Friday, August 19, 2016

சிந்து பூபாளம்




இந்தியாவிற்கு இப்பெயர் வர காரணமே சிந்து நதி, அதுதான் இந்தியாவின் முதல் அடையாளம்


இன்று ஒலிம்பிக்கில் இந்திய அடையாளமாக பூப்பந்துபோட்டியில் ஜொலித்துகொண்டிருக்கும் சகோதரி சிந்துவினை வாழ்த்துவோம்





அது தங்கமோ, வெள்ளியோ எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் இந்த சிந்து நமது தேசத்தின் வைரம், சர்வதேச மகளிரில் இந்திய மகளிர் நிலையினையும் நிறுத்திவிட்ட மாமணி வாழ்க‌

[caption id="" align="aligncenter" width="645"]Stanley Rajan's photo. சிந்து : தங்கத்தாரகையே வெல்க வெல்க வெல்க !!![/caption]

காலிறுதியில் லிண் டன் எனும் சீனருக்கு சவால் விட்டு தோற்ற அந்த ஸ்ரிகாந்தினை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

காரணம் லிண் டான் ஒரு பூபந்த்து அரக்கன், கடந்த பல வருடங்களாக எங்கெல்லாம் பூப்பந்து நடக்கின்றதோ அங்கெல்லாம் அவர் தான் சாம்பியன். பெல்ப்ஸ் போல உசேன் போல்ட் போல அவர் மகா பெரும் முத்திரை

அவருக்கு கடும் சவால் கொடுத்தார் ஸ்ரிகாந்த், ஒரு செட்டில் அவரை வீழ்த்தியதும் அரங்கம் அதிரத்தான் செய்தது, லிண்டான் முகம் அப்படி கலங்கியது, பின்னர் பெரும் அனுபவஸ்தரான லிண்டான் இளம் வீரரான சிரிகாந்தினை மடக்கினார் எனினும் அவர் போராடிய போராட்டம் கடுமையானது

லிண்டான், அவரை எதிர்க்கும் லீ சாங் வெய் எல்லோருக்கும் இது கடைசி ஒலிம்பிக், ஆனால் ஸ்ரிகாந்துக்கு முதல் ஒலிம்பிக், அடுத்த ஒலிம்பிக் அவருக்கானது, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

இளம் வீரர்களின் எழுச்சியில் பெருமை கொள்கிறது எம் தேசம்

என்ன சொல்லுங்கள், அம்மாபெரும் அரங்கில் எல்லா நாட்டு கொடிகளும் பறக்கின்றன, ஆனால் நமது கொடியுடன் நமது வீரர்களை காணும்பொழுது ஒரு சிலிர்ப்பும், பெருமையும் வருகிறதல்லவா அதுதான் இந்திய உணர்ச்சி, இந்தியன் எனும் உணர்வு

வெற்றிமேடையில் ஒரு இந்தியன் ஏறிவிட மாட்டானா?, நாம் கரவொலி எழுப்பி ஆர்ப்பரிக்க முடியுமா? என்றொரு மகா எதிர்பார்ப்பு.

ஒரு விஷயம் கவனிக்க முடிகின்றது, சூராதி சூரர்கள் நிரம்பிய இஸ்ரேல் ஒலிம்பிக்கில் பெரும் பதக்கம் குவிக்கவில்லை ஏன்? என்றால் அவர்களோ கள்ள சிரிப்பு சிரிக்கின்றார்கள்.

காரணம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் என பல நாடுகளில் பதக்கம் குவிக்கும் வீரர்களில் பல யூதர்களும் உண்டு, எல்லா நாட்டின் குடிமக்களாகவும் அவர்கள் குவிக்கின்றனர். இஸ்ரேல் வேறு தனியாக குவிக்கவேண்டுமா? நாம் அரேபியாவில் துப்பாக்கி சுட்டு விளையாடி, குண்டு வீசி விளையாடி கொன்றுகுவித்து விளையாடுவோம் என்பது அவர்கள் கொள்கை, இருக்கட்டும்

சிந்து வாழ்த்துகுரியவர் பதக்கம் உறுதி செய்துவிட்டார். சிந்து தொடங்கி வைத்திருப்பது பூபாளம், சிந்து பூபாளம் :)

சிந்து செய்திருப்பது பெரும் சாதனை, ரப்பர் பந்தாக துள்ளி எழும் ஜப்பானிய வீராங்கனையினை சாய்ப்பது பெரும் விஷயம், ஆச்சரியமும் கூட. திறமைதான் ஆச்சர்யத்தின் திறவுகோல் என்பதால் அது சாத்தியமாயிற்று, மனதார வாழ்த்தலாம்.

கொஞ்சநாட்களாக பேட்மிட்டன் கோப்பைகள் ஆசியாவினை சுற்றி வருவதால் ஸ்பெயின் வீராங்கனையினை தட்டி அவர் தங்கம் பறிப்பதும் சாத்தியமே.

[caption id="" align="aligncenter" width="634"]Stanley Rajan's photo. ஶ்ரீகாந்த்[/caption]

சிறப்பு வாழ்த்துகுரியவர் யாரென்றால் நிச்சயம் ஸ்ரிகாந்த், காரணம் லிண் டான் எனும் முரட்டு புலியினை தகிக்க வைத்தவர் அவர், கடுமையாக திணறடித்தவர் அவர்

இந்தியாவெங்கும் சிந்து பூபாளம் பாடும் இந்த நேரத்தில், நிச்சயம் கொண்டாடபட்டு ஊக்குவிக்கபடவேண்டியர் ஸ்ரிகாந்த் என்பதில் மாற்றுகருத்தில்லை

அலெக்ஸாண்டரிடம் தோற்ற போரஸ் போல அது பெருமையான தோல்வி, ஆயிரம் தங்கபதக்கங்களுக்கு சமம்.
















No comments:

Post a Comment