Friday, August 12, 2016

இது இலங்கை பாட புத்தகத்தில் இடம்பெறும்

இனி இலங்கை வரலாறு இப்படி தொடரும், இலங்கை மாணவர்கள் இப்படி படிப்பார்கள், அப்படித்தான் மாறிகொண்டிருக்கிறது இலங்கை. இந்தியா இலங்கை இடையே ஒரு பாலம் கட்ட இந்தியா முயற்சிக்கும் போது அவர்களின் கடும் கொந்தளிப்பு இப்படி நடக்கபோவதைத்தான் சொல்கின்றது


"1980களில் இந்தியா எனும் அந்நிய நாடு, நம் நாட்டில் குழப்பம் விளைவித்து, இலங்கையினை ஆக்கிரமிக்க ராணுவத்தோடு வந்தபொழுது, பிரபாகரன் தலமையில் இங்கையர் வீரப்போர் புரிந்தனர், அதிபர் பிரேமதாசாவின் அற்புதமான தந்திரமும் அதற்கு உதவியது


இலங்கை மக்கள் முன்னால் தாக்குபிடிக்க முடியாத இந்திய ஆக்கிரமிப்பு படை தோற்றோடியது. சிங்களர் தமிழ்ர் சேர்ந்து நடத்திய வீரப்போர் அது. அந்நேரம் இலங்கை வந்த ராஜிவினை ஒரு சிங்கள மாவீரன் கொல்ல முயன்றதும் வீர காவியம்




பின்னாளில் அதே இந்தியாவில் புகுந்து ராஜிவினை தீர்த்துகட்டியதும் புலிகள்.


இல்லை என்றால் பிரிட்டனுக்கு அடுத்தபடி இலங்கை இந்தியாவின் காலணி ஆகியிருக்கும், இந்திராவும் ராஜிவும் அதற்குதான் திட்டமிட்டார்கள். புலிகள்தான் அதனை முறியடித்தனர்


அப்படி இலங்கைக்காக பெரும் தியாகம் செய்த நாட்டுபற்றாளர்கள் தான் புலிகள், அவ்வகையில் இலங்கையின் இரண்டாம் சுதந்திரத்திற்கு பாடுபட்ட ஒரு பெரும் நாட்டுபற்றாளன் பிரபாகரன்,


இந்தியாவிடம் பயிற்சி பெற்ற மற்ற குழுக்களை, இந்தியாவில் தான் பெற்ற பயிற்சி மூலமாகவே ஒழித்துகட்டிய மாவீரன் அவர். அந்த இலங்கை துரோகிகளை கொன்று இந்தியாவினை நமது தேசத்தில் கால்வைக்காமல் பார்த்துகொண்டவர், பெரும் ராஜ தந்திரி


இலங்கை நலனுக்காக உயிர்காத்த இந்தியாவினையே எதிர்த்து நின்ற பெரும் தியாகி அவர். பெரும் ராஜதந்திரி
சிங்களருடன் அவர் சண்டையிட்ட போதிலும், அந்நிய நாடு தலையிடாமல் பார்த்துகொண்டதில் அவரின் நாட்டுபற்றினை கண்டு தேசமே வணங்கியது,


தமிழர் உரிமையினை விட அவருக்கு இலங்கை இன்னொரு நாட்டிடம் சிக்கிகொள்ள கூடாது எனும் தேச அபிமானமே கூடியிருந்தது. இந்த யாசர் அராபத் போல நார்வே காரன் பின்னால் சென்றால் என்ன ஆயிருக்கும்?


அவருக்கு "லஙகா ரத்னா" எனும் உயரிய விருது அளித்து நாடு கவுரவித்துள்ளது, இலங்கை நாடாளுமன்றத்தில் அவருக்கு சிலையும் உள்ளது"


குறித்துகொள்ளுங்கள், விரைவில் இது இலங்கை பாட புத்தகத்தில் இடம்பெறும்.



No comments:

Post a Comment