
முதலில் ராமனே இல்லை கட்டு கதை என்றார்கள்
பின் ராவணன் தென்னாட்டு திராவிட மன்னன் என்றார்கள், ராவண காவியம் பாடினார்கள், அதாவது ராமன் இருந்ததை ஒப்புகொண்டார்கள்
பின் ராவணன் ஒரு சிவபக்தன், சைவ மன்னன், பிராமணன் என்றார்கள்.
ஆக ராமன் ஆரிய பிராமணன், ராவணன் திராவிட பிராமணன் என ஒப்புகொண்டார்கள்
இன்று ஒரு பிராமணனை கொன்ற இன்னொரு பிராமணனை கண்டித்து போராட கிளம்பிவிட்டார்களாம்
கவனியுங்கள் இவர்களின் முழக்கம் பிராமண எதிர்ப்பு .
ஒரு பிராமணன் இன்னொரு பிராமணனை கொன்றால் இவர்களுக்கு என்ன? அதனை கொண்டாட அல்லவா வேண்டும்?
ஆனால் இவர்கள் வரிந்து கட்டி போராடுகின்றார்கள்?
ஏதாவது புரிகின்றதா? புரியாது, இதுதான் பெரியாரிஸ்டுகள்
இவர்களுக்கு அந்த ராமயணத்தில் வந்த மாயமான் எவ்வளவோ பரவாயில்லை.
No comments:
Post a Comment