Friday, October 7, 2016

செய்திகள் பலவிதம்...




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதம்


அவருக்கு எப்படி கோபம் வராமல் இருக்கும்? 15 ஆண்டுகள் திமுக டெல்லியில் ஆட்சியில் பங்குபெற்று இருந்தபொழுது, எவ்வளவு அரும்பாடுபட்டு, எவ்வளவு போராடி அமைக்கபட்ட காவேரி மேலாண்மை வாரியம் அது?


அதனை திடீரென இப்பொழுது கலைத்துவிட்டு இனி வாரியம் அமைக்கபடாது என்றால் அன்னார் பொங்கமாட்டாரா? அவ்வளவு எளிதில் விட்டு விடுவாரா?





(இவர்கள் 15 வருடம் டெல்லியில் அதிகாரத்தில் இருக்கும் போது ஸ்பெக்ட்ரம், தரைவழி என பசையான துறைகளை வாங்கி சம்பாதிப்பார்களாம், காவேரி ஆணையத்தை இன்னொரு அரசு அமைக்கவில்லை என்றால் போராடுவார்களாம்

இப்படியும் சில அரசியல்கள்)









திருப்பதி கோயிலில் தமிழக‌ பக்தர்மீது காட்டுப்பன்றி தாக்கியது


தாக்கிவிட்டதா? போதும், விரைவில் கத்துவார்கள் பாருங்கள்,


" தெலுங்கு வடுகன் தமிழர்களுக்கு எதிராக பன்றியின் மனதில் கூட வன்மம் வளர்த்துவிட்டான் என் உறவே, தெலுங்கனை தாக்காத காட்டுபன்றி என் அண்ணன், தம்பியினை மட்டும் தாக்கியது எப்படி?





செம்மரகடத்தலில் தமிழரை சுடுகின்றார்கள், இதோ ஒரு காட்டுபன்றி கூட தமிழனை வெறுக்கின்றது இதனை கேட்க ஒரு தலைவன் நமக்கு இல்லை என் உறவே, பன்றிக்கு பதில் சொல்லும் ஒரு தலைவன் நமக்கு காலத்தின் கட்டாயம் என் மூத்தகுடியே...

ஒரு தமிழன் முதல்வரானால்தான் இந்த பன்றியின் அட்டகாசம் அடங்கும் அல்லது தனிதமிழ்நாடு கண்டு ஈழ சொந்தங்களோடு அந்த தெலுங்கு, வடுக பன்றியினை பழிவாங்குவோம் என் இனமே..."





முகநூல் ஒரு ஆபத்து : பாண்டே


ஆம், நான் இந்த கேள்விகளை கேட்பேன், நீங்கள் இப்படி பதில் சொல்லவேண்டும் என இவரும். நான் இப்படி பதிலுக்கு சீறுவேன் நீங்கள் கம்மென்று இருக்க வேண்டும் என சீமானும் ஒப்பந்தம் போட்டு பேட்டி எல்லாம் எடுத்தார்கள் அல்லவா?


அதனால் பேசவேண்டிய முக்கியமான விஷயங்களை விட்டுவிட்டு, பலவற்றை மறைத்து இருவரும் பேசிய பேச்சுக்கள் கொஞ்சமா?





முகநூல் அதனை தாண்டி சீமானையும், இவரையும் ஓட வைக்கும் கேள்விகளை கேட்டால் பின் எப்படி பதிவரும்

இப்படி அது ஆபத்து என்றுதான் பதில்வரும்

அவனவன் தொழிலுக்கு இடைஞ்சலாக வருவதெல்லாம் அவன் கண்ண்ணுக்கு மகா ஆபத்து என்பது பழமொழி.







"இந்நாட்டில் எந்தநேரத்திலும் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி எங்குவேண்டுமானாலும் பாதுகாப்பாக சென்று வருவதற்கான சூழலை உருவாக்க வேண்டியதும் நம் அனைவரின் கடமை" : முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்


இவரின் சில மனைவிகளில் ஒருவரான சுனந்தா புஷ்கரின் மர்ம மரணத்தில் அன்னாரின் பெயர் கடுமையாக அடிபட்டது நினைவிருக்கலாம்.


இவ்வளவிற்கும் தற்கொலை என அறிவிக்கபட்டு பின் பிரேத பரிசோதனைக்கு பின் கொலை என மாற்றபட்ட வழக்கு அது. அதன் பின் இன்னும் சந்தேக வளையத்தில்தான் இருக்கின்றார் சசு தரூர்.




இவர்தான் பெண்களின் பாதுகாப்பினை பற்றி 10 பக்கம் வாசிக்கின்றாராம்








No comments:

Post a Comment