Monday, August 8, 2016

சிதறல்கள்

சசிகலா புஷ்பா மகன் பாலியல் தொந்தரவு அளித்ததாக எஸ்.பி.யிடம் பெண்கள் இருவர் நேரில் புகார்


வழக்குகள் குவியும் வேகத்தை பார்த்தால் தென்னகத்து பூலான் தேவி அளவிற்கு பயங்கர தோற்றம் சசிகலா புஷ்பா மீது படியும் போலும், இன்னும் என்னவெல்லாம் வழக்குகள் பாயுமோ.


சந்தடி சாக்கில் துணிகடையில் சேலை திருடிய வழக்கு, கல்யாண மண்டபத்தில் குழந்தை கொலுசு திருடிய வழக்கு, இட்லி சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் ஏமாற்றிய வழக்கு என பல வழக்குகள் பாயலாம்.





மீன்கடை மளிகை கடை உரிமையாளர்கள் எல்லாம் இனி வழக்கு சொல்வார்கள், அவ்வளவு ஏன் ஊறுகாய்க்கு காசு தரவில்லை என சிலர் கிளம்பினாலும் கிளம்பலாம்.

யாரோ ஒரு வழக்கறிஞருக்கு சுக்கிர திசை தொடங்கும் காலம்





எதிர்பார்த்தது போலவே ஒலிம்பிக்கில் அமெரிக்கா சீனா இடையே முதலிடத்திற்கான போட்டி நிலவுகின்றது, மாறி மாறி ஆதிக்கம் செலுத்துகின்றனர்


குட்டிநாடான வியட்நாம், நேற்று பெய்த போர் மழையில் முளைத்த சிறு காளானான கொசவா எல்லாம் தங்கபதக்கம் வாங்கிகொண்டிருக்கின்றன, நிச்சயம் ஆச்சரியம்


நமது பிரதமரோ தலித்துக்களை தாக்காதீர்கள், என்னிடம் குத்து சண்டைக்கு அல்லது முதுகில் குத்த வாருங்கள் என அழைப்பு விடுத்துகொண்டிருக்கின்றார்





ஒலிம்பிக் என்பது உலக விளையாட்டு, ஆனால் நமது உலகமோ தனி.





ஏழ்மையில் வாடும் தலித் சகோதர சகோதரிகளை தாக்க வேண்டாம் என பிரதமர் மோடி பேசினார்.


ஒரு பிரதமர் இப்படி பேசியிருப்பது மிக நல்ல விஷயம், ஒரு அதிகாரமிக்க பதவியிலிருப்பவரிடமிருந்து இப்படி ஒரு நம்பிக்கையான வார்த்தைகள் வந்திருப்பது வாழ்த்துகுரியது


அவர் கட்சியின் கொள்கைகள் என்ன மண்ணாங்கட்டியாகவும் இருந்து தொலையட்டும், ஆனால் ஒரு பிரதமராக பண்பட்ட வார்த்தைகளை அவர் பேசுகின்றார், நாட்டின் அமைதிக்கும் சமூக வளப்பத்திற்கும் வேண்டுகோள் விடுக்கின்றார்.





கவனித்து பாருங்கள், நாடு முழுக்க சில சர்ச்சைகள் அமைதியாகின்றன, ராமர் கோயில் சத்தம் அதிகமாக இல்லை, கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் அடங்கியே விட்டது, இன்னும் ஏராளமான சில்லறை சத்தங்கள் இல்லை. ஒரு பக்கம் பல குரல்கள் அடக்கபட்டே வருகின்றன.

இந்த மோடியின் சாடல், எல்லா இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும், அவர் அருகில் இருந்து பொறுப்பற்ற பேச்சுக்களை பேசும் எல்லோருக்கும் பொருந்தும்.

ஒரு இந்திய குடிமகனாக சல்யூட் மோடி,

வந்தே மாதரம்





"நெருக்கடி நிலை காலத்தில் என்னை கொல்ல இரண்டு முறை முயற்சிகள் நடந்தது,


நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது உடனடியாக எடுக்கப்பட்ட முடிவு இல்லை. சோவியத் யூனியனுடன் சேர்ந்து எதேனும் செய்ய இந்திரா திட்டமிட்டிருக்கலாம் ": சுப்பிரமணியன் சாமி


இதன் மூலம் அய்யா சொல்ல வருவது இதுதான், அந்நாளில் சோவியத் யூனியனுடன் காங்கிரஸ் அரசு நெருக்கமாக இருந்தது இவருக்கு அறவே பிடிக்கவில்லை




இவருக்கு அமெரிக்கா ஏன் பிடித்தது என்பது பற்றியும் இவர் ஒன்றும் சொல்லவே இல்லை, இவ்வளவிற்கும் அமெரிக்காவினை விட இந்தியாவிற்கு நெருக்கமான நாடு ரஷ்யாவே,


அன்னார் அமெரிக்க சார்பராகி இன்றுவரை ரிசர்வ் வங்கி கவர்னர் வரை அமெரிக்க அடிவருடி போலவே செயல்படுகின்றார், ராஜிவ் கொலையிலும் சில சர்ச்சை இவர்மேல் உண்டு.


இவரை யாரோ கொல்ல முயன்ற நேரம் நெருக்கடி நிலை காலம், அதாவது அந்த காலத்திலிருந்தே வம்பு பேசி கொலை மிரட்டல் வாங்குவதுதான் இவரின் பொழுதுபோக்கு மற்றும் தொழில்.


கொலை மிரட்டல் விடுத்தது ஒருவேளை சொந்த வீட்டுக்காரர்களாக கூட இருக்கலாம் அல்லவா? இவர் எங்கே சும்மா இருப்பார்?



No comments:

Post a Comment