அன்றைய திமுக ஆட்சியில் கனிம மணல் சர்ச்சை வெடித்தது, டாடா தெற்கே காலூன்ற முயன்றபோது அண்ணாச்சி அதற்கு டாட்டா காட்டிகொண்டு வெறுப்பேற்றிகொண்டிருந்தார்
கலைஞர் ஆட்சியில் ஜாபர்சேட் எனும் அதிகாரி மூலம் அண்ணாச்சிக்கு சில எச்சரிக்கைகள் விடபட்ட நேரம்.
சர்ச்சை என்றால் நமது அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா?, ஆளாளுக்கு தேரிகாடு செல்வதும், திருச்செந்தூர் செல்வதுமாக ஒரே அகதளம் செய்துகொண்டிருந்தார்கள். தினம் ஒருவர் செல்வார்கள் தினம் ஒரு அறிக்கை வந்துகொண்டிருந்தது
அன்று கலைஞர் தனக்கே உரித்தான பிரத்யோக ஸ்டைலில் ஒரு அறிக்கை விட்டார், அது இப்படி இருந்தது
"நான் சிறுவனாக இருந்தபொழுது திருவாரூர் கோயில் திருவிழாவிற்கு சுற்றுபுறத்திலிருந்து ஊர்வலமாக வருவார்கள், தினம் ஒவ்வொரு கோஷ்டி ஊர்வலமாக வந்து ஆலயத்தில் நுழையும்.
சும்மா வரமாட்டார்கள் மேளம், கொம்பு முழங்க கடும் அமர்க்களாமக சகல ஆட்டங்கக்ளுடன் வருவார்கள்
காலையிலே ஊரின் எல்லையில் காத்திருப்போம், இன்று எந்த கோஷ்டி வருகின்றது, யார் தலமையில் வருகின்றது என எதிர்பார்த்திருப்போம்,
அப்படி இன்று யார் கோஷ்டி தேரிகாட்டில் ஊர்வலம் சென்று அறிக்கைவிட போகின்றது என எதிர்பார்த்திருக்கின்றேன் உடன்பிறப்பே.."
இப்பொழுதெல்லாம் நாளைக்கு ஒரு தலைவர் அப்பல்லோ வந்து அறிக்கைவிடும் பொழுது, கலைஞரின் அந்த அறிக்கை நினைவுக்கு வருகின்றது
பாருங்கள், காலை எழுந்தவுடன் இன்று எந்த தலைவர் அப்பல்லோ வாசலில் அறிக்கை இட போகின்றாரோ என்ற நினைப்பில் மிக சரியாக பொருந்துகின்றது அன்று கலைஞர் விட்ட அறிக்கை
எக்காலத்திற்கும் பொருத்தமான அறிக்கைகளை விடுவதில் அவருக்கு நிகர் அவரே
No comments:
Post a Comment