலைக்கு கொடுக்கலாம் என சீனன் சொன்னால் உடனே பற்றி எரியதொடங்குவார்கள்.
பிரச்சினை வியாபார இந்தியாவின் பார்வையில் இருக்கின்றது, வியாபாரிகள் வைக்கும் விலையில் இருக்கின்றது.
இதனை பற்றி எல்லாம் பேசினால் நீ தேசதுரோகி என பெப்சியினை குடித்துகொண்டு, கேஎப்சி கோழியினை கடித்துகொண்டே நம்மை நோக்கி சொல்வார்கள், அதுதான் விசித்திரம்.
No comments:
Post a Comment