Thursday, October 6, 2016

முதல்வர் நலச் செய்திகள்...

முதல்வர் நலம்பெற்று வந்தபின் அப்பல்லோவின் நிலை என்னாகும் என்பதுதான் அவர்கள்முன் உள்ள சவால்.

தெய்வம் நலம்பெற்ற இடம், தெய்வம் ஓய்வெடுத்த இடம் என அந்த அறையினை அடிமைகள் ஒரு வழி செய்துவிடும் அபாயம் உண்டு.

இதுவரை அது எந்த அறை என ஒருவருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடதக்கது. எல்லோரும் மாடிபடியினை தொட்டு நலம் விசாரித்துவந்து வெளியே அறிக்கைவிடுவதோடு சரி.


அது எந்த அறை என்பதை பாபநாசம் கமலஹாசன் போல மனதில் ரகசியத்தை மறைத்துவைப்பதில்தான் அப்பல்லோ மருத்துமனையின் எதிர்கால நிம்மதி உள்ளது.

அது தெரியாதவரை தான் அப்பல்லோவிற்கு பாதுகாப்பு





முதல்வரை சந்திக்க முடியவில்லை : தா.பாண்டியன்

இதனைத்தானே உலகமே சொல்லி கொண்டிருக்கின்றது, எனினும் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எனும் அறிவிப்பு எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா?

இல்லாவிட்டால் இந்நேரம் எத்தனைபேர் முதல்வரிடம் பேசினேன் என கிளம்பி இருப்பார்கள்,


இப்பொழுது எப்படி மாறிவிட்டார்கள்?

அமைதிபடை காலத்தில் இந்திய துப்பாக்கிகளின் சூடு மத்தியில் இலங்கை சென்றவரையும், இறுதி ஈழபோரின் போது கொழும்பு வழியாக சென்று விமாங்களின் குண்டுவீச்சின் போது சாகசமாக பிரபாகரனை சந்தித்தவரையும் அப்பல்லோ பக்கம் காணவே இல்லை

அப்பல்லோ என்ன போர்களத்தினை விட அபாயமானதா?




 

No comments:

Post a Comment