Monday, October 10, 2016

என்ன ஊடகமோ, என்ன தர்மமோ?





5 பதிவுகள்



தமிழகத்து ஊடகங்கள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி உருப்படியாக ஒன்றும் இன்னும் சொல்லவில்லை, டாக்டர்கள் சொல்கின்றார்கள், நாங்கள் சொல்கின்றோம் என சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகின்றார்கள்.


டாக்டர்களும் அதனையே சொல்கின்றார்கள், இன்றைய நிலையில் டாக்டர்களை தவிர முதல்வரை காண்பவர்கள் யாருமில்லை என்றாலும் இன்னும் சிலர் உண்டு


அது முதல்வர் தோழி சசிகலா மற்றும் அவரின் மருத்துவ உறவினர்கள்.





இந்த ஊடகங்கள் அதாவது ராகுல் முதல் தமிழிசை வரை அப்பல்லோ சென்றுவருபவர்களை எல்லாம் பிடித்து கேள்வி கேட்கும் எந்த ஊடகமாவது, ஒரு டிவியாவது

சசிகலாவினையோ அல்லது அந்த உறவு டாக்டர்களையோ ஒரு வார்த்தை கேட்டிருக்கின்றதா? இவ்வளவிற்கும் முதல்வரை அருகிருந்து பார்த்துகொள்கின்றார் என அவரைத்தான் எழுதி தள்ளுகின்றன‌

அப்படி அருகில் இருந்து கவனித்துவிட்டு வெளியே வருபவரிடம் ஒரு வார்த்தை கேட்கமாட்டார்களாம், ஆனால் அங்கே சுற்றி திரிபவர்களிடம் கவர்ஸ்டோரி கேட்பார்களாம்

என்ன ஊடகமோ, என்ன தர்மமோ? அந்த சசிகலா கவர்னரா? அல்லது அரசின் சிறப்பு பிரதிநிதியா? அல்லது கட்சியில் அவர் பதவி என்ன?

அவரை நாலு கேள்வி கேட்க கூட தைரியமில்லா ஊடகங்களா இவை?

அன்றே விஜயகாந்து ஒரே எழுத்தில் சொன்னதுதான் சரி ,

தூ..................

இதில் வைகோ லண்டன் டாக்டரிடம் பேசி விசிட்டிங் கார்டு எல்லாம் வாங்கினாராம், பெருமைபட்டுகொள்கின்றார்

சரி இந்த சசிகலா குடும்ப டாக்டர்களிடம் கொஞ்சம் பேசி ஒரு அறிக்கை வாங்கிவிட முடியுமா? என நாம் கேட்க கூடாது, அவர் பாட்டுக்கு ஏதாவது சொல்லிகொண்டே இருக்கட்டும்

மொத்ததில் தமிழகத்தில் ஊடகம் எனும் தூண் சுத்தமாக இடிந்து ஒரு மண்கட்டையாக கிடக்கின்றது, பலர் அதில் அமர்ந்து துண்டுபீடி குடித்துகொண்டிருக்கின்றார்கள்




இன்று உலக உடல் பருமன் நாள், உடல் பருமன் பெருக்கத்தை தடுக்க தமிழகத்தில் உடனடி நடவடிக்கைகள் வேண்டும்: அன்புமணி இராமதாஸ்

யாருக்கு உடல்பருமன் வந்து, முட்டுவலி வந்து, அதன் பின் பல சர்சைகள் வந்து அது இன்று மகா மர்மாமகவே மாறி டெல்லி வரை ஆட்டிகொண்டிருக்கின்றது என தெரியாதா?

இந்நேரம் பார்த்து, உடல்பருமன் அது இது என பேசினால் என்னாகும்? அவர்கள் சும்மாவே ஒரு மாதிரியானவர்கள் ஒன்று என்றால் ஓராயிரம் அர்த்தம் எடுப்பார்கள்,

அவர் திரும்பி வரட்டும், அதன் பிறகு தெரியும், உடல் இளைப்பு என்றால் என்னவென்று

(கலைஞர் கூட இப்படி கலாய்த்தது இல்லையே.. :) )









அப்பல்லோ மருத்துவமனையின் சிகிச்சை நடவடிக்கைகளில் மத்திய அரசு வலுக்கட்டாயமாக தலையிட்டிருக்கிறது , அப்பல்லோ மருத்துவமனைக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: திருமாவளவன்

என்ன இது? இந்தியாவின் ஒரு மாநில முதல்வரின் உடல்நலத்தை சோதிக்க மத்திய அரசு குழு அனுப்பாமல், ஐ.நாவா குழு அனுப்பும்? இதில் என்ன சந்தேகம் இவர் கண்டார்?

மத்திய அரசு அதன் கடமையினை செய்வதையும் இவரின் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டுதான் செய்யவேண்டுமா?


வரவர இவர் மீதே மிகவும் சந்தேகமாக இருக்கின்றது.

(அது சரி மிஸ்டர்.திருமா ராஜபக்சேவினை சந்தித்த பொழுது, அவர் உங்களை பார்த்து இவரும் பிரபாகரனின் நண்பர், ஆனால் அங்கே இருந்திருந்தால் செத்திருப்பான் என சொல்லி சிரித்ததாக செய்திகள் வந்தது.

நீங்கள் ஈஈஈ என சிரித்துகொண்டே இருந்தீர்களாம்

இந்த முறுக்கு மீசையும், அடங்க மறு அத்து மீறு எனும் வசனமும் அன்று மறந்தே போய்விட்டதா?)






இந்த பெங்களூர் கோர்ட் வழக்கறிஞர் ஆச்சார்யா என்பவர் முதல்வரை நலம் விசாரிக்க அப்பல்லோ வந்தாரா? என்பது பற்றி எல்லாம் நாம் பேச கூடாது.

சின்ன எம்ஜிஆர் என தன்னை தானே அழைத்துகொண்ட சுதாகரன் என்பவருக்கு உள்ளே நுழைய அனுமதிமறுக்கபட்டதாம்

இந்த சுதாகரன், அப்பல்லோ என்றவுடன் எமது நினைவுகள் எல்லாம் அன்று அதே அப்பல்லோவில் மனம் நொந்த நிலையில் மரணத்தை தழுவிய சிவாஜிகணேசன் பக்கம் செல்கின்றன‌


அன்று கஞ்சா வழக்கு, சுதாகரன், சிவாஜி பேத்தி, சிவாஜி கண்ணீர் என வந்த செய்திகள் ஏதும் சொல்லி நினைவூட்டவேண்டியவை அல்ல.

அப்படியும் ஒரு கால கட்டம் இருந்தது.

நமது முதல்வர் நலம் பெற்று மீண்டு வர தொடர்ந்து பிரார்திப்போம்





 சீன கொசுறு






சீனாவில் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி.,க்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

எங்கள் நாட்டில் கொலை வழக்கு கிரிமினல்கள் எல்லாம் குலச்சாமி, இனச்சாமி, எல்லை சாமி இன்னும் பல சாமி பட்டம் போட்டு கொண்டாடபட்டு கொண்டிருக்கின்றார்கள்,

இதில் அரசியல்வாதிகள் ஊழலை எல்லாம் ஒரு கடமையாகவே எங்கள் சமூகம் ஏற்றுகொண்டாகிவிட்டது,


எதற்கும் சீனர்களே இந்தியர்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள், எங்களிடமிருந்து ஏதும் கற்று தொலைந்துவிடாதீர்கள்.

அதன் பின் ஆசியாவின் ஒரே வல்லரசும் காலி.




 


No comments:

Post a Comment