Thursday, August 11, 2016

துப்பாக்கி சுடும் போட்டி என்றால் என்ன?




போரின் முடிவில் ஒரு ராணுவத்தை சிறைபிடிக்கும்போது மொத்தமாக கொல்லமாட்டார்கள், யாராவது விவரம் உள்ளவன் இருந்தால் அவனை பயன்படுத்திகொள்வார்கள்.


ஹிட்லரின் எஞ்சிய குழுவினை அமெரிக்காவும், ரஷ்யாவும் அப்படி பங்கிட்டுத்தான் விஞ்ஞானத்தில் உச்சம் தொட்டன, அவர்கள் போர் குற்றவாளிகள் எல்லாம் கிடையாது.


"சரக்கு உள்ளவனுக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு"





அப்படி புலிகள் அகபட்டபொழுது இலங்கை அரசும் போராளிகளின் திறமை என்ன என கண்டறிய விசாரித்தது, குறிதவறாமல் சுடும் போட்டியில் தாங்கள் பெரும் திறமையாளர்கள் என்றும், சில சுடுதலை கண்ட மேதகு தலைவர் தங்களுக்கு காசி ஆனந்தனோடு விவாதித்துவிட்டு "தேசத்தின் துவக்கு" எனும் பட்டம் கொடுத்ததாகவும் சொன்னார்கள்

கொஞ்சம் யோசித்த இலங்கை அவர்களை ஆசிய விளையாட்டுபோட்டிக்கு அனுப்பியது. தமிழர்களுக்கு இடமளித்து சர்வதேசத்தில் மரியாதை பெற்றாயிற்று, பிரபாகரனால் உருவாக்காப்ட்ட வீரர்கள் பதக்கத்தோடு நிச்சயம் வருவார்கள் என்ற‌ நம்பிக்கை வேறு, ஒரே கல்லில் இரு மாங்காய்

ஆனால் அங்கு சென்றபின்புதான் வீரர்களுக்கு உண்மையான துப்பாக்கி சுடும் போட்டி என்றால் என்ன என்று புரிந்தது,

உலகம் எப்படி இருக்கிறது என்றே அன்றுதான் பார்த்தார்கள், அந்த ஆனந்தத்தில் சுட்டார்கள்,

சரியாக இலக்கினை தாக்கியது, ஆனால் தூரத்தில் இருந்த அடுத்தவன் இலக்கினை

அதோடு அவர்கள் இலங்கைக்கு அனுப்பபட்டனர், இப்படித்தான் பயிற்சி பெற்றீர்களா? எவ்வளவு பயங்கரமான கதைகளை எல்லாம் கேட்டிருக்கின்றோம், பயந்திருக்கின்றோம், இவ்வளவுதானா? நீங்களே தேசத்தின் துவக்கு என்றால் மற்றவர்கள்? என கன்னத்தில் கைவைத்தபடி இருந்தனர் இலங்கை அதிகாரிகள்

வன்னிகாட்டில் நாங்கள் சுடுவோம் மொத்தமே 10 பேர்தான், இது என்ன இப்படி கடுமையான போட்டி, சீ இது என்ன கொடுமை, தமிழனின் வீரம் தமிழனிடம் மட்டும் காட்டினால் போதும் எனும் வகையில் அமைதியாக இருந்தனர் வீரர்கள்

அதன் பின் போராளிகளை பொறுக்கி எடுக்கும் எண்ணத்தை விட்டுவிட்டது இலங்கை அரசு, அதோடு புலிகளின் நீச்சல் சாகசம், உயரம் தாண்டும் சாகசம் செய்தவர்கள் என தேர்ந்தெடுத்து வைத்தவர்களை கூட அனுப்பிவிட்டார்கள்.

ஆனால் அங்கிள் சைமனிடம் கேளுங்கள், வாயில் துண்டை வைத்தபடி பார்த்து கொண்டிருப்பீர்கள், அப்படி அள்ளி விடுவார்.







No comments:

Post a Comment