Sunday, October 9, 2016

அங்கிள் சைமன் சே குவேரா டி சர்ட் போட்டிருந்தாரே?

மாமனிதன் சே பற்றி எழுதினால், "அண்ணே நீங்க இப்படி சொல்றீங்க, ஆனா அங்கிள் சைமன் முன்னாடி இவர் டி சர்ட் போட்டிருந்தார், பேனர் எல்லாம் வைச்சிருக்கார்ணே..


மதுரையில் அழகிரிக்கு கூட இவர் ஸ்டைலில் பேனர் வைக்கபட்டிருந்தது


அப்போ அவர் தமிழர் இல்லியாண்ணே....அவர் புலி இல்லியாண்ணே...அது எங்கண்ணே இருக்கு புலிவியா? யாழ்பாணம் அடுத்தால இல்லியாண்ணே..


பின்ன ஏண்ணே இவர் படத்த வச்சிகிட்டு பிரபாகரன் வாழ்கணு சொல்றாங்க, பிரபாகரனுக்கும் பிடல் காஸ்டோரோவும் ஒரே குரூப்பா?"


முதலில் கலாய்ப்பதாக எண்ணினாலும் சிலர் உண்மையிலே சே குவேரா, பிரபாகரனுக்கு வாட்டர் பாட்டில் சுமந்தவன் எனும் அளவிற்கு மனதில் பதிய வைத்திருக்கின்றார்கள்


இன்னும் என்னெல்லாம் செய்யபோகின்றார்களோ அங்கிள் பாய்ஸ்.


அடுத்து மாவீரன் நெப்போலியனை ஈழத்தில் இடியாப்பம் தின்றவராக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கலாம்..

No comments:

Post a Comment