Monday, October 10, 2016

உடைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கின்றது...

இப்படி எல்லாம் திரும்புவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது, எப்படிபட்ட திருப்பம்?, இப்படியெல்லாம் நடக்கும் என்று அவர்கள் கொஞ்சமாவது நினைத்திருப்பார்களா?


சீற்றங்கள் கடுமையாக இருக்கின்றது, மிக சரியான பாதுகாப்பு வியூகங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை.


எத்தனை ஆயிரம் அடிமைகள் இருந்த கட்சி அது, ஆனால் அடிமை பெண் ஒருத்தி, ஆயிரத்தில் ஒருத்தியாகி, உரிமை குரல் எழுப்புவதெல்லாம் பெரும் விஷயம்.




அதுவும் அண்ணா பாணியில் "வேலைக்காரி" என்றெல்லாம் சீறுவது நிச்சயம் ஏதோ முடிவு செய்யபட்ட்விட்ட ஒன்று.


சரத்குமார், ஓபி, நாஞ்சில் சம்பத் இன்னபிற அடிமை சின்னங்கள் எல்லாம் வாய்பிளந்து நிற்கும் நேரமிது.


போகிற போக்கினை பார்த்தால் உடைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கின்றது


சரி, அவர்கள் உடைக்கட்டும் உடைக்காமல் போகட்டும் அவர்கள் பிரச்சினை


ஆனால் அங்கொருவருக்கு சிந்தனை எப்படி இருக்கும் தெரியுமா?


எத்தனை துண்டுகளாக உடைகிறது என்பதனை பொறுத்த்து ஒரு 30 துண்டுகளை பொறுக்கிகொண்டு கவர்ணர் மாளிகைக்கு ஓடவேண்டும், நான் அப்பல்லோ சென்றால் கூட மகன் ரெடி என ஒரு உறுதிபத்திரத்தை கொடுத்துவிட்டு கோட்டைக்கு செல்லவேண்டும்


பதவி ஏற்புவிழாவில் மறக்காமல் விஜயகாந்திற்கு அழைப்பு அனுப்புவிட்டு, அன்று பழம் கனிந்து பாலில் விழாமல் போயிருக்கலாம், இன்று பழதோட்டமே பால் பண்ணையில் விழுந்து கிடக்கின்றது என ஒரு 4 பக்கம் எழுதவேண்டும்....



No comments:

Post a Comment