Wednesday, August 10, 2016

சிதறல்கள்



இந்த எவிடென்ஸ் உன்மை அறியும் குழு, அந்த குழு, மலையினை கண்டறியும் குழு, மண்புழு கண்டறியும் குழு எல்லாம் சுவாதி கொலை இன்னபிற சம்பவங்களில் களமிறங்கியது இதுதான் உண்மை, சொல்வதெல்லாம் உண்மை என சொன்னார்கள்


இந்த ரயில் கொள்ளைக்காவது களமிறங்கவேண்டாம், சசிகலா புஷ்பா மீது குவியும் வழக்குகளில் ஒன்றிற்காவது இது பொய் வழக்கு என உண்மை கண்டறியலாம் அல்லவா?


(அப்படி செய்தால் அதன்பின் அமைப்பே இருக்காது என்பது வேறு விஷயம்)





எனினும் இது பற்றி எல்லாம் நாம் பேச கூடாது,





பஞ்சு அருணாசலம் மரண செய்தி மனதை பாதித்தது, கொஞ்ச நேரம் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்துகொண்டிருந்தேன்.


கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் என ஒரு கட்டுரை எழுதியிருந்தார், அதில் சொன்னார். நான் சில இடங்களில் பாடல் எழுதிய வரி அப்படியே சிலருக்கு பொருந்திற்று


உதாரணம் நடிப்பிசை புலவர் டி.ஆர் மகாலிங்கத்திற்கு எழுதினேன்
"விடியும் விடியும் என்றிருந்தோம்
முடியும் பொழுதாய் விடிந்ததடா
நம் குலமும் குடியும் ஓய்ந்தத்டா"




அதோடு அவர் பெரும் சிக்கலுக்கு ஆளானார்.


இதனை வாசித்து கொண்டிருந்தபொழுதே டிவியினை பார்த்தால் ஒரு அன்னை பாடிகொண்டிருந்தார்


"இன்ப மலர்கள் பூத்து குலுங்கும் சிங்கார தோட்டம்


நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம் ஒரே கொண்டாட்டம்"


அந்த காட்சியினை பார்த்ததும், கண்ணதாசனின் வரிகள் மறுபடியும் ஞாபகத்துக்கு வந்தன, இதுவும் பலித்திருக்கலாம் என உதட்டோரம் ஒரு புன்னகையும் வந்தது.


காரணம் பாடிகொண்டிருந்தது நடிகை சந்தியா, முதல்வர் ஜெயலலிதாவின் அன்னை சந்தியா :)



No comments:

Post a Comment